பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜடாயு, இலக்கிய ஆர்வலர்; ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்; கம்பனில் தோய்ந்தவர். வாமனாவதாரம் குறித்த கம்ப ராமாயணச் செய்யுள்களை விளக்கி, தமிழ் ஹிந்து இணையதளத்தில் இவர் எழுதிய அற்புதமான ஆய்வுக் கட்டுரை இங்கே...
Author: vamumurali
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்
தமிழகத்தின் சமகால பாரதீய சிந்தனையாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத்தக்கவர்; ஆழி பெரிது, ஹிந்துத்துவம்- ஓர் எளிய அறிமுகம், உடையும் இந்தியா, நம்பக்கூடாத கடவுள்- உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; சமரசமில்லாமல் உண்மைக்குக் குரல் கொடுப்பவர். ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராக இவர், தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
சுடரொளி தொடரும்! (கவிதை)
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதியுள்ள உருவகக் கவிதை இது. சுடரொளி தொடர இறைவனைப் பிரார்த்திப்போம்! சிறு சுடரொளி மட்டுமல்ல, அக்கினிக்குஞ்சு இது.
பொழில்வாய்ச்சியின் எழில் கோயில்
சிற்பக்கலை ஆர்வலரும், கானுயிர் புகைப்படக் கலைஞருமான, பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ், கணினிப் பொறியாளரும் கூட. நாடு முழுவதும் உள்ள தொன்மையான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை புகைப்படத்தில் பதிவு செய்யும் அரும்பணி ஆற்றிவரும் இவரது சிற்பக் கட்டுரை இங்கே....
காலந்தோறும் பாரதி
மாணவர்களுக்கு பள்ளிப்பாடம் மட்டும் கற்பிக்காமல், புத்தகத்துக்கு வெளியில் உள்ள ஞானத்தையும் கற்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கும் அரசுப் பள்ளி ஆசிரியரான திரு. ஜி.இ.பச்சையப்பன், சமூக ஊடகத்தில் தீவிரமாகச் செயலாற்றுபவர். மகாகவி பாரதி குறித்த இவரது கட்டுரை இங்கே…
சத்திய சோதனை- 4 (42-47)
பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக் கொடுத்துத் தயார் செய்வோன் என்றோ என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக, எனக்கு ஒரு பெயர் ஏற்பட்டு என்னிடம் பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டுவந்து, சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு வக்கீல்களை அமர்த்திக் கொள்ளுவார்கள்.
கொன்றைவேந்தன் (36-40)
தாயின் பாதங்களே கோபுரங்கள். சீவனைச் சுமக்கும் தாயின் கருவறையே தெய்வம் குடியிருக்கும் கர்ப்பக்ருஹம். கோயில்கள் ஆன்மிகத்தோடு பாரம்பரியக்கலைகளையும் பாதுகாக்கும் பொக்கிஷங்கள். தாயும் அதுபோல நமக்கு ஜீவன் கொடுப்பதோடு பாரம்பரியக் கலைகள், அறிவையும் நமக்கு ஊட்டுகிறார்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(1)
ஆங்கிலேய ஆட்சிக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பியவர் பூலித்தேவன். 1757-இல் இவர் கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்துப் போராடி உயிரை விட்டார்....
கொன்றைவேந்தன் (31-35)
சேமம் என்றால் பாதுகாவல், காவல், அரண், சிறைச்சாலை, சேமிப்பு, நலம் எனப் பலபொருள் உள்ளது. அபாயங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் அரண், கோட்டை அல்லது கட்டுக்காவல் மிகுதியான இடத்தில் சென்று இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோதிலும் தூக்கத்துக்குரிய நள்ளிரவு நேரத்தில் கவலைகளை மறந்து அல்லது சற்றுநேரம் ஒத்திவைத்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு வழங்கும் உறக்கம் என்பது ஊக்கம் தரும் மருந்து போன்றது. உரியநேரம் உறங்காவிடில் உடலியல், உளவியல் பிரச்னைகள் தோன்றும். கவலைகளை மறக்க தூக்கம் சரியாக இருக்க வேண்டும்.
மகாவித்துவான் சரித்திரம் -2(2)
என்னுடைய இயற்பெயர் வேங்கடராமனென்பது; அதுவே சர்மா நாமம். இவரிடம் என் தந்தையார் சொல்லியதும் வேங்கடராமனென்பதே. அப்பெயராலேயே என்னை அழைத்துவந்த இவர் சில தினங்களுக்குப்பின் ஒருநாள் என்னை நோக்கி, "வீட்டார் உம்மை அழைப்பது இந்தப் பெயராலேயா? அன்றி உமக்கு வேறு பெயருண்டோ?" என்று கேட்டார். நான், "வேங்கடராமனென்பது மூதாதையின் பெயராதலின் தாய் தந்தையர்கள் அவ்வாறு அழையாமல் சாமிநாதனென்பதன் திரிபாகிய 'சாமா' என்று அழைப்பார்கள்" என்றேன். "சாமிநாதனென்ற பெயரே நன்றாக யிருக்கிறது. இனி அப்பெயராலேயே உம்மை அழைக்கிறேன்!” என்று கூறி அன்றுமுதல் அப்பெயராலேயே அழைத்து வருவாராயினர். இவருடைய விருப்பத்தின்படி பிறரும் அங்ஙனமே செய்துவந்தார். அப்பெயரே நிலைத்துவிட்டது....
தாஸியும் செட்டியும்
பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை ‘சுதேச மித்திரன்’ காரியாலயமே நடத்தி வந்த ‘கதாரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.
கொன்றைவேந்தன் (26-30)
பத்து மாதம் வயிற்றிலே சுமந்து வலிதாங்கி பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோடு அதன்பின் பல மாதங்கள் பாராட்டிச் சீராட்டியும் இன்னல்களைத் தாங்கிக்கொண்டும் வளர்த்து ஆளாக்குபவள் தாய் தானே! ஆகையால் தம் மக்களைச் சான்றோர் எனக் கேட்பதில் தாய்க்கே பெருமை அதிகம்.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(10)
1857-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வங்காளத்தைச் சேர்ந்த பாரக்பூரில் இந்திய சிப்பாய் மங்கள் பாண்டேயால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சித் தீ, அங்கிருந்து அம்பாலாவுக்கும், அங்கிருந்து தில்லிக்கும் பரவி, மீரட்டில் சிப்பாய்கள் ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்க, அந்த மாவீரர்கள் அங்கிருந்து தில்லிக்குச் சென்று அங்கு வெள்ளைக்காரர்களால் ஒதுக்கப்பட்டு செங்கோட்டையின் ஒரு ஓரமாக வசித்து வந்த கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவை இந்தியாவின் மன்னராகப் பிரகடனப்படுத்தினார்கள்....
தமிழ்
“இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும்” -மேற்படி சாட்டையடி வார்த்தைகள் மகாகவி பாரதியின் எழுதுகோலில் வெளிவந்தவை. காரணம் என்ன? படியுங்கள், தொடர்ந்து....
கொன்றைவேந்தன் (21-25)
குரு என்றால் வழிகாட்டி. ஆச்சார்யர் என்றால் வழிநடத்துபவர். ஆசிரியர் என்றால் ஆசுகளை அதாவது குறைகளைக் களைபவர். ஆகவே தகுந்த ஆசான் மூலம் பெறுகின்ற அறிவும், பயிற்சியுமே கல்வி ஆகும். அந்தக் கல்வியே நம்மை வழிநடத்துகின்ற மெய்ப்பொருளாகும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ஔவையார்.....