வீரத்துறவியின் அணியினில் சேர்வோம்!

-வ.மு.முரளி

ஹிந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் அமரர் இராம.கோபாலன் அவர்களின் பிறந்த தின நூற்றாண்டு 2026 செப். 119இல் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக்கவிதை இங்கு மீண்டும் பதிவாகிறது.

வீரத்துறவியின் விழுமிய பயணம்
வெற்றியை நோக்கிய இந்துவின் சரிதம்!
விரைவினில் வெற்றியை எய்திட வேண்டின்
வீரத்துறவியின் அணியினில் சேர்வோம்!

தன்னைத் தேய்த்து நறுமணம் வழங்கும்
சந்தனம் போன்ற தகைமையர் இவரின்
தலைமையில் ஒன்றாய் முன்னணி காண்போம்!
தரணியில் பாரதம் சிறந்திட வைப்போம்!

இந்துவின் நலனைக் காத்திட வேண்டி,
இழிவினை நீக்கிட இயக்கம் கண்டார்!
இந்துவின் வாழ்வில் பெருமிதம் சூழ
இயக்கமாகவே நம்மிடை உள்ளார்!

கண்ணைக் காக்கும் இமைபோல் தர்மம்
காத்திட உழைக்கும் கடமைவீரர்!
கண்ணன் கீதையில் இலக்கணம் சொன்ன
கர்மயோகியாய் வாழ்ந்திடும் தீரர்!

எழுபத்தைந்து அகவையைக் கடந்தும்
இளைஞர்போல உழைத்திடும் சூரர்!
எறும்பைப் போல சுறுசுறுப்பாக
இயங்கும் இவரைப் பின்தொடர்வோமே!

இதம்தரும் வாழ்வை தியாகம் செய்து
இந்துஸ்தானைக் காத்திட உழைக்கும்
இவரது பெயரைச் சொன்னால் போதும்,
இந்துவின் மனதில் மலரும் எழுச்சி!

வீரத்துறவியின் விழுமிய பயணம்!
வெற்றியை நோக்கிய இந்துவின் சரிதம்!

  • நன்றி: பசுத்தாய் பொங்கல் மலர்-2001.

$$$

Leave a comment