ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த சிறு பதிவின் மொழிபெயர்ப்பு இது.
Tag: விவேக மலர்
சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம்
பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரம்பரையில் வந்த துறவி; சுவாமி மதுரானந்தரிடம் தீட்சை பெற்றவர். குமரி மாவட்டம், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர். குமரி மாவட்டத்தில் மாபெரும் ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுவாமிஜி, தமிழகம் முழுவதும் ஹிந்து சமய வகுப்புகளை - அதற்கென ஒரு பாடத்திட்டம் உருவாக்கி - நடத்தி வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இனிய கட்டுரை இங்கே…
அன்பு, அறிவு, ஆற்றலின் உருவம் சுவாமி விவேகானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி சந்திரசேகரானந்தர், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் துறவி. தேவிப்பட்டினத்தில் உள்ள தபோவன மடத்தின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்திக் கொண்டாட்டத்தின் போது இவர் எழுதிய கட்டுரை இது….
விழிமின்… எழுமின்…
உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி அனந்தானந்தர், சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது சுவாமிஜி குறித்து எழுதிய கட்டுரை இது...
என்றும் இந்தியாவுக்கு வழிகாட்டி
கோவையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், கோவை பாரதீய வித்யாபவன் தலைவருமான முனைவர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் எழுதிய கட்டுரை இங்கே...
தேவை ஒரு சரியான சிந்தனை
தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான முனைவர் திரு. எஸ்.வைத்யசுப்ரமணியம் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இங்கே…
சுவாமி விவேகானந்தரின் கனவில் விழிப்புற்ற பாரதம்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…
வீரத் துறவியும் வீரக் கவிஞரும்
-நல்லி குப்புசாமி செட்டியார் திரு நல்லி குப்புசாமி செட்டியார், சென்னையில் ‘நல்லி சில்க்ஸ்’ என்ற பிரமாண்டமான பட்டு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். வெற்றிகரமான வணிகராக மட்டுமல்லாது, கலை இலக்கிய செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டவராகவும் திகழ்பவர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பவர்; பாரதி அன்பர்; மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்த ‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டிதழை நடத்தி வருபவர்; பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே... சிகாகோவில் நடைபெற்ற … Continue reading வீரத் துறவியும் வீரக் கவிஞரும்
சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷர்
தமிழகத்தின் ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவரான (டி.ஜி.பி) திரு. ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்தபோது, அத்துறையை வெளிப்படையான அமைப்பாக மாற்றினார். நேர்மையின் சின்னமாக அரசு அதிகாரிகள் விளங்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். சந்தனக் கடத்தல் கும்பல் தலைவன் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு தலைவராக இருந்தபோது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்களாக காவல்துறையினரை மாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் 15வது ஜெயந்தியின்போது திரு. ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். எழுதிய கட்டுரை இங்கே…
இன்னொரு விவேகானந்தர்!
உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதியரசர் திரு. வெ.இராமசுப்பிரமணியன், இலக்கிய ஆர்வலர்; நாட்டுநலம் விழையும் நற்பண்பாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர். அன்னாரது இக்கட்டுரை, தினமணி நாளிதழில் (12.01.2014) விவேகானந்தரின் 151வது ஜெயந்தியை ஒட்டி வெளியானதாகும்.
பாரதத்தின் ஞானதீபம்
திரு. வ.வே.சு., சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர், பாரதி அன்பர். சென்னையில் வானவில் பண்பாட்டு மன்றம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…
நாடு முன்னேற விவேகானந்தர் வேண்டும்!
பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா (86), மதுரையில் வசிப்பவர்; தமிழ் மேடைப் பேச்சாளர்களுள் முத்திரை பதித்த பட்டிமண்டப நாவலர்; நகைச்சுவை மிகுந்த தனது பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்து வருபவர். மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர்- சுவாமி விவேகானந்த பக்தர்களின் 18-வது மாநில மாநாட்டில் திரு.சாலமன் பாப்பையா ஆற்றிய உரையின் சுருக்கம் இது....
முகவரி தந்த முதல்வர்
‘ஆய்வுரைத்திலகம்’ என்று போற்றப்படும் அமரர் பேராசிரியர் அ.அறிவொளி, நாவன்மையால் தமிழ்ப் பட்டிமண்டபங்களை ருசிகரமாக்கியவர். சைவத்திலும் கம்பன் காவியத்திலும் தோய்ந்தவர். பல நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது இனிய கட்டுரை இங்கே…
அவரா சொன்னார்?
அமரர் பேராசிரியர் ஸ்ரீ. சோ.சத்தியசீலன், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; கம்பனில் ஆழ்ந்தவர்; தமிழகம் மட்டுமல்லாது, உலகமெங்கும் சென்று பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்த்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...
காவி கட்டிய கண்ணியம்
பேராசிரியர் ஸ்ரீ முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்; ராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், வைணவ பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே...