நமது வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான். அதன் விடை என்ன? அதற்கு அர்த்தம் என்ன? பல தொல்லைகள் நிறைந்த இந்த சம்சார சாகரத்தை (வாழ்க்கைக் கடலை) கடப்பதற்கான விடையை, இந்தப் பிறவிப் பிணிக்கு விடை கொடுப்பதற்கான விடையை இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டும் என்பதுதான் நமது வாழ்க்கையின் அர்த்தம். வாழ்வுப் பிணிக்கு விடை கொடுக்கும் அந்த வாழ்வுவிடையை (ஜீவன் முக்தியை) எப்படிப் பெறுவது? சிவபெருமான் மீதான ஆழ்ந்த பக்தியின் மூலம்தான் எந்த பக்தனும், ஜீவன் முக்தனாக முடியும் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....
Author: vamumurali
கோப்பையிலே என் குடியிருப்பு
திரையிசைப் பாடல்களில் சக்கரவர்த்தியான கவியரசு கண்ணதாசன் அவர்களின் சுய வாக்குமூலமாக ‘ரத்ததிலகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது...
பாரதி- அறுபத்தாறு (11-14)
புதிய ஆத்திசூடியில் “ரௌத்திரம் பழகு” (96) என்று சொன்ன அதேபாரதி, தனது சுயசரிதைக் கவிதையான பாரதி-அறுபத்தாறில், பொறுமையின் அவசியம் குரித்து இக்கவிதையைப் படைத்திருக்கிறார். “கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான் கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே”- என்கிறார் இப்பாடலில்.
சிவகளிப் பேரலை – 80
முந்தைய ஸ்லோகத்தில் மென்மையான சிவனின் திருப்பாதங்கள், எமனின் முரட்டு மார்பை எப்படி மிதித்தன? என்று வியந்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தனின் மனம் பல்வேறு எண்ணங்களாலும், அனுபவத்தாலும் கடினமாகத் திகழ்கிறதே, அதில் எப்படி அவர் நடனமிடுவார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலையும் தருகிறார்....
மகாவித்துவான் சரித்திரம்- 1(6)
இவர் சில அன்பர்களுடன் ஒரு தினம் திருவானைக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காகப் புறப்பட்டுக் காவிரியின் தென்பாலுள்ள ஓடத்தில் ஏறியபொழுது உடனிருந்த சிதம்பரம்பிள்ளை யென்னுங் கனவான் இவரை நோக்கி ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் மீது ஒரு மாலை இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்; அப்பொழுது உடன் சென்றவருள் ஒருவர், "முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஒருமுறை வருவதற்குள் சோணசைலமாலையைப் பாடிமுடித்தது போல் நீங்கள் சம்புநாதரைத் தரிசனஞ் செய்து திரும்புவதற்குள் அம் மாலையைச் செய்வதற்கு இயலுமா?" என்று கேட்டார். இவர் நேருமானாற் செய்யலாமென்று சொல்லிப் பாடத்தொடங்கி, எழுதியும் எழுதுவித்துக்கொண்டும் சென்று கோயிலுக்குப்போய்த் தரிசனம் செய்த பின்பு, சில நாழிகை அங்கே ஓரிடத்தில் தங்கிப் பாடல்களைச் செய்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வீடுவந்து சேர்வதற்குள் அந்நூலை முடித்தனரென்று சொல்வார்கள்.
சிவகளிப் பேரலை- 79
எமனின் முரட்டு மார்பை மிதித்ததனால் சிவனே, உனது மென்மையான பாதங்கள் வலிக்கின்றனவா? அவற்றை என் முன்னே காட்டிடுவாய், எங்கும் நிறைந்தவனே (விபோ), அவற்றை எனது கரங்களால் பிடித்து விடுகிறேன் என்று இந்தப் பாடலில் கொஞ்சுகிறார் ஆதிசங்கரர்.
எனது முற்றத்தில் – 14
குருக்ஷேத்திர பகவத் கீதை முற்றோதல் நடத்திய ஆந்திர அன்பரைப் பற்றி சொல்லத் தொடங்கி அவர் குடும்பம் பற்றி விவரித்து … தமிழில் எழுதிக்கொண்டே போகும்போது, பாரத கலாச்சார வியாபகம் எவ்வளவு அபார சக்தி கொண்டது என்பது உறைத்தது. மாநில வேலிகள் எல்லாம் எங்கோ கரைந்து மறைய… (இந்த சம்பவச் சங்கிலியில் அமெரிக்காவும் ஒரு களம் என்பதால்) உலகு தழுவிய பாரதீய கலாச்சாரம் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது. ....
பாரதி- அறுபத்தாறு (7-10)
-மகாகவி பாரதி பாரதி அறுபத்தாறு (7-10) அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே, சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே. நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். 7 சினத்தின் கேடு சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் .செத்திடுவா ரொப்பாவார்; … Continue reading பாரதி- அறுபத்தாறு (7-10)
சிவகளிப் பேரலை- 78
பக்தியினால் பக்தனின் மனது அல்லாடுவதை முந்தைய ஸ்லோகத்தில் விவரித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், புதிதாகத் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண்ணைப்போல பக்தனின் புத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்....
பாரதி – அறுபத்தாறு (1-6)
-மகாகவி பாரதி முன்னுரை:மகாகவி பாரதியின் சுயசரிதை பிரிவில் ‘பாரதி-அறுபத்தாறு’ கவிதை இடம்பெற்றிருப்பது இதிலுள்ள சுய விளக்கங்கள் காரணமாகவே. மரணத்தை வெல்லும் வழியில் “பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!” என்று முழங்குகிறார் பாரதி (பாடல்- 6). முன்னதாக, சோக அடவியில் புகவொட்டாமல் துய்ய செழுந்தேன் போல கவிதை எழுதும் அறிவை தனக்கு பராசக்தி தந்ததாக்க் (பாடல்- 3) கூறுவார் பாரதி. எனவேதான் இக்கவிதைகள் தன்வரலாற்றுப் பிரிவில் சேர்க்கப்படுகின்றன.மானுடரை அழிக்கும் அசுரர்கள், பொறுமையின் பெருமை, ”எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் … Continue reading பாரதி – அறுபத்தாறு (1-6)
சத்திய சோதனை- 3(6-10)
சலவைத் தொழிலாளிக்கு அடிமையாக இருப்பதிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போலவே க்ஷவரத் தொழிலாளியை எதிர்பார்ப்பதையும் போக்கிக்கொண்டு விட்டேன். இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் எல்லோரும் க்ஷவரம் செய்து கொள்ளவாவது கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான் அறிந்தவரையில், தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக் கொள்ளுவது என்பதை யாரும் கற்றுக் கொண்டதில்லை. நான் இதையும் கற்றுக்கொண்டு விட வேண்டியதாயிற்று. நான் ஒரு சமயம் பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர் ஒருவரிடம் முடி வெட்டிக்கொள்ளப் போனேன். அவர், அதிக வெறுப்புடன் என் தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டார். எனக்கு இது அவமரியாதையாக இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை வாங்கினேன். கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என் தலைமுடியை கத்தரித்துக் கொண்டேன் முன் முடியை வெட்டுக்கொள்ளுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். “உமது தலை முடிக்கு என்ன ஆபத்து வந்தது, காந்தி? எலிகள் ஏதாவது வேலை செய்துவிட்டனவா?” என்று கேட்டனர்.
சிவகளிப்பேரலை- 77
சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலே தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் ஏக்கம் மிகப் பாங்குடன் விவரிக்கப்பட்டிருக்கும். இத்தகு சங்கத் தமிழ் இலக்கிய நயத்துடன், சம்ஸ்கிருத செய்யுளை (ஸ்லோகத்தை) யாத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...
மகாவித்துவான் சரித்திரம்- 1(5)
இவர் புத்தகங்களைத் தேடுகையில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில், திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாகிய ஸ்ரீ கச்சியப்ப முனிவராற் செய்யப்பெற்ற நூல்களுள் ஒன்றாகிய திருவானைக்காப் புராணம் கிடைத்தது. அதை முறையே படித்து வருகையில் கடவுள் வாழ்த்தின் அழகும், நாட்டுச்சிறப்பு முதலிய காப்பிய உறுப்புக்களின் அமைதியும், அவற்றிற் பழைய நூற் பிரயோகங்களும், இலக்கண அமைதிகளும், தம்மால் அது வரையில் அறியப்படாத சைவ சாஸ்திரக் கருத்துக்களும், சைவ பரிபாஷைகளும், புதிய புதிய கற்பனைகளும் நிறைந்து சுவை ததும்பிக் கொண்டிருத்தலையறிந்து இன்புற்றுப் பன்முறை படித்து ஆராய்ச்சி செய்வாராயினார். அதைப் படிக்கப் படிக்க அதுவரையிற் படித்த பல நூல்களினும் வேறு தலபுராணங்களினும் அது மிக்க சுவையுடையதென்று அறிந்துகொண்டார். பின்னர், கச்சியப்ப முனிவர் செய்த வேறு நூல்கள் எவையென்று ஆராய்ந்து தேடிய பொழுது, விநாயக புராணத்தில் சில பகுதிகளும், பூவாளூர்ப் புராணமும், காஞ்சிப் புராணமும் கிடைத்தன. அந்த நூல்களையும் வாசித்து இன்புறுவாராயினர். ...
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடையது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி. இங்கே உள்ளது சிட்டுக்குருவி குறித்த அவரது உரைநடைப் பதிவு....
காற்றிடைச் சாளரம்- 15
திருமுடி சூடிய மலரொன்று திருவடி பட்டுத் தெறித்தது. -கவித்துவம் தரிசனமாகும் இடம்....