பாரதியின் தனிப்பாடல்- 16

-மகாகவி பாரதி

16. தாயுமானவர் வாழ்த்து

என்றும் இருக்க உளங்கொண்டாய்!
.இன்பத் தமிழுக் கிலக்கியமாய்,
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
.இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருள ஃதின்பமென
.உணர்ந்தாய், தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
.நில்லா இகத்தும் நிற்பாய் நீ!

$$$

Leave a comment