பூஜ்யஸ்ரீ சுவாமி யதாத்மானந்தர் ராமகிருஷ்ண மடத்தின் துறவி; சேலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இக்கட்டுரை சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது எழுதப்பட்டது….
Author: vamumurali
பாஞ்சாலி சபதம் – 1.2.6
வெல்ல முடியும் என்ற எண்ணம் வரவழைப்பதே சூதாட்டத்தின் முதல்படி. அவ்வாறே, தருமனுக்கு சகுனி ஆசைவார்த்தை கூறுவதாக இப்பாடல்களை அமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...
மகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை
மகாகவி பாரதியின் புகழ் பரப்பிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் ‘தினமணி’யில் பத்தாண்டுகளுக்கு முன், பாரதி நினைவுநாளில் எழுதிய கட்டுரை இது. பாரதியின் பிறந்த நாளை ஒட்டி இன்று மீள்பதிவாகிறது…
சத்திய சோதனை- 5(31-35)
நவஜீவன், எங் இந்தியா பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதை ஆரம்பத்திலிருந்தே மறுத்துவிட்டேன். இதனால் அப்பத்திரிகைகள் எந்த நஷ்டத்தையும் அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக, அப்பத்திரிகைகள் சுதந்திரமாக இருந்துவருவதற்கு என் தீர்மானம் பெரிய அளவுக்கு உதவியாக இருந்தது என்பதே என் நம்பிக்கை.
பாஞ்சாலி சபதம்- 1.2.5
சூதாட அழைத்த சகுனிக்கு, ‘அது அறமன்று’ என தருமன் அவையில் மறுப்புரை கூறுவதாக மகாகவி பாரதி எழுதுகிறார்...
மக்கள் சேவையே மகேசன் சேவை
கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த அமரர் திரு. கி.சூரியநாராயண ராவ் (1924- 2016), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகராக வழிகாட்டியவர். சுவாமி விவேகானந்தர் கூறிய வழியில் நாட்டைப் புனரமைப்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணம் செய்தவர். தேசிய சிந்தனையாளர்; நாட்டு முன்னேற்றத்துக்கான பல நூல்களை எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது அரிய கட்டுரை இங்கே…
என் தந்தை
மகாகவி பாரதியின் இளைய மகள் சகுந்தலா. இவரை மகாகவி ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார். பாரதியாரின் அன்பு மகள் தன் தந்தையைப் பற்றி ‘என் தந்தை’ எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளைக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை, மகாகவி பாரதியின் பிறந்த நாளை ஒட்டி, இங்கே காண்போம்.
காசி தமிழ் சங்கமம்: ஒரு மகத்தான அனுபவம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாரனாசியில், நவம்பர் 17-இல் தொடங்கி ‘காசி தமிழ்ச் சங்கமம்’ டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெறுகிறது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவரான விஜயபாரதம் துணை ஆசிரியர் திரு. சந்திர.பிரவீண்குமாரின் அனுபவங்கள் இவை...
என்ன செய்தார் விவேகானந்தர்?
ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த சிறு பதிவின் மொழிபெயர்ப்பு இது.
பாஞ்சாலி சபதம் – 1.2.4
அஸ்தினாபுர அரசவைக்கு பாண்டவர் வந்து அமர்ந்ததும், கவறாட்டத்தில் இணையற்ற புகழுடையவனான சகுனி தருமனை சூதாட்டத்துக்கு அழைக்கிறான். வில்லுறு போரில் வென்றவர்களான நீங்கள் வல்லுறு சூதுப்போரிலும் வெல்ல வேண்டும் என்று சகுனி அழைப்பதாக மகாகவி பாரதி கவிதை புனைகிறார்...
ஸ்வதந்திர கர்ஜனை – 2(13)
சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது லாகூரில் ஒரு மாபெரும் ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றார் லாலா லஜபதி ராய் என்பதை முன்பே பார்த்தோமல்லவா? அந்த ஊர்வலத்தைத் தடிகொண்டு தாக்கிய சார்ஜண்ட் ஜான் சாண்டர்ஸ் என்பான் லாலாஜியை கண் மண் தெரியாமல் மார்பில் அடித்ததில் அவர் உயிருக்குப் போராடி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தக் கொடுமையை அறிந்த, அப்போது லாகூர் பல்கலைக் கழகத்தில் தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பகத் சிங், சுக்தேவ் தாபர், சந்திரசேகர ஆசாத், ஷிவ்ராம் ராஜகுரு எனும் நான்கு மாணவர்கள் லாலாஜியைக் கொன்றதற்கு பழிவாங்க வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டனர்.
சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம்
பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரம்பரையில் வந்த துறவி; சுவாமி மதுரானந்தரிடம் தீட்சை பெற்றவர். குமரி மாவட்டம், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர். குமரி மாவட்டத்தில் மாபெரும் ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுவாமிஜி, தமிழகம் முழுவதும் ஹிந்து சமய வகுப்புகளை - அதற்கென ஒரு பாடத்திட்டம் உருவாக்கி - நடத்தி வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இனிய கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம்- 1.2.3
மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந் துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி...
இந்தியாவின் ‘பீம ஸ்மிருதி’
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் (நேஷனல் கமிஷன் ஃபார் சஃபாய் கரம்சாரிஸ் – என்சிஎஸ்கே) என்ற அரசு சார் அமைப்பின் தலைவரான திரு. ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது…
அன்பு, அறிவு, ஆற்றலின் உருவம் சுவாமி விவேகானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி சந்திரசேகரானந்தர், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் துறவி. தேவிப்பட்டினத்தில் உள்ள தபோவன மடத்தின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்திக் கொண்டாட்டத்தின் போது இவர் எழுதிய கட்டுரை இது….