சான்றோர் பழிக்கும் வினை

சாலை விபத்துகளில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா முதலாவதாக உள்ளது. உலகில் பாதுகாப்பற்ற சாலைகள் இந்தியாவில் தான் அதிகம் என்கிறது ஜெனீவாவில் உள்ள உலக சாலை கூட்டமைப்பு. இந்தியாவின் விபத்துப் பட்டியலில் முன்னணியில் உள்ளது தமிழகம். அதுவும், குறிப்பாக 18 வயதுக்கு மேல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள்தான் அதிகம் உயிா் இழப்பவா்கள். இவா்கள் அனைவருமே குடி போதையில் வாகனம் ஓட்டியவா்கள்.

அன்றே சொன்னார் பாபா சாகேப் அம்பேத்கர்!

1947இல் இந்தியா மதரீதியாகப் பிளவுபட்டது. அப்போது,  ‘நாட்டு மக்களை மத அடிப்படையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்’ என்று சொன்னார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அதை அப்போதிருந்த அரசுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதன் கொடிய விளைவையே பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இன்றைய ஹிந்துக்கள் பரிதாபமாக அனுபவிக்கின்றனர் என்கிறார் திரு. டி.எஸ்.தியாகராஜன். இக்கட்டுரை, ‘தினமணி’யில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

‘தந்தை பெரியார்’ வாழ்க!

இந்திய விடுதலைக்காக உழைத்த உத்தமர்; எதிர்கால இந்தியா எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சிந்தனையாளர்; சமூகம் உயர சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த முன்னோடி; கல்வியே முன்னேற்றும் என்று அறிந்து பல்கலைக்கழகம் அமைத்த பெருமகன்; அறிவுத் திறத்தால் ஆங்கிலேயரையும் வசப்படுத்திய இதழாளர்- பண்டித மதன்மோகன் மாளவியாவை ’தந்தை பெரியார்’ என்று கட்டுரையாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன் போற்றுகிறார். ஏன்? படியுங்கள், விடை கிடைக்கும்....

அன்புஜோதியின் அவலமான பின்னணி

“சைவ உணவு விடுதி” என்ற பெயர் தாங்கிய நிறுவனத்தில் புலால் சமைத்துப் பரிமாறப்படுமானால் எப்படி பெயர் பொருத்தம் இல்லையோ, அது போன்றே காப்பகத்தின் பெயருக்கும், அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நிலையில் கடந்த 17 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் கொடுமைமிகு காப்பகம் இயங்கி வந்திருக்கிறது.....

மன்னுயிர்  எல்லாம் தொழும்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகம் அடைந்து வரும் சிரமங்களையும், உக்ரைன் மக்கள் அடைந்துள்ள வேதனைகளையும் சுட்டி, அதன் பின்புலத்தில் உள்ள சுயநல உலக அரசியலையும், எளிய தீர்வையும் முன்வைக்கிறார், எழுத்தாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன்....

அபூர்வ மனிதர்  தரம்பால்

பண்டைய இந்தியாவின் கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து அற்புதமான ஆய்வுநூல்களை அளித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் தரம்பால். அவரைப் பற்றி திரு. டி.எஸ்.தியாகராஜன் எழுதிய அறிமுகக் கட்டுரை இது....

பிரித்தலும் பேணிக் கொளலும்

உண்மையில், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் போது நாடார் சமூக மக்கள் நாடாழ்வான் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கரூர் பசுபதீஸ்வரர் கல்வெட்டில் “ஜெயமுரி நாடாழ்வான்” என்பவர் 1053-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கு படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

அசலும் போலியும்

ராணுவத்தினர் நலம் காக்க அரசு விழா எடுக்கும் கொடி நாளின் வசூல் எவ்வளவு தொகை? புகழ் பெற்ற நடிகர் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கேட்கும் ஊதியத்தின் தொகைக்கு பக்கத்திலாவது நிற்குமா? ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் ராணுவ வீரர் தான் அசல். மற்றோர் கதாநாயகர்கள் வேடத்தில் தோன்றும் நபர்கள் போலிகள்.

பிச்சை புகினும் கற்கை நன்றே!

கல்வி குறித்தும், கற்பதன் அவசியம் குறித்தும் கல்வி நலன் இல்லையாயின் எவரும் உலகில் மதிப்புடன் வாழ இயலார் என்பதை அற்றை நாள் அரசர்கள் அறிஞர்கள் முதற்கொண்டு இற்றை நாள் மாந்தர்வரை பலப்பட சொல்லியுள்ளார்கள். “எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடியில் கற்றோரே மேல் வருக” என்கிறது வெற்றி வேட்கை.

நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்   

1947-க்குப் பிறகு கல்விச் சாலைகளின் பாடத்திட்டங்களில் பாரதத்தின் முன்னைய நாளின் வீர, தீர மன்னர்கள், தாய் மண்ணைக் காக்கப் போராடிய வீர புருஷர்கள், வந்தேறிய பகையாளர்களை உயிர் உள்ள வரை எதிர்த்து நின்ற வணங்கா முடியரசர்களை விஞ்ஞான, மெய்ஞான நுட்பங்களைக் கற்றறிந்த முன்னோர்களை அடையாளம் காட்டி இளைஞர்களை உருவாக்கத் தவறிவிட்டோம்....

கவலைகள் பலவிதம்

வ.உ.சி. சிறை புகுந்த போது அவரது மனைவி மீனாட்சி அம்மாளின் வயது 19.  இரு மகன்கள், வயதான மாமனார், மாமியார் அண்ணனுக்கு சிறைத் தண்டனை என்று கேட்ட மாத்திரத்திலேயே சித்தம் கலங்கிப் பித்தரான கொழுந்தன்.  தான் சம்பாதித்த அளவற்ற செல்வத்தை பொதுநலன்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் வழங்கிய கொடையில் கர்ணனுக்குச் சமமான கீர்த்தி பெற்ற வ.உ.சி.யின் குடும்பம் வறுமையில் உழன்றது....

பெரியாரைப் போற்றுதும்!

பாரதியாருக்கு தேசிய உணர்வை ஊட்டி, அவரது பணிக்கு உரமும் சேர்த்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் எனில் சற்றும் மிகையல்ல. ஐயரவர்களின் சிந்தனை  சமூகத்தின் அவலங்கள். தீண்டாமைக் கொடுமைகள் குறித்து எப்படி இருந்தன என்பதை 1920-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் சுவாமி விவேகானந்தர் சொல்லிய சொற்களை வார்த்தை பிசகாது தனது பத்திரிகையில் பதிவு செய்தது மூலம் நன்கறியலாம்.

அந்நியா்களா அந்தணா்கள்?

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரான திரு. டி.எஸ்.தியாகராஜன் ‘தினமணி’ நாளிதழில் எழுதியுள்ள, நமது மனசாட்சியை உலுக்கும் கட்டுரை இது…