பாஞ்சாலி சபதம் -1.1.4

காப்பிய இலக்கணப்படி, ஹஸ்தினாபுர மன்னனை மகாகவி பாரதி அறிமுகம் செய்கிறார் இந்தப் பகுதியில்... துரியோதனன் இக்காப்பியத்தின் எதிர்நாயகன் ஆயினும் அவனது வல்லமையை எடுத்தியம்புகிறார் கவி.

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 7

காஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்றடைகிறது. ராமானுஜரும் நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து கேரளதேசம் சென்று அங்கு திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனை சேவித்துவிட்டு வடக்கே தனது யாத்திரையை மேற்கொள்கிறார்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(7)

அந்த மாநாடு தொடங்கும் வரை காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்த சி.ஆர்.தாசும், லாலா லஜபதி ராயும்,  மாநாடு தொடங்கியதும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து முன்மொழியவும், வழிமொழியவும் ஒப்புக் கொண்டார்கள். இந்த மாநாட்டில் காந்திஜிக்கு பலத்த ஆதரவு காணப்பட்டது.

பாஞ்சாலி சபதம் – 1.1.3

குருவம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் சிறப்பை வர்ணிக்கும் பாடல்களுடன் பாஞ்சாலி சபதத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி. காப்பிய இலக்கணத்தின்படி, ஊர்ச் சிறப்புடன் தொடங்குதல் மரபு.

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 6

பிறகு ஒருநாள் திருகோஷ்டியூரில் குடிகொண்டிருந்த எம்பெருமான் ஆலயச் சுவரில் ஏறி அமர்ந்துகொண்டு “எம்பெருமானின் பரம பக்தர்களே ! அனைவரும் இங்கே வாருங்கள். இந்த அற்ப மானுடப் பிறவி முடிந்த பின்னர் நீங்கள் வைகுந்தம் செல்ல நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்” என்று அழைத்தார்....

மகாவித்துவான் சரித்திரம்- 2 (6அ)

கவிஞர்களுடைய பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி அன்று போல நான் நேரிற் பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப்பிரவாகம் பெருகிக்கொண்டிருப்ப அதனைக் காதினாற்கேட்டும் கையினாலெழுதியும் மனத்தினாலறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதற்கரியது....

பாஞ்சாலி சபதம் – 1.1.2

பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி வந்தனப் பாடல் இது...

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 5

உண்மையில் அந்த சாதிபேதம் பார்க்கும் குணம் தஞ்சமாம்பாளை அழித்தது என்றே சொல்லலாம்.மீண்டும் ஒருமுறை ஆளவந்தாரின் சீடரான பெரியநம்பியிடமும் இவ்வாறே நடந்துகொள்ள நேரிட அதுகண்டு பொறுக்காமல் இராமானுஜர் தஞ்சமாம்பாளை அவருடைய பிறந்தவீட்டில் கொண்டு விட்டு துறவு மேற்கொள்கிறார்.

விவேகானந்த பரமஹம்சமூர்த்தி

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, பாரதத்தின் ஞான ஒளியாம் சுவாமி விவேகானந்தருக்குச் சூட்டிய அற்புதமான புகழாரம் இக்கட்டுரை.‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்- என்கிறார் இக்கட்டுரையில்...

பாஞ்சாலி சபதம் – 1.1.1

பாஞ்சாலி சபதம் காப்பியத்தின் முதல் பாகம், பிரம்ம ஸ்துதியுடன் தொடங்குகிறது...

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4

தன்னுடைய துவைதக் கோட்பாடுகளை தனியாக ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற பெயருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபிப்பதற்கு யாதவப்பிரகாசர் ஒரு கருவியாக இருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படி ஸ்தாபிப்பதற்கு ஸ்ரீ ராமானுஜர் தனது உயிரைப் பணயம் வைக்க நேர்கிறது. இந்த உயிர்ப் பணயம் இவரது வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது.....

பாஞ்சாலி சபதம் – முகவுரை

பழம்பெரும் இதிகாசமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, பெண்ணுரிமைக் காப்பியமாக தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே ‘பாஞ்சாலி சபதம்’. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த அற்புதமான படைப்பு இது. இலக்கிய நயமும் கவிநயமும் கொண்ட இனிய கவிதைகளால் அமைந்த காப்பியம் இது. ‘பாஞ்சாலி சபதம்’ இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் முதல் பாகத்தில் - சூழ்ச்சி சருக்கம், சூதாட்டச் சருக்கம், இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களில் 412 பாடல்கள் உள்ளன. இந்நூல் நமது தளத்தில் தொடராக வெளியாகிறது...

சமுதாயச் சிற்பி ராமானுஜர் -3

பெரும் மகான்களின் வாழ்க்கையை உற்று நோக்கும்போது அவர்கள் பெரும்பாலும் தமது கோட்பாடுகளை நிறுவ வாதத்திறமையை வளர்த்துக் கொள்வதோடு புத்திசாதுரியத்தால் தங்களது இன்னுயிரையும் காத்துக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அப்படி ஒரு நிர்பந்தம் இராமானுஜர் வாழ்வில் ஏற்பட்டது. அதுவும் தான் பாடம் கற்றுக் கொண்ட குருவிடமிருந்தே வந்தது.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(6)

ராஜ துவேஷ குற்றச்சாட்டின் பேரில் திலகருக்கு 6 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டு இவர் பர்மாவில் இருந்த மாண்டலே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மாண்டலே சிறைக்கு இவரை ‘ஹார்டிஞ்ச்’ எனும் பெயருடைய கப்பலில் கொண்டு சென்றனர். அதே காலகட்டத்தில் இவருடைய தீவிரவாத காங்கிரசில் அங்கம் வகித்த அரவிந்த கோஷ், வ.உ.சி. ஆகியோரும் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது....

ஸ்வாமி விவேகாநந்தரின் தேசபக்தி

மகாகவி பாரதி,  தான் நடத்திய இந்தியா பத்திரிகையில் எழுதி வெளியிட்ட செய்தி இது. இந்தியா – 28.08.1906  இதழில் 5-ஆம் பக்கத்தில் இச்செய்தி வெளியாகி உள்ளது.