பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை.
Author: vamumurali
கபட கேஸரி
எந்த வகையிலும் தனக்கு மரணம் நேரக் கூடாதென்று, கடுந்தவமிருந்து கபடமாக வரம் வாங்கிவந்த அசுர வேந்தன் இரணியனை, அதே கபட வேடம் கொண்டு சம்ஹரித்தார் நரசிம்மர். இதனை வேதாந்த தேசிகரின் ‘காமாஸிகாஷ்டகம்’ சுலோகங்களைக் கொண்டு இங்கே விவரிக்கிறார் திருநின்றவூர் ரவிகுமார்...
பாரதி வழங்கிய படிப்பினை!
1956 செப்டம்பர் 11-இல் சென்னை பாரதி சங்கத்தின் சார்பில் சென்னை, தியாகராயநகர், வாணி மகாலில் நடைபெற்ற பாரதியார் விழாவில் தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரை இது...
புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா
வெளிநாட்டு உதவியுடன் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெறத் துடித்த புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா. அவரைப் பற்றிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் கட்டுரை இது....
தீண்டாமை என்னும் பாதகம்
சுதேசமித்திரனில் 1920-களில் மகாகவி பாரதி எழுதிய பதிவு இது... தீண்டாமை ஒழியாமல் தேச விடுதலை வசப்படாது என்ற தெளிவான பார்வையை பாரதி- காந்தி ஆகிய இரு மகான்களிடமும் கண்டு மகிழ்கிறோம்...
முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி
தமிழக ஹிந்துத்துவ சிந்தனையரங்கில் முதன்மையான எழுத்தாளரான திரு. அரவிந்தன் நீலகண்டன், பாரதத்தின் முன்னோடி விடுதலைப் போராளியான கஸலு லட்சுமிநரசு செட்டி குறித்து எழுதியுள்ள அரிய கட்டுரை இது...
அபூர்வ மனிதர் தரம்பால்
பண்டைய இந்தியாவின் கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து அற்புதமான ஆய்வுநூல்களை அளித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் தரம்பால். அவரைப் பற்றி திரு. டி.எஸ்.தியாகராஜன் எழுதிய அறிமுகக் கட்டுரை இது....
உணர்வுகளை உன்னதமாக்கிய நம் துறவியர்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…
பாரதத்தின் பெருமை: பாருக்கே அணிகலன்!
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய இனிய கட்டுரை இது…
இலக்கணத் தமிழ் சமைத்தவர்கள்
நமது வாழ்க்கையை எவ்வாறு நாமே உருவாக்கிய சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றனவோ, அதேபோல மொழியைக் கையாள்வதில் தேவையான கட்டுப்பாடுகள் அவசியம். அதற்காக சான்றோரால் எழுதப்பட்டவையே இலக்கண நூல்கள்.
அக்காரக்கனியும் அமரகவியும்
கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமிழில் இராமாவதாரம் இயற்றினாலும், அதில் பல புதுமைகளைப் புகுத்தி இருந்தாலும், அது புதிய நூல் அல்ல. தான் இதை இயற்றுவதற்கு முன்னால் - மகரிஷி வால்மீகி, வசிஷ்ட மாமுனி, போதாயணர் என்ற - மூவர் வடமொழியில் ராம காவியத்தை இயற்றியுள்ளனர்; அவர்களுள் முன்னவரான வான்மீகி மகரிஷியின் நூலை ஒட்டியே தாம் இதை இயற்றியதாகக் கூறுகிறார்.மகரிஷி வால்மீகியைப் பின்பற்றியதாக மேலே கூறியவர் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் கதையைப் புகுத்திய புதுமை ஏன் என்பதை இங்கே காண்போம்.
நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்
மொழியின் வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் பேரிடம் வகிக்கும் இந்த நிகண்டுகளும் அகராதிகளும் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி உள்ளன. சொற்களை அழியாமல் காக்கும் கருவூலங்களாக இவை விளங்குகின்றன....
சித்திரக் கவியும் கவிஞர்களும்
சென்னையில் வாழும் பா.சு.ரமணன், எழுத்தாளர். பல ஆன்மிக நூல்களை எழுதி இருக்கிறார். தமிழ் மொழியில் உள்ள சிறப்பு இலக்கிய வகையான ‘சித்திரக்கவி’ குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…
தமிழ் வசன நடை
நூறாண்டுகளுக்கு முன்னர், தமிழில் உரைநடை உருவாகிவந்த காலத்தில் அதற்கு இலக்கணம் இயற்றுகிறார் மகாகவி பாரதி. ” “கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி” என்று கூறும் அவர், ”வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும்” என்கிறார். “உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்று நமக்கு வழிகாட்டுகிறார்....
மக்கள் அரசு எது?
“ஜனநாயக வடிவிலான அரசு நல்ல பலனைக் கொடுக்குமா என்பது, சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மையைப் பொறுத்தது. சமூகத்தில் உள்ள தனி நபர்களின் மனப்பான்மை ஜனநாயகப் பண்புள்ளதாக இருந்தால், ஜனநாயக வடிவிலான அரசு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்” -டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்