சிவகளிப் பேரலை- 16

“விதியையும் விதித்தென்னை விதித்திட்ட மதியையும் விதித்து அம்மதி மாயையிற் பதியவைத்த பசுபதி நின்னருட் கதியை எப்படிக் கண்டு களிப்பதே” என்று தாயுமானவர் வினவியுள்ளார். அதற்கு பதில் அளிப்பதைப் போல, சிவனின் கடாட்சம் (கடைக்கண்) பட்டால் போதும் அவரோடு இணைகினற அருட்கதியைக் கண்டுகளிக்கலாம் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 15

     உயிர்களின் தலைவனாகிய பசுபதியே, உனக்கு என் மீது என்ன வெறுப்பு? அவ்விதம் வெறுப்பு இல்லையென்றால், என்னைக் காப்பாற்றும் விஷயத்தில் ஏனிப்படி பாராமுகமாய் இருக்கிறாய்? கெட்ட ஆசைகள் நிறைந்ததாயும், உன்னைத் தொழுது நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் எனது மனது உழல்கின்றதே? இவ்வாறான மனது எனக்குக் கிடைக்கும்படியாகச் செய்த பிரம்மன் எழுதிய தலையெழுத்தை நீ ஏனய்யா போக்கவில்லை?

இன்றைய இந்தியாவின் முகங்கள்- 7

18 ஆயிரம் அடி உயரத்தில் எதிரி. அங்கிருந்து ஆளுக்கொரு தோட்டா என்று துல்லியமாகக் கொல்ல முடிந்தது. அந்தக் கடினமான சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மலை மீதேறி எதிரிகளை வேட்டையாடிய இந்திய வீரர்களின் அபாரமான செயலைக் கண்டு உலகமே வியந்தது. இது நடந்தது 1999-இல் கார்கிலில்.  அந்தப் போரை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியவர் இந்திய ராணுவ தளபதியான ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக். அதன் பிறகு பல நாடுகளில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் ‘கார்கில் விஜயம்’ ஓர் அங்கமாக மாறியது....

சிவகளிப் பேரலை- 14

உலக உயிர்களின் (பசுக்களின்) தலைவனாக (பதியாக) இருப்பவர் சிவபெருமான். அவரே நம்மை ஆளும் பிரபு. அந்தப் பிரபு, எளியவர்களாகிய பக்தர்களுக்கு மிகச் சிறந்த உறவினர். ஆகையால், அந்தச் சிவபெருமானிடம், நீ உறவு கொள்ளத்தக்க மிகவும் எளியவன் நான் என்று நமக்காகக் கூறுகிறார் ஆதிசங்கரர். நமது உறவு, விளக்கிக் கூற இயலாதது, உரைகளில் அடங்காதது என்றும் கூறுகிறார்....

எனது முற்றத்தில் – 5

மதுரை வட்டாரத்தில் மக்களின் குல சாமி மதுரைவீரன். மதுரையை  அடுத்த மேலூரில் உள்ள மதுரைவீரன் கோயில்,  சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஊர் மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள். கோயிலைத் தொடாமல் சாலை விரிவாக்கம் நிறைவேற வேண்டுமானால் நூறு வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.  மக்கள் துளிக்கூட தயங்காமல் தங்கள் வீடுகளை இடித்து சாலைக்கு வழி விடுவதாக அறிவித்ததோடு நில்லாமல் தங்கள் வீடுகளை இடிக்கவும் தொடங்கினார்கள். தங்களுடைய குல சாமி கோயில் மீது யாரும் கைவைக்கக் கூடாது என்பது அந்த தியாக மூர்த்திகளின் திட உறுதி....

சிவகளிப் பேரலை- 13

தோன்றி மறையக் கூடிய இந்த வாழ்க்கையை நிலையானது என்றும் நிஜமானது என்றும் நினைத்துக்கொண்டு குருட்டுத்தனமாகச் செயல்படுவதால், பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட குருடர்களில் ஒருவனான என் மீது சிவபெருமானே உனது கருணையைப் பொழிந்துவிடு என்று நமக்காக வேண்டுகிறார் ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 12

பக்தி செய்வதற்கு எது உகந்த இடம்? குகையா? வீடா? இல்லையேல் காடா? மலையா? எது சிறந்த இடம்? ஆழமான நீர்நிலையில் நின்று கொண்டோ, தன்னைச் சுற்றி தீயை வளர்த்துக்கொண்டோ கடுமையாகத் தவம் புரிவது சிறந்ததா? இல்லையில்லை. பக்தி இல்லாமல் இவ்வாறு செய்வதால் எந்தப் பயனுமில்லை.

சிவகளிப் பேரலை – 11

ஒரு பக்தன் எந்த நிலையில் இருந்தாலும், சிவன் மீதான பக்தி ஒன்று போதும், பிறவிச் சுமையில் இருந்து எளிதில் விடுபடுவான். பிறவித் தளையில் இருந்து விடுபட இந்த ஆசிரமம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை. உண்மையான பக்தி ஒன்று போதும்...

சிவகளிப் பேரலை- 10

மனிதப் பிறவியோ, அதனைவிட மேலான தேவப் பிறவியோ, அல்லது மலை மற்றும் காடுகளில் உழல்கின்ற மிருகப் பிறவியோ, மிகச் சிறிய கொசு வடிவோ, வீட்டு விலங்கோ, புழுவோ, பறவை முதலிய பிறவியோ எந்தப் பிறவி வேண்டுமானாலும் கிடைக்கட்டும். எப்படிப்பட்ட பிறவி எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, எந்தப் பிறவியானாலும் எந்தை சிவபெருமானை மறவாத மதி வேண்டும் என்பதே முக்கியம்....

சிவகளிப் பேரலை- 9

சிவபெருமான் எவ்வளவு பெரியவரோ அந்த அளவுக்கு எளிமையானவர். தெளிந்த மனம் போதும் அவரை உபசரிக்க; அழகும், மணமும் நிறைந்த பூக்கள் அவசியமில்லை....   

எனது முற்றத்தில்… 4

எல்.கே.அத்வானி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தபோது இந்தோனேஷியாவில் இருந்து வந்த ஒரு கலாச்சாரக்  குழுவினர் அவரைச் சந்தித்தார்கள். அனைவரும் முஸ்லிம்கள். அதெப்படி ராமாயண நாட்டிய நாடகம் எல்லாம் நடத்துகிறீர்கள் என்று அத்வானி கேட்டபோது "நாங்கள் மதம் மாறியிருக்கலாம்; ஆனால் எங்கள்  மூதாதையர்களை மாற்றிக் கொள்ளவில்லை. ராமர் எங்கள்  மூதாதை" என்று விளக்கினார்கள்.  இந்தோனேசிய அரசே  கரன்சி நோட்டில் கணபதி படம் அச்சிட்டு வருகிறது; கருடா ஏர்வேஸ் என்று தனது விமானக் கம்பெனிக்குப் பெயர் என ஹிந்து அடையாளங்களை விருப்பத்தோடு ஏற்கிறது. அந்த நாட்டு மக்கள் மனதில் ஹிந்து என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளும்படி சொல்லும் விஷம் எப்படி பரவும்?... 

சிவகளிப் பேரலை- 8

சிவரூபம்தான் இறைத்தன்மையின் உச்சநிலை என்பதை இங்கே மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.... முழுமையான ஞானம் இல்லாத காரணத்தால் ஏற்படுகின்ற மனமயக்கம் காரணமாக, மூடர்கள், அனைத்திலும் மேலான, ஒப்பும் உயர்வும் அற்ற இறை வடிவமான சிவத்தை நினைக்காமல், மற்ற தெய்வங்களை நாடுகிறார்கள் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 6

சொத்து என்பது இறைவன் கொடுத்தது. அதை அப்படியே தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு போவதற்காகக் கொடுக்கவில்லை. சொத்தின் வலிமையே அதை பிறருக்குக் கொடுப்பதில் தான் உள்ளது என்று கூறுகிறார் மோகன்தாஸ் பை. இவர் சேர்த்ததை விடவும் அதிகம் இவர் கொடுத்தது... 2000-ஆம் ஆண்டில் இஸ்கான் உடன் இணைந்து இவர் செயல்படுத்தியது ‘அக்ஷய பாத்திரம்’ திட்டம். இத்திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுகிறது.

சிவகளிப் பேரலை- 7

அனைத்தும் அவன் செயல் என்பதை அறிந்துகொண்டு, அனைத்துச் செயல்களையும் அவன்பாலே செய்துவிட்டால் பாவ - புண்ணியம் எவ்வாறு நம்மைப் பற்ற முடியும்? நினைப்புதான் நம்மை உயர்த்துகிறது. நினைப்புதான் நம்மைத் தாழ்த்துகிறது. அந்த நினைப்பேயே இறைமயம் ஆக்கிவிட்டால், உலகியல் செயல்களுக்கு நாம் இரையாக மாட்டோம்....

சிவகளிப் பேரலை- 6

தர்க்கவாதத்திற்குப் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிசங்கரர், பக்திக்கு முன்பு எந்த வாதமும் எடுபடாது, சிவபக்தி ஒன்றே போதும் என்று இங்கே கூறுகிறார். ஞானம் இறைவனோடு ஐக்கியத்தை ஏற்படுத்தினாலும், அது முழுமையடையும் வரையில், தான் என்ற நினைப்பு கூடவே இருக்கும். ஆனால், கனிந்த பக்தியில் தன்னைக் கரைத்துக்கொண்டு இறைவனே எல்லாம் என்பதால், தான் என்ற அகம்பாவம் அடிப்படையிலேயே காணாமல் போய்விடுகிறது.