இனவாதச் சாக்கடையில் உழலும் கம்யூனிஸ்டுகள்

கம்யூனிஸ்டுகள் குறுங்குழு இனவாதச் சாக்கடையில் உழலும் அவலம், தமிழ்நாட்டில் மட்டுமே நடப்பது. இது மார்க்ஸையும் லெனினையும் அவமானம் செய்வது. அறிவுள்ள கம்யூனிஸ்டுகள் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.

திருந்துமா திமுக?

அன்றாட அரசியலில் பொருள்புதிது தளத்திற்கு ஆர்வம் இல்லை. ஆனால், தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு கருத்தாக்கம் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் முட்டாள்தனமாக உளறிய தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரின் அசூயையான ஹிந்து வெறுப்புணர்வுப் பேச்சு அதற்கான எதிர்வினையைப் பெற்று, அவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். இனி திமுக என்ன செய்யப் போகிறது? பிரம்மரிஷியாரின் அற்புதமான கருத்தோட்டம் இதோ…

தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்    

நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமே செய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம். மற்ற தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம்  (அதாவது, நான்கு வர்ணங்களென்ற வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது.

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒரு கொள்கை என்பதென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்க வேண்டும்.