சரித்திரத் தேர்ச்சி கொள்!



முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்!
என்னகூறி மற்றெங்கன் உணர்த்துவேன்
இங்கிவர்க்கென துள்ளம் எரிவதே!

-மகாகவி பாரதி.

***

எந்த நாட்டின் இளைஞர்கள் மனதில்
இறந்தகாலம் குறித்த பெருமிதம்...
நிகழ்காலம் குறித்த வேதனை...
எதிர்காலம் குறித்த பொற்கனவுகள்...
இருக்கின்றனவோ,

அந்த தேசமே உயர்வடையும்.

-மகரிஷி அரவிந்தர்.