மதத்திலே மறுமலர்ச்சி கண்ட மகான்

தமிழக முன்னாள் முதல்வர் அமரர் திரு. மு.கருணாநிதி (1924- 2018), சுவாமி விவேகானந்தர் மீது  கொண்டிருந்த அளப்பரிய மரியாதை  இக்கட்டுரையில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் தான் குமரிமுனையில் விவேகானந்தர் பாறையில் அவருக்கு உயரிய நினைவு மண்டபம் விவேகானந்த கேந்திரத்தால் அமைக்கப்பட்டது. அப்பொழுது அவர் எழுதிய கட்டுரையே இந்தக் கட்டுரையாகும்.

தேசத்தைக் காத்த தெய்வத் துறவி

பெங்களுரு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை 12.01.2009 அன்று திறந்துவைத்து, பாஜக மூத்த தலைவர் திரு. எல்.கே.அத்வானி ஆற்றிய உரையின் சுருக்கம் இது...

சுவாமிஜி நமது தேசியத்தின் தன்மானம்

முன்னாள் ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி, ஆங்கில வார இதழான ‘THE WEEK’ பத்திரிகையில் 2014-இல் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது....

இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர்

திரு.ப.ஜீவானந்தம் (1907- 1963), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர்; தமிழகத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பரவக் காரணமான பெரியோர்; ஜனசக்தி பத்திரிகையின் நிறுவனர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

மகரிஷி விவேகானந்தர்

ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்து…

இந்தியாவை தலைமிர்ந்து நிற்கச் செய்தவர்

பாரதத்தின் முதல் பிரதமரான திரு.  ஜவஹர்லால் நேரு (1889- 1964), சுவாமி விவேகானந்தர் குறித்துக் கூறியவை…

தேசபக்தியை பெருக்கியவர்!

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்ட தலைவர்களுள் பிரதானமானவர். அவர் பல இடங்களில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி இருக்கிறார். அவற்றில் சில துளிகள் இவை….

ஞானகங்கை

ஸ்ரீ குருஜி கோல்வல்கர் என்று அழைக்கப்படும் பரமபூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இரண்டாவது தலைவராக இருந்தவர்; பெரும் தபஸ்வி; சிந்தனையாளர்; சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இயக்கச் செயல்வீரர்; தேசிய மறுமலர்ச்சிப் பணியில் தனது வாழ்வையே அர்ப்பணமாக்கியவர். ‘ஞானகங்கை’ என்ற நூல் தொகுப்பு குருஜியின் சிந்தனைக் களஞ்சியமாகும். இக்கட்டுரை ‘தியாகபூமி’ வார இதழில் வெளியானதாகும்.

ஞான வானத்து வைகறை

திரு. பொன். பாண்டியன்  குடியாத்தத்தில் வசிக்கிறார்; அரசு  உயர்நிலைப் பள்ளியில்  ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவேகானந்தரின் சிந்தனைகள்

கோவையைச் சார்ந்த மேலாண்மைத் துறை பேராசிரியரும் பாஜக மாநிலத் துணத் தலைவருமான பேரா. ப.கனகசபாபதி அவர்களின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...

தமிழகத்திற்கு எழுச்சி தரும் ரத யாத்திரை

இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை,  கோவை மாவட்டம், கோதவாடி என்ற கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர்.  தனது கடும் உழைப்பால் முன்னேறி,  பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) ‘சந்திரயான்’  திட்ட இயக்குனராகச்  செயலாற்றியவர். 2013-இல் கோவையில், சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்க விழாவில் பேசிய அன்னாரது கருத்துகள் இங்கே....

விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்!

அமரர் மௌலானா வஹிதுதீன் கான் (1925- 2021), பாரதத்தின் இஸ்லாமியப் பேரறிஞர்களுள் முதன்மையானவர். உத்தரப்பிரதேசத்தின் அஸம்கார் பகுதியில் வாழ்ந்தவர். திருகுர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியவர்; முஸ்லிம் மார்க்க சிந்தனையாளர்களால் மிகவும் போற்றி மதிக்கப்படுபவர். பாரதம் உயர வேண்டுமானால் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற சமரசக் கருத்தை ஓயாமல் முன்வைத்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

ஓர் ஒப்பற்ற மகான்

பூஜ்யஸ்ரீ சுவாமி கௌதமானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இங்கே....

சுவாமி விவேகானந்தரும் அன்னை வழிபாடும்

பூஜ்யஸ்ரீ சுவாமி யதாத்மானந்தர் ராமகிருஷ்ண மடத்தின் துறவி; சேலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இக்கட்டுரை சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது எழுதப்பட்டது….

மக்கள் சேவையே மகேசன் சேவை

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த அமரர் திரு. கி.சூரியநாராயண ராவ் (1924- 2016), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகராக வழிகாட்டியவர். சுவாமி விவேகானந்தர் கூறிய வழியில் நாட்டைப் புனரமைப்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணம் செய்தவர். தேசிய சிந்தனையாளர்; நாட்டு முன்னேற்றத்துக்கான பல நூல்களை எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது அரிய கட்டுரை இங்கே…