பகவத் கீதை – மூன்றாம் அத்தியாயம்

இரண்டாம் அத்தியாயமான ஸாங்கிய யோகத்தில் ஞான (புத்தி) யோக மார்க்கத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணன், மூன்றாவது அத்தியாயமான கர்ம யோகத்தில், “தொழில் செய்வது மட்டுமே உன் கடமை” என்று நினைவூட்டி, போர்த்தொழில் புரியுமாறு ஏவுகிறார். இதனை  “கர்மங்களைச் செய்யும்போது, ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும் ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடைய பிரீதிக்காகவே செய்கிறோம்’  என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்” என்று மகாகவி பாரதி உரைவிளக்கத்தின் உள்ளடக்கத்தில் கூறுகிறார்…

அகமும் புறமும் -4

‘பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை’ எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்றுமேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்த வரை மிகுதியாக வேண்டும்.

மகாபாரதம் – மாபெரும் உரையாடல்: நூல் அறிமுகம்

மஹாபாரதத்தில் இல்லாததே இல்லை என்று பொதுவாய்ச் சொன்னாலும், அதன் மையக் கருத்து எதுவென்று பார்த்தால், தர்மம் என்றால் என்ன, மாறிவரும் காலத்தில், தர்மத்தை மனிதன் எவ்விதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை விரித்தும், அக்கறையோடும் சொல்வதைப் போலத்தான் தெரிகிறது. இந்த மாபெரும் கதையைப் பற்றி எல்லா மொழிகளிலும் நிறைய நூல்கள் வெளிவந்து விட்டன. இன்னும் நிறைய வரும். அந்த நூல்களில், ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ள ‘மகாபாரதம் - மாபெரும் உரையாடல்’ என்னும் நூல் தொடர்ந்து மின்னும்.

விவேகானந்தர் கனவு கண்ட புதுமைப் பெண்!

பெண்மையை தெய்வீகத்துக்கு ஒப்பிட்டால், அதை இயற்கையோடும் ஒப்பிடலாம். தவறில்லை. இயற்கையின் சுழற்சியை வலுக்கட்டாயமாக சிதைப்பதால், இயற்கையே சிதைந்து சின்னாபின்னமாவதைப் போல, பல்வேறு காரணங்களினால் பெண்மை அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிதைக்கப்படும் போது பெண்மை வெடித்துச் சிதறுவதையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

பகவத் கீதை – இரண்டாம் அத்தியாயம்

போர்க்களத்தே சஞ்சலமுடையவனாகத் தளர்ந்து அமர்ந்த தோழன் அர்ஜுனனுக்கு சாரதியாக வந்த இறைவன் அறிவுரை கூறி, அவனை போருக்கு ஆயத்தப்படுத்துகிறான். இதுவே கீதையின் தோற்ற விளக்கம். இதில் மனித இயல்பின் போராட்டங்களை விளக்கும் கண்ணனின் உபதேசம், இந்நூலை ஞான இலக்கியமாக்குகிறது. கீதையின் இரண்டாவது அத்தியாயம் ஞானம் தொடர்பான சாங்கிய யோகமாக (சாங்கியம் = ஞானம்) இயல்கிறது. மகாகவி பாரதி தனது கீதை உரைக்கு முன்னதாக சுருக்கமான விளக்கம் அளித்திருப்பதும் கவனித்தற்பாலது…

இரக்கமற்ற இளஞ்சிவப்புப் புரட்சி!

‘கோமாதா எங்க குலமாதா’ என்று பாடினால் போதாது. வயதான காலத்தில் அதைப் பேணுவதும் நமது கடமை. உழவனின் தோழனான காளையையும் அவ்வாறே நாம் காக்க வேண்டும். இந்த நன்றி உணர்ச்சியை மறக்க மறக்க, நாம் மரத்துப் போன சமுதாயம் ஆவோம். அதன் தொடர் விளைவுகளாக முதியோர் இல்லங்கள் பெருகும். பிறகு நமக்கு என்றும் மீட்பில்லை.

PM Modiji’s Speech at Sri Ramkrishna Math, Chennai

PM’s address at 125th Anniversary celebrations of Shri Ramakrishna Math in Mylapore, today (08.04.2023)...

பகவத் கீதை- முதல் அத்தியாயம்

போர்க்களத்தே வில்விஜயனுக்கு மெய்ஞானம் உரைத்த கண்ணனின் உபதேசமே பகவத் கீதை. இது, மகாபாரதம் காப்பியத்தின் ஒரு பகுதியாக வருகிறது. போரின் முதல்நாள் இருதரப்பின் அணிவகுப்பை அடுத்து போ தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்த்தரப்பில் நிற்கும் பாட்டனார், சகோதரர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் ஆகியோரைக் கண்டு சஞ்சலமடையும் பாண்டவர் அணியின் தளபதியான பார்த்தன், ‘போர் தேவையா?’ என்று மனம் குழம்புகிறான்; தனது உற்ற தோழனும் சாரதியுமான கண்ணனிடம் வினவுகிறான். இதுவே  ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்ற இந்த முதல் அத்தியாயத்தின் உள்ளடக்கம் ஆகும். கீதையில் எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே தமிழிலும் சுலோகவாரியாக மகாகவி பாரதி, மொழிபெயர்த்துச் செல்கிறார்....

உலகம் பிறந்தது எனக்காக!

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் இப்படத்தின் நாயகன்; சிறுவயதில் அறியாமல் செய்த தவறால் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டவன்; விடுதலையாகி, ஆதரவற்றவனாக வெளிவரும்போது, சிறைப்பட்ட பறவையின் விடுதலை உணர்வுடன் அவன் பாடும் பாடல் இது. பாசத்துக்கு ஏங்கும் தவிப்பையும், உலகை ரசிக்கத் தயாராகும் துடிப்பையும், ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்ற முதல் வரியிலேயே சொல்கிறான். திரைப்படத்துக்கேற்ற காவிய வரிகளை வார்த்திருக்கிறார் கவியரசர்...

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 13)

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது....

ஒரு பிரமுகர்

கட்டெறும்பை கதாநாயகனாகக் கொண்ட இந்தச் சிறுகதை ஒரு நையாண்டிக் கதை என்பது கதையின் தலைப்பைப் பார்க்கும்போதே தெரிந்திருக்கும். நேரடிக் கதை சொல்வதில் மட்டுமல்ல, உருவகக் கதையிலும் ஜெயகாந்தன் தனது சமூகப் பார்வையை முன்வைக்கிறார்...

அனுமன் எழுகின்றான்! (கவிதை)

இன்று அனுமன் ஜயந்தி. பக்தி மற்றும் சக்தியின் அடையாளமான அனுமனை வணங்குவோம்! பத்திரிகையாலளர் திரு. வ.மு.முரளியின் கவிதை இங்கே...

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 11-12)

‘அஹிம்ஸா பரமோ தர்ம’: ‘கொல்லாமையே முக்கிய தர்மம்’ என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு!

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியான அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி அபிராமானந்த மகராஜ் அவர்களின் நான்காவது ‘விவேகானந்தம்’ கட்டுரை, வெளிநாடுவாழ் இந்தியரான திரு. மஹா சின்னத்தம்பி குறித்த ஓர் அற்புதமான நூலுக்கான அறிமுகம்...

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 10)

மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு - ஒரே சத்துரு - அவனுடைய சொந்த மனமேயாம். ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.