ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பொதுச் செயலாளராக இருந்த உயர்திரு. ஹொ.வெ.சேஷாத்ரி (1926- 2005), ஹிந்துத்துவ சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த இக்கட்டுரை, ஆங்கிலப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ மாத இதழில் (1993 ஆகஸ்டு) வெளியானது. பிற்பாடு ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘விஜயபாரதத்தில்’ வெளியானது. இதை தமிழில் வழங்கி இருப்பவர், திருநின்றவூர் கே.ரவிகுமார்.
Author: vamumurali
தராசு கட்டுரைகள்- 13
தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்திலிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற சந்தேகத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்....
ஆன்மநேயம் கண்ட அருளாளர்
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(4)
கடைசியில் வெள்ளைக்காரர்களுக்கு சுல்தான் செய்த மாபெரும் தவறு ஒன்று கண்ணில் பட்டது. அது, சுல்தான் தனது அயோத்தியை செழுமையாகவும், நல்ல வளத்தோடும் வைத்திருந்த குற்றம் தான். ஒரு இந்திய அரசன் இப்படிப்பட்ட வளம் பொருந்திய நாட்டை, நாம் இங்கு இருக்கும்போது ஆள்வதா? கூடாது. 1856-ஆம் வருஷம் டல்ஹவுசியின் ஒரு கட்டளை மூலம் நவாபின் நிர்வாகம் திருப்திகரமாக இல்லை என்று கூறி நாடு பிடுங்கிக் கொள்ளப்பட்டது.
புதிய கோணங்கி
மகாகவி ஒரு தீர்க்கதரிசி. அவர் தனது அசரீரி போன்ற கவிதையை மிக அழகான கதைக்குள் திணித்து இங்கே முரசறிவித்திருக்கிறார். அந்த முண்டாசுக் கோணங்கி வேறு யாருமல்ல, நமது மகாகவியே தான்.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?
கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் முரணான பாலுறவுகள் குறித்த சர்ச்சை இருக்கும். 1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படமும் ஆண்- பெண் இடையிலான உறவுகளின் முரண் தொடர்பானதே. இந்தப் படத்தின் அனைத்து (நான்கு) பாடல்களையும் கவியரசரே எழுதினார்; அனைத்தும் காலத்தை வென்று நிற்கும் கற்பகத் தருக்கள். குறிப்பாக, கதையோட்டத்துக்கு ஏற்றவாறு, இனிய சொற்களால் சமுதாயத்தை முரண்களிலிருருந்து காக்க நினைக்கும் கவியரசரின் பரந்த உள்ளம் இப்பாடல்களில் ஒளிர்கிறது. இங்கு வெளியாகும் பாடலும், படத்தின் கதாநாயகியின் பெண்ணின் தாபமாக, முரண்களை மறுக்கும் ஞானக்குரலாக ஒலிப்பதைக் காணலாம்.
தராசு கட்டுரைகள்- 12
ஆங்கிலேய அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மகாகவி பாரதி இருக்கிறாரா என்பதை அறிய அவ்வப்போது ஒற்றர்கள் அவரை வேவு பார்ப்பதுண்டு. புதுவையிலிருந்து பிரிட்டிஷ் இந்தியா வந்தபோது கைதான பாரதி - அவரது வழக்கறிஞரின் அறிவுரைப்படி- சில விதிமுறைகளுக்கு உட்படுவதாக வாக்களித்ததால் தான் விடுதலை செய்யப்பட்டார் என்பதை மனதில் இருத்திக் கொண்டால், இக்கட்டுரையில் உள்ள அவல நகைச்சுவையும், தன்னைக் கட்டிப்போட்ட ஆங்கிலேய அரசு மீதான பாரதியின் வெறுப்பும் புலப்படும். அதையும் தராசு கட்டுரையாக வடிக்கும் துணிவு, சுயநலமற்ற எழுத்தாளனுக்கே உரியது.
எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…
ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.
ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு
-பேரா. சி.ஐ.ஐசக் முன்னுரை: பாரத வர்ஷத்தின் இந்த ஆண்டு ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஆண்டாகும். ஒரு தீர்க்கதரிசியின் 150வது ஜயந்தியைக் கொண்டாடும் ஆண்டு. ஒரு துறவி என்பதற்காக சுவாமி விவேகானந்தர் தன் எல்லைகளை ஆன்மிக வட்டத்திற்குள் மட்டும் குறுக்கிக் கொண்டு விடாமல் பருப்பொருள் உலகிலும் தனது உறுதியான கால்தடங்களைப் பதித்தவர். பட்டறிவிலும், அறிவு நெறியிலும் மேலோங்கிய இந்திய மண்ணில் ஆன்மிகத்திலும், பருப்பொருளிலும் ஒருங்கே தன் முத்திரையைப் பதித்தவர் சுவாமி விவேகானந்தர். இந்திய இளைஞர்களின் திறமையில் அவர் தனது உறுதியான நம்பிக்கையைக் … Continue reading ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் இந்திய வரலாறு
சத்திய சோதனை- 4(26-30)
அடுத்த ரெயிலில் கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு ரிக்ஷாவை அமர்த்தினேன். அபாய நிலையிலிருந்த அவளை அதில் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.கஸ்தூரிபாயை உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள். “எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றாள்.பல நாட்களாக ஆகாரமே இல்லாததனால் அவள் எலும்பும் தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன் பிளாட்பாரம் மிகப் பெரியது. ரிக்ஷாவைப் பிளாட்பாரத்திற்குள் கொண்டு போக முடியாததனால், அவளை என் கைகளிலேயே தூக்கிக் கொண்டுபோய் ரெயில் வண்டியில் ஏற்றினேன்....
பிழைத்தோம்
கதையில் தத்துவம் சொல்லலாம். புரியாத சித்தாந்தத்தையும் கூட எளிதாக விளக்கலாம். இதோ மகாகவியின் ஒரு கதை...
எனது முற்றத்தில் – 23
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய இரண்டையும் ஹிந்தியில் மொழிபெயர்த்த திருச்சி பிளஸ் டூ மாணவி அப்சராவை சில வாரங்களுக்கு முன் ஆளுநர் அடையாளம் கண்டு, குடும்பத்துடன் ராஜ்பவன் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார். தமிழில் உள்ள ஞானம் ஹிந்தி வாயிலாக நாடெங்கும் பரவ அந்த மொழிபெயர்ப்பு கருவி ஆயிற்று என்பதுதான் ஆளுநருக்கு உவப்பு அளித்திருக்கிறது....
ஸ்வதந்திர கர்ஜனை- 1(3)
பேஷ்வா பாஜிராவ் காலமானார் எனும் செய்தி கிடைத்த அடுத்த கணம் பேஷ்வாவுக்குக் கொடுக்கப்பட்ட் வந்த மானியமான ரூபாய் எட்டு லட்சமும் நிறுத்தப்பட்டுவிட்டது. அவருடைய சொத்துக்களுக்கு நானா சாஹேப் உரிமை கொண்டாட முடியாது என்று அனைத்தையும் கம்பெனியார் எடுத்துக் கொண்டுவிட்டனர். தன்னுடைய உரிமையை நிலைநாட்ட நானா பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாருக்கு விரிவான மனு ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் அவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்துப் பட்டியலிட்டார்....
தராசு கட்டுரைகள்- 11
பிராமணப் பிள்ளை சிரித்தான். சொல்லுகிறான்:- தராசே, விதியை நம்புவது பிழை. ஐரோப்பியர் விதியை நம்புவதில்லை. ஆசியாவிலுள்ள மகமதிய ஜாதியாரும் ஹிந்துக்களுந்தான் விதியை மும்மரமாக நம்புகிறார்கள். இதனால் இந்த ஜாதியாரெல்லாம் வீழ்ச்சியடைந்தார்கள். ஐரோப்பியர் நாகரீகத்திலும் செல்வத்திலும் ஓங்கி வருகிறார்கள். முயற்சி செய்பவன் நல்ல ஸ்திதிக்கு வருவான். விதியை நம்பினவன் சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடப்பான். இங்ஙனம் பிராமணப் பிள்ளை சொல்லியதைக் கேட்டுத் தராசு சிரித்தது.
காஞ்சனை
சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் எழுதிய திகில் கதை இது....