புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதை கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டு விட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு’ என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது. கீதை, ஆசிய ஜோதி, மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.....
Author: vamumurali
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 6
சொத்து என்பது இறைவன் கொடுத்தது. அதை அப்படியே தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு போவதற்காகக் கொடுக்கவில்லை. சொத்தின் வலிமையே அதை பிறருக்குக் கொடுப்பதில் தான் உள்ளது என்று கூறுகிறார் மோகன்தாஸ் பை. இவர் சேர்த்ததை விடவும் அதிகம் இவர் கொடுத்தது... 2000-ஆம் ஆண்டில் இஸ்கான் உடன் இணைந்து இவர் செயல்படுத்தியது ‘அக்ஷய பாத்திரம்’ திட்டம். இத்திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுகிறது.
சிவகளிப் பேரலை- 7
அனைத்தும் அவன் செயல் என்பதை அறிந்துகொண்டு, அனைத்துச் செயல்களையும் அவன்பாலே செய்துவிட்டால் பாவ - புண்ணியம் எவ்வாறு நம்மைப் பற்ற முடியும்? நினைப்புதான் நம்மை உயர்த்துகிறது. நினைப்புதான் நம்மைத் தாழ்த்துகிறது. அந்த நினைப்பேயே இறைமயம் ஆக்கிவிட்டால், உலகியல் செயல்களுக்கு நாம் இரையாக மாட்டோம்....
ஆறு துணை
இக்கவிதை, கூட்டுப் பிரார்த்தனைக்கான அற்புதமானதொரு பாடல்.
சிவகளிப் பேரலை- 6
தர்க்கவாதத்திற்குப் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிசங்கரர், பக்திக்கு முன்பு எந்த வாதமும் எடுபடாது, சிவபக்தி ஒன்றே போதும் என்று இங்கே கூறுகிறார். ஞானம் இறைவனோடு ஐக்கியத்தை ஏற்படுத்தினாலும், அது முழுமையடையும் வரையில், தான் என்ற நினைப்பு கூடவே இருக்கும். ஆனால், கனிந்த பக்தியில் தன்னைக் கரைத்துக்கொண்டு இறைவனே எல்லாம் என்பதால், தான் என்ற அகம்பாவம் அடிப்படையிலேயே காணாமல் போய்விடுகிறது.
மூன்று காதல்
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 64வது கவிதை, வித்தியாசமானது. பெண்மையை கலைமகளாகவும் அலைமகளாகவும் மலைமகளாகவும் புனைந்து அவள் மீது மையல் கொண்ட காதலனாக இப்பாடலை எழுதி இருக்கிறார் பாரதி. மூன்றையும் வெவ்வேறு ராகங்களில், ஒரே தாள கதியில் படும் வகையில், பாரதியே மெட்டு அமைத்திருக்கிறார்...
கடவுள் அமைத்து வைத்த மேடை…
திரைப்பாடல் எழுதுவது தனிக்கலை. திரைக்கதைக்கு ஏற்ப எழுத வேண்டும்; இசை அமைப்பாளர் அளிக்கும் மெட்டுக்குப் பொருந்தவும் எழுத வேண்டும். அதில் கவித்துவத்தையும் கொண்டுவர வேண்டும். அதிலும் ரசிகர்கள் விரும்பும் வண்ணமாக சொற்கள் பிரவாகமாக வந்து விழ வேண்டும். அதில் கோலோச்சியவர் கவியரசர். இங்கு நாம் காணும் பாடல், கவியரசரின் கற்பனைவளமும், கவித்திறனும், கதை சொல்லும் பாங்கும் இணைந்த படைப்பு. அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தைப் பாரத்தவர்களுக்கு, இந்தப் பாடலின் காட்சியமைப்பும், பொருத்தமும் புலப்படும். இந்தப் பாடலைப் படிக்கும்போதுதான், நமது இன்றைய திரையுலகத்தின் தர வீழ்ச்சி மீண்டும் மீண்டும் நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது.
சிவகளிப் பேரலை- 5
மிகப் பெரும் ஞானியாகிய ஸ்ரீ ஆதிசங்கரர், அவையடக்கமாய் தம்மை ஏதுமறியாதவர்போலக் காட்டிக்கொண்டு, சிவபெருமானிடத்தே கருணையை இறைஞ்சுகிறார். அவரது அவையடக்கம், பாமர பக்தர்களாகிய நம்மை நினைத்துத்தான். நமக்காக, நம்பொருட்டு, நாம் வேண்டுவதற்காகவே, தம்மை பாமரனாக உருவகித்துக்கொண்டு இந்தப் பாடலை அருளியிருக்கிறார் ஜகத்குரு....
நவராத்திரிப் பாட்டு (2)
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 63வது கவிதை, நவ ராத்திரிக் கவிதை...
எனது முற்றத்தில்… 3
‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாரதி பாடிவிட்டுப் போயிருக்கலாம். பாரதி சொல்வது சரி என்று அத்தாட்சி தருபவர் யார் தெரியுமா, தமிழக சலவைத் தொழிலாளர். பல்வேறு தொழில்கள் செய்வோர் ஆயுத பூஜை அன்று தங்கள் தொழில் கருவியை பூஜித்து வருகிறார்கள். சலவைத் தொழில் செய்பவர்? ஆற்றங்கரை படித்துறை தான் அவரது தொழில் கருவி. எனவே அவர் வைக்கும் பொங்கல் ’துறைப் பொங்கல்’ என்கிறது தமிழ் லெக்சிகன் என்ற பேரகராதி...
சிவகளிப் பேரலை – 4
விஷ்ணுவும் தாமரையில் வீற்றிருக்கும் பிரும்மாவும் சிவபெருமானுக்கு மிக அருகிலே இருந்தும்கூட அவர்களாலும் அறியப்படாத திருவடித் தாமரைகள் சிவபெருமானுடையவை. அத்தகு சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் திருவடிகளை மனத்தால் நினைந்து தொழுவதையே யான் வேண்டுவேன். வேறு தெய்வங்களை நினைத்தும் பாரேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
கலைமகள் மீதான பாடல்கள்
மகாகவி பாரதியில் பக்திப் பாடல்களில் இரு கவிதைகள் (61, 62) கலைமகள் மீதானவை... “ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர்’’ என்று அழைத்து நமக்கு பாரதி இடும் கட்டளைகள் அவரது கல்வி மீதான தாபத்தைக் காட்டுகின்றன...
சிவகளிப் பேரலை – 3
புறநானூற்றில், புலவர் மதுரை மருதன் இளநாகனார், பாண்டியன் நன்மாறனைப் புகழும் பாடலில், “ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி” என்று சிவபெருமானின் திரிபுர தகனத்தை வர்ணிக்கிறார். மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் ஆண் பாம்பை நாணாகக் கொண்டு கணை தொடுத்து முப்புரங்களை எரித்தவர் என்று இதற்குப் பொருள்....
ராதைப் பாட்டு
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 60வது கவிதை, ’ராதைப் பாட்டு’ இது சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட இருமொழிக் கவிதை....
சாந்திக்கு மார்க்கம் – 7
-வ.உ.சிதம்பரம் பிள்ளை 7. பூரண சாந்தியை அடைதல் புறப் பிரபஞ்சத்தில் இடைவிடாத குழப்பமும், மாறுதலும், அமைதியின்மையும் இருக்கின்றன; எல்லாப் பொருள்களின் அகத்திலும் கலைக்கப்படாத சாந்தி இருக்கின்றது; இவ்வாழ்ந்த மௌனத்தில் மெய்ப்பொருள் வசிக்கின்றது. மனிதன் இவ்விரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறான். புற அமைதியின்மையும் ஆழ்ந்த நித்திய சாந்தியும் ஆகிய இரண்டும் மனிதனுள் இருக்கின்றன. மிக மிகக் கொடிய புயல்காற்றும் செல்ல முடியாத மௌன ஆழங்கள் சமுத்திரத்தில் இருப்பதுபோல, பாவமும் துக்கமுமாகிய புயல் காற்றுக்கள் ஒருபோதும் கலைக்க முடியாத தூய மௌன … Continue reading சாந்திக்கு மார்க்கம் – 7