குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கிய ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீபெரும்புதூரில் பொ.யு. ஆண்டு 1017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அதாவது கலி ஆண்டு 4118-இல் சக ஆண்டு 938-இல் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் 12-ஆம் நாள், சுக்லபட்ச பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய தந்தை ஆசூரி கேசவாச்சாரியார் ஆவார். தாயார் காந்திமதி அம்மையாவார்.
Author: vamumurali
மகாவித்துவான் சரித்திரம்- 2(5)
அப்பொழுது தேசிகர் புன்னகை கொண்டு, "என்ன பிள்ளையவர்கள்! இராத்திரி வெகு வேடிக்கைகள் பண்ணிவிட்டீர்களே; மிகவும் சிரமமாக இருந்திருக்குமென்றும் தூக்கம் கெட்டிருக்குமென்றும் எண்ணுகிறோம்" என்று பாராட்டிக் கூறி அழைத்து நெற்றியில் திருநீறிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்தார். பின்பு அங்கேயிருந்த பிரபுக்களையும் வித்துவான்களையும் நோக்கி, "இவர்கள் இருப்பது ஆதீனத்திற்கு மிகவும் கெளரவமாகவே இருக்கின்றது. என்ன பாக்கியமிருந்தாலும் இதற்கு ஈடாகாது. குறைந்த கல்வியுடையோரையும் கெளரவிக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிற இவர்கள் குணம் யாருக்கு வரும்! ஆதீனத்தின் அதிர்ஷ்டமென்றே சொல்ல வேண்டும்" என்று முதல்நாள் நிகழ்ந்தவற்றைச் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்தனர்.....
மனைவி அமைவதெல்லாம்…
பெண்பித்தனான கதாநாயகன் பாடுவதாக அமைந்த இப்பாடல், திரு. கே.பாலசந்தர் இயக்கத்தில் 1976-இல் வெளியான ‘மன்மத லீலை’ திரைப்படத்தில் இடம்பெற்றது. திரைக்கதையோட்டத்துக்கு ஏற்ப, கவிஞர் எழுதிய கவிதை வரிகள், மனைவியின் பெருமையை தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல இருக்கின்றன. இதுபோன்ற காட்சி அமைப்பு கொடுக்கப்பட்டால் இன்றைய திரையிசைக் கவிஞர் சிகாமணிகள் என்ன எழுதி இருப்பார்கள் என்று நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது...
அரவிந்தரின் புதிய தேசியம்
மகரிஷி அரவிந்தரின் 150வது ஆண்டை ஒட்டி, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான பேராசிரியர் மகரந்த். ஆர். பராஞ்சபே அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் மீள்பதிவாகிறது.
எனது முற்றத்தில் – 28
தென்கோடி எட்டயபுரத்தில் இருந்து காசி மாநகரம் சென்று கல்வி பயின்ற பாரதியாருக்கு 11 மொழிகள் தெரிந்திருந்தது. ஆனால் அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது, தமிழ்க் கவிஞராக. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தன் தாய்மொழிப் பற்றை அழுத்தம் திருத்தமாக அவர் பிரகடனம் செய்தது ஒருபுறம்; மறுபுறம் “காசி நகர்ப்புலவர் பேசு மொழிதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற பாரதியின் இன்னொரு வரி, காசியின் ஞானமேன்மையை நமக்கு நினைவூட்டுகிறது.
சந்திரத் தீவு
தனது உயரிய கனவான 'ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தி மகாகவி பாரதி எழுதிய இந்தக் கதை, பாரதி பிரசுராலயத்தார் பதிப்பித்த கட்டுரைகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்முடைய தரும போதனையை இக் கதையில் வரும் கதாபாத்திரங்களான கங்காபுத்திரன், ராஜகோவிந்தன், ஸுதாமன் ஆகியவர்களுடைய உரையாடல்கள் மூலம் விளக்குகிறார், பாரதி.
சான்றோர் பார்வையில் சுவாமி விவேகானந்தர்
திலகர் முதல் தாகூர் வரையிலான தேசத் தலைவர்கள் பலரின் சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...
சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1
சேலத்தைச் சார்ந்த எழுத்தாளர் திரு. இரா.பிரபாகர், வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ‘சத்தியப்பிரியன்’ என்ற பெயரில் பல இதழ்களில் சிறுகதைகளை எழுதி வருபவர். இறைவனின் முன்பு அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிய வைணவ ஆச்சாரியர் ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த அவரது கட்டுரைத் தொடர் இங்கே வெளியாகிறது…
சத்திய சோதனை – 5(6-10)
சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக்கொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக்கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால், அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்த வரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதை அணிய வேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.....
கோபந்நா
மகாகவி பாரதியின் சமூக உணர்வு, அவரை பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசலாடச் செய்தது. பாரம்பரியத்தில் ஊறிய பாரதிக்கு நாட்டு மக்களின் ஏழ்மையும் தேக்கமும் மிகுந்த வேதனை அளித்தன. அது அவரது கதை, கவிதை, கட்டுரைகளில் வெளிப்பட்டுக் கொண்டெ இருந்தது. அதற்கு இக்கதையும் ஒரு உதாரணம்...
ஸ்வதந்திர கர்ஜனை – 2(5)
இந்த காங்கிரசில் காரியக் கமிட்டிக்கு நடந்த தேர்தலில் தோற்ற பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிசயம் நடந்தது. காரியக் கமிட்டிக்கு அந்தந்த மாகாணப் பிரதிநிதிகள் கூடித் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். பம்பாய் மாகாண உறுப்பினர்கள் கூடித் தங்களுடைய இரண்டு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மிதவாதி ஒருவரையும் தீவிர காங்கிரஸ்காரர் ஒருவரையும் முன்மொழிந்தனர். திலகர் ஆதரவு பெற்ற ஒரு பிரதிநிதியும் காந்திஜியின் பெயரும் முன்மொழியப்பட, அதில் காந்தி தோற்றுவிட்டதாகத் தெரிந்த நிலையில், திலகர் உடனடியாக காந்தி வெற்றி பெற்றார் என்று அறிவித்து விட்டார்....
சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய மதம்
பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888- 1975), சிறந்த தத்துவ மேதை. சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே…
விழித்தெழு பாரதமே!
பூஜ்யஸ்ரீ சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. சென்னை- மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளராக இருந்தவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது…
மகாவித்துவான் சரித்திரம் – 2(4இ)
அப்பால் ஸரஸ்வதி பூஜையன்று பட்டீச்சுரத்துக்கு அருகிலுள்ள என் ஊராகிய உத்தமதானபுரம் சென்றேன். பூஜையை அங்கே முடித்துக்கொண்டு மறுநாளாகிய விஜயதசமியன்று புனப்பூஜையைச் செய்துவிட்டுப் பிற்பகலில் புறப்பட்டுப் பட்டீச்சுரம் வந்து 4 மணிக்குப் பிள்ளையவர்களைக் கண்டேன். "ஏன் இவ்வளவு அவசரமாக வந்தீர்?" என்றார். "இன்று விஜயதசமியாதலால் ஐயா அவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலா மென்றெண்ணி விரைந்து வந்தேன்” என்றேன்.
தாதாபாய் நெளரோஜி
விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி காலமானபோது மகாகவி பாரதி எழுதிய இரங்கல் குறிப்பு இது. “நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் நெளரோஜி; அதற்கு மரணம் இல்லை. நம்பின காரியம் கைகூடும் என்ற வசனத்தை ஹிந்துக்கள் நம்பும்படியும் செய்வதற்காகத் தோன்றிய பெரியோர்களில் தாதாபாய் ஒருவர்” என்கிறார் பாரதி.