சிவகளிப் பேரலை – 41

  ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் நாம் ஆண்டவனுக்கு மிக அருகில் வருகிறோம்.   அவ்வாறு அடக்குதல் எளிதா? ஐம்புலன்களின் வேட்கையை அழிக்க முடியாது என்றபோதிலும், அதனை அடக்குவதற்கு இறைவன் கொடுத்த ஒழுக்க வழிமுறைகளிலே வழுவாது நிற்க வேண்டும் என்பதை திருக்குறள் உள்ளிட்ட அற நூல்கள் வலியுறுத்துகின்றன. அதுசரி, நினைத்தாலே கடினமாக இருக்கக்கூடிய இந்தச் செயலை நம்மால் கடைப்பிடித்து ஒழுக முடியுமா? முடியும்.  அதற்கு, ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என அடியெடுத்துக் கொடுக்கிறது திருவாசகம்.

சிவகளிப் பேரலை – 40

மனத்தில் சிவபெருமான் அரசாட்சியால் ஞானப்பயிர் வளர்ந்து நற்பலன்கள் கொடுப்பதை முந்தைய ஸ்லோகத்தில் வர்ணித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தன் ஒருவன், தனது மனத்திலே பக்திப் பயிரை எவ்விதம் வளர்ப்பது என்பதை விவரிக்கிறார்....

சிவகளிப் பேரலை – 39

சிவபெருமான் ஆட்சி நடைபெறுகின்ற மனத்திலே நான்கு பாதங்களுடைய அறம் நன்கு பேணப்படுகிறது. தவம், தூய்மை, கருணை, உண்மை ஆகியவையே தர்ம தேவதையின் (அறத்தின்) நான்கு கால்களாக வர்ணிக்கப்படுகின்றன.  இவ்வாறு அறம் பேணப்படுவதால்,  காமம், கோபம் (குரோதம்), செருக்கு (கர்வம்) ஆகியவை அழிந்துவிடுகின்றன. பாவமும் ஒழிந்துவிடுகிறது. காலம், இன்பத்தை மட்டுமே தருகிறது. மேலும், இறையனுபூதியாகிய ஞானப்பயிர் விளைந்து நற்பலன்களைக் கொடுக்கிறது.....

சிவகளிப் பேரலை – 38

முற்பிறவிகளில் செய்த தவமாகிய மலையால் காட்சி தருகின்ற இறைவன் சிவபெருமான். அழிவில்லா அமுதமாக விளங்குபவர். புன்னகை தவழ்கின்ற வதனம் உடையவர். மங்களத்தைத் தருகின்றவர், சந்திரனைச் சூடியவர். நற்குணங்களுக்கு உறைவிடமாக இருப்பவர்.....

சிவகளிப் பேரலை – 37

பாற்கடலைக் கடந்தால் பல்வேறு பயன்களுக்காக பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. ஆனால், பக்தர்கள் வேதக்கடலைக் கடையும்போது இந்த அனைத்துப் பொருட்களின் பலன்களையும் உள்ளடக்கிய சிவபெருமானே காட்சி தந்து நம்மை ஆட்கொள்கிறார். ...

சிவகளிப் பேரலை – 36

இந்த உடலை வெறும் பஞ்சபூத சேர்க்கை என்று நினைக்கலாகாது.  இது, இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயம். “உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்” என்று திருமந்திரம் உரைப்பதை நினைத்துப் பார்ப்போம். ஆகையால், பேரிறையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த உடலைப் புனிதமாக்க வேண்டிய கடமையை இங்கே வலியுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....

சிவகளிப் பேரலை – 35

திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான், “வேண்டத்  தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ, வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி, என்னைப் பணிகொண்டாய், வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசொன்று உண்டென்னி லதுவும் உந்தன் விருப்பன்றே” என்று மொழிகிறார்....

சிவகளிப் பேரலை – 34

பிரபஞ்சம் அழிகின்ற பிரளய காலத்தில் அனைத்து ஜீவன்களும், பொருள்களும் அவற்றின் தோற்றுவாயான சிவ பரம்பொருளிடமே லயம் அடைகின்றன. மீண்டும் அவரிடமிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படுகின்றன. இது ஒரு தொடர்கதை...

சிவகளிப் பேரலை – 33

சிவபெருமானை பூஜிப்பது மிகவும் சுலபம். ஒரு வில்வ தளமோ அல்லது எருக்கம்பூவையோ எடுத்து சிவார்ப்பணம் என்று பூஜித்தாலே மிகப் பெரிய பலன்களைத் தரக்கூடியவர் சிவபெருமான். எல்லாம் வல்ல பெரியாண்டவன் எளிய வழிபாட்டுக்கே இறங்கிவரும்போது ஏன் வேறு பொய்த் தெய்வ வழிபாடுகளுக்காக அலட்டிக்கொள்ள வேண்டும்? என்று வினவுகிறார் ஆதிசங்கரர்...

சிவகளிப் பேரலை – 32

சிவபெருமான் நஞ்சுண்ட தியாக வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனார், தனது தேவாரப் பாடல் ஒன்றில் இவ்விதம் புகழ்ந்துரைத்துள்ளார்: “கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளர வுசுற்றிக் கடைந்தெழுந்த, ஆல நஞ்சுண்டவர் மிக இரிய அமரர்கட் கருள்புரிவது கருதி, நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீசெய்த, சீலங் கண்டு நின்திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே”.

சிவகளிப் பேரலை- 31

உலகம் காக்க விடம் உண்ட சிவபெருமானின் தியாகத்தால் அவரைத் தமிழ்ச் சங்க இலக்கியங்கள், மணிமிடற்று அண்ணல் (குன்றம்பூதனாரின் பரிபாடல் பாட்டு), காரிஉண்டிக் கடவுள் (பெருங்கௌசிகனாரின் கூத்தராற்றுப்படை) என்று போற்றுகின்றன.

சிவகளிப் பேரலை- 30

சிவபெருமான் எங்கும் நிறைந்தவர். மிகச் சிறியோராகிய நாம் அவரை எவ்விதம் நிறைவாக பூஜிக்க முடியும்? சிவபெருமானுக்கு வஸ்திரம் உடுத்தி அழகுபார்க்க, கிரணங்களாகிய ஆயிரம் கரங்களைக் கொண்ட சூர்யபகவானா நாம்?....பிறைசூடிய பெருமானே, நான் மிகவும் எளியவனாயிற்றே? என்று பக்தன் மலைக்கிறான். ...

சிவகளிப் பேரலை – 29

சிவபெருமானின் பாதங்களைப் போற்றுகிறேன், அவரையே மனத்தில் நினைத்து தியானிக்கிறேன், அவரது திருவடியே கதியென்று சரணடைந்துவிட்டேன், அவரிடமே பிறவித் தளையில் இருந்து விடுதலையை வேண்டுகிறேன். அதற்கு வழிசெய்யும் வகையில், விண்ணில் உள்ள தேவர்கள் எல்லோரும் வியந்து போற்றுகின்ற தமது விழியருளை சிவபெருமான் என் மீது பாய்ச்சட்டும். அதன்மூலம் பேரின்பம் எனக்குள்ளே ஏற்படுமாறு செய்யட்டும்....

சிவகளிப் பேரலை- 28

எங்கேயோ தேடி அலைந்து கொண்டிருக்காமல், உள்ளத்தை சிவபெருமானுக்குக் காணிக்கையாக்கி, அவரது நினைப்பிலே தோய்ந்து இங்கேயே ஜீவன் முக்தியை, அமர நிலையை எய்திவிடலாம். மகாகவி பாரதியார், “மண்ணில் வானம் காணலாம்”, “எல்லோரும் அமரநிலை எய்தலாம்” என்றெல்லாம் கூறியதன்  பொருள் இதுவே....

சிவகளிப் பேரலை – 27

கடவுளுக்கு நம்மிடம் உள்ளதைக் காணிக்கையாகத் தருவதைவிட, நமது உள்ளத்தையே காணிக்கை ஆக்குவதே மிகச் சிறந்தது. கடவுளுக்கு நாம் பொருளைப் படைத்தால், அந்தப் பொருள் அவன் படைத்ததுதானே? நாம் உழைத்துச் சேர்த்த பொருள், ஆதலால் நமது என்று கருதலாமே என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, சகல ஐஸ்வர்யங்களையும் வைத்திருக்கும் பரமேஸ்வரன் முன் இது மாத்திரம்?