காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

காசி புண்ணியத் தலத்தில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்’, காசிக்கும் நமது தமிழ்நாட்டிற்கும் இடையேயான வரலாற்று பந்தத்தைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கே காசி தமிழ் சங்கமம் நடைபெற்றிருக்கிறது.

பண்பாட்டின் அடிச்சுவடு ஏறுதழுவல்

தமிழ்ப் பண்பாட்டில்  ‘ஏறு தழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு முதன்மையான இடமுண்டு. அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, நமது சமுதாயத்தின் வீரத்தையும், கால்நடைச் செல்வத்தின் சிறப்பையும் ஒருங்கே வலுப்படுத்துவதாகத் திகழ்கிறது.

தரணி மகிழ தைமகளே வருக!

அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.

மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…

தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

தேசியமும் தர்மமும் காக்க…

மகாகவி பாரதியை சென்ற ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் சிலர் அவதூறாகப் பேசியபோது ‘தினமணி’ நாளிதழில் ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி அவர்கள் எழுதிய கட்டுரை இது. தற்போதைய தேவை கருதி இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

கருணைக்கடலும் கல்விக்கடலும்- நூல் அறிமுகம்

பொருள் புதிது வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரான கருவாபுரிச் சிறுவன் தொகுத்து எழுதியுள்ள நூல் இது. கருணைக்கடல் ஸ்ரீ கணபதி ஞானதேசிக சுவாமிகள், கல்விக்கடல் ஸ்ரீ குக மணிவாசக சரணாலய சுவாமிகள் ஆகியோரின் வாழ்க்கை சரிதத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறைக்குப் பதிய வேண்டும் என்ற அளப்பரிய அவாவினால் இந்நூலை உருவாக்கி இருக்கிறார்.

பாராட்டுக்குரிய புதிய வேலையுறுதி திட்டம்

நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த  ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இன்றைய இளைஞர்களின் அவசியத் தேவை!

‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் ஆசிரியர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபவர்கானந்த மகராஜ் அவர்களின் கட்டுரை, தேசிய இளைஞர் தினத்தையொட்டி (ஜன. 12), இங்கே இடம்பெறுகிறது…

சீர்திருத்தங்களின் ஆண்டான 2025!

கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவைப் பொருத்த மட்டிலும்  சீர்திருத்தங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சென்ற ஆண்டில் பல துறைகளில் சத்தமின்றி முக்கியமான சீர்திருத்தங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதன்மூலமாக, இந்தியப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் வலுவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

திருக்கார்த்திகையும் தமிழரும்

திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் தொடர்பாக, தினமணி நாளிதழில் சென்ற மாதம் வெளியான ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி அவர்களின் கட்டுரை, பல இலக்கிய ஆதாரங்களைக் கொண்டதாக விளங்குகிறது. தற்போதைய சூழலில் இக்கட்டுரை தேவை கருதி நன்றியுடன் மீள்பதிவாகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அதிகாரிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்தவர்கள் மீது பிப். 2இல் நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையின்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார்

உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதே தமிழகத்துக்கு நல்லது

மாநில அரசு கல்வித்துறையைச் சீரழித்துவரும் தற்போதைய சூழலில், உயர்கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதே நல்லது என்று கூறுகிறார், கல்வியாளரும் பாஜக மாநில துணைத் தலைவருமான பேராசிரியர் ப.கனகசபாபதி....

நீதிபதிக்கு எதிரான புத்தகம்: பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்ற (மதுரை அமர்வு) நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட புத்தகத்தை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஜன. 7இல் உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு – முழு விவரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை, மேல் முறையீட்டு வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்துள்ளது. அத்தீர்ப்பின் முக்கியமான விவரங்கள்:

நீதிமன்றத் தீர்ப்பும் நியாயத்தின் குரல்களும்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஹிந்துக்களின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு. அதுதொடர்பான எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் சிலரின் முகநூல் பதிவுகள்…