பாஞ்சாலி சபதம் – 1.1.14

அறிவுரை கேளாச் செவியனான தனது மைந்தனின் அடத்தைக் கண்டு வெறுத்துப்போன்ன மன்னர் திருதராஷ்டிரன், எதிர்காலத் தீமையை எண்ணி நானினாலும், வேறு வழியின்றி பாண்டவரை சூதுக்கு அழைக்க உடன்படுகிறார். இதனை விரித்துச் சொல்ல ஆர்வமின்றி, இரண்டே பாடல்களில் முடித்து விடுகிறார் மகாகவி பாரதி...

பாஞ்சாலி சபதம்- 1.1.13

தந்தையின் அறவுரை துரியனை மேலும் வெறிகொள்ளச் செய்கிறது. இளையவர் ஆற்றல் பெருகுவது பின்னாளில் தனது ஆட்சிக்கு இடையூறாகும் என்கிறான்; பாண்டவரின் மீது மதிப்புக் கொண்ட அமைச்சன் விதுரன் தனது தந்தையை தவறாக வழிநடத்துவதாக ஏசுகிறான்; எவ்வகையிலேனும் ஆட்சியை விரிவாக்குவதே மன்னவன் கடமை என்கிறான்; இறுதியில், தந்தை தனக்கு உடன்படாவிடில், தனது சிரமறுத்து அங்கேயே சாவேன் என்றும் மிரட்டுகிறான். இவை அனைத்தையும் இனிய பாடலாகத் தருகிறார் மகாகவி பாரதி....

பாஞ்சாலி சபதம் – 1.1.12

பாண்டவரை சூதுக்கு அழைக்கலாம் என்ற மகனின் சொற்கேட்டு திகைத்த திருதராஷ்டிரன், ‘இது சந்திரகுலத்தில் உதித்த உனக்கு உகந்ததல்ல’ என்கிறார். சதி செய்து வெல்லுதல் வீரமல்ல என்றும் அறிவுரை கூறுகிறார்- செவிடன் காதில் ஊதும் சங்கு போல.

பாஞ்சாலி சபதம்- 1.1.11

‘சொந்த மகனை இகழ்ந்து பிறரது மகன்களைப் போற்றும் தந்தையர் உன்னைப் போல உலகில் யாருமில்லை” எறு தன தந்தையைத் தூற்றும் துரியன், சூதுக்கழைத்து பாண்டவரை வெல்ல விரும்புவதை வெளிப்படுத்துகிறான். மகாகவி இப்பாடலில் காட்டும் தர்க்க நயங்கள் கவனிக்கத் தக்கவை...

பாஞ்சாலி சபதம்- 1.1.10

திருதராஷ்டிரன் கூறிய அறிவுரைகளைக் கேட்டு வெகுண்ட அவரது புதல்வன், நல்லுரை கேளாச் செவியனாக, தனது சினம் கொண்ட வார்த்தைகளைக் கூறத் தொடங்குவதாக இப்பாடலை முடிக்கிறார் மகாகவி பாரதி.

பாஞ்சாலி சபதம்- 1.1.9

சகுனியின் தீய சொற்களைக் கேட்டு வெகுண்ட திருதராஷ்டிரன், அவனை கடுமொழி கூறி எச்சரிக்கிறார். தனது பிள்ளையை நாசம் செய்ய வந்த பேயென சகுனியை இகழ்கிறார் மன்னர். அவர் இயல்பில் நடுநிலை தவறாதவர் என்பதை இப்பாடல்களில் காட்டுகிறார் மகாகவி பாரதி.

பாஞ்சாலி சபதம்- 1.1.8

அழுக்காறால் புகைந்த மருகனுடன் நாட்டின் மன்னனும் அவனது தந்தையுமான திருதராஷ்டிரனிடம் செல்லும் சகுனி, தனது மைத்துனரின் மனதில் விஷம் விதைக்க முயல்கிறான். ஆனால், திருதராஷ்டிரன் தனது மகனைப் பார்த்து, “பாண்டவர் போன்ற அரும் சகோதாரர்கள் உடன் இருக்கையில் உனக்கு வேதனை ஏன்?” என்று கேட்டு எரியும் கொள்ளியில் நெய் வார்க்கிறார். அப்போது நாடு மன்னரின் கடமைகள் என்ன என்று சகுனி உரைப்பதாக இப்பாடல்களைப் புனைத்திருக்கிறார் மகாகவி பாரதி...

பாஞ்சாலி சபதம்- 1.1.7

இளையவர் வழிதவறுகையில் அவர்களை அறிவுறுத்தி வழிநடத்துவதே பெரியோரின் இயல்பு. மாறாக, பொறாமைத் தீயில் வேகும் மருகன் துரியோதனனை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும் வகையில் சூதாட்ட உபாயம் கூறுகிறான் தாய்மாமன் சகுனி. அதனை ‘நல்ல இங்கிதம்’ என்று கூறி கட்டித் தழுவுகிறான் துரியோதனன். தீயோர் சொல் முதலில் இனிக்கும்; பின்னர் கசக்கும் என்பது தானே உலக வழக்கம்?

பாஞ்சாலி சபதம்- 1.1.6

இந்திரப்பிரஸ்தத்தில் (இன்றைய தில்லி) தனது தாயாதி சகோதரனான யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யாகம் அவனுக்கு சக்கரவர்த்தி பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அது அஸ்தினாபுரத்தை ஆண்ட துரியோதனனுக்கு அழுக்காறாமையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவன் தனது நிழலாகக் கருதும் தனது தாய்மாமனிடம் பொறாமையுடன் உரைத்தவையே இங்கு மகாகவி பாரதியால் அழகிய கவிதைகளாக வடிவெடுத்திருக்கின்றன...

பாஞ்சாலி சபதம் – 1.1.5

ராஜசூய யாகம் நடத்தி தன்னை நாட்டின் சக்கரவர்த்தியாக அறிவித்துக் கொண்ட யுதிஷ்டிரனுக்கு பாரதம் முழுவதும் ஆண்ட முடியுடை வேந்தர்கள் செய்த மரியாதை, அவனது தாயாதியான துரியோதனனுக்குப் பொறுக்கவில்லை. அஸ்தினாபுரத்திலிருந்து துரத்தினாலும், தனிநகரை அமைத்து ஆளும் பாண்டவர்களின் திறனைக் கண்டு வயிறெரிகிறான் துரியன். அவனது புலம்பலை கவிதையாக்கி, ‘பாஞ்சாலி சபதம்’ காப்பியத்துக்கு வித்திடுகிறார் மகாகவி பாரதி.

பாஞ்சாலி சபதம் -1.1.4

காப்பிய இலக்கணப்படி, ஹஸ்தினாபுர மன்னனை மகாகவி பாரதி அறிமுகம் செய்கிறார் இந்தப் பகுதியில்... துரியோதனன் இக்காப்பியத்தின் எதிர்நாயகன் ஆயினும் அவனது வல்லமையை எடுத்தியம்புகிறார் கவி.

பாஞ்சாலி சபதம் – 1.1.3

குருவம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் சிறப்பை வர்ணிக்கும் பாடல்களுடன் பாஞ்சாலி சபதத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி. காப்பிய இலக்கணத்தின்படி, ஊர்ச் சிறப்புடன் தொடங்குதல் மரபு.

பாஞ்சாலி சபதம் – 1.1.2

பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி வந்தனப் பாடல் இது...

பாஞ்சாலி சபதம் – 1.1.1

பாஞ்சாலி சபதம் காப்பியத்தின் முதல் பாகம், பிரம்ம ஸ்துதியுடன் தொடங்குகிறது...

பாஞ்சாலி சபதம் – முகவுரை

பழம்பெரும் இதிகாசமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, பெண்ணுரிமைக் காப்பியமாக தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே ‘பாஞ்சாலி சபதம்’. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த அற்புதமான படைப்பு இது. இலக்கிய நயமும் கவிநயமும் கொண்ட இனிய கவிதைகளால் அமைந்த காப்பியம் இது. ‘பாஞ்சாலி சபதம்’ இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் முதல் பாகத்தில் - சூழ்ச்சி சருக்கம், சூதாட்டச் சருக்கம், இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களில் 412 பாடல்கள் உள்ளன. இந்நூல் நமது தளத்தில் தொடராக வெளியாகிறது...