லண்டனிலிருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை இந்திய விரோதமாக எழுதுவது இன்று ஏதோ புதியதல்ல, மகாகவி பாரதி காலத்திலேயே இப்படித்தான் அந்தப் பத்திரிகை செயல்பட்டிருக்கிறது. அதற்கு அப்போதே பதிலடி கொடுத்திருக்கிறார் மகாகவி...
Tag: பாரதி உரைநடை
வெறும் வேடிக்கை
ஆரிய- திராவிட இன வேற்றுமை என்ற பொய்க்கதையை கிறிஸ்தவப் பாதிரிகள் பரப்ப ஆரம்பித்த தொடக்க காலத்திலேயே அதைக் கண்டித்திருக்கிறார் மகாகவி பாரதி. இந்தியாவில் உள்ள ஜாதி பேதத்துக்கு பிராமணர்களைக் காரணமாக பிரசாரம் செய்து, பிராமணர்களுக்கும் பிற ஜாதியினருக்கும் பகையை ஏற்படுத்தும் கிறிஸ்தவ சதியை 1920-இல் எழுதிய தமது கட்டுரையில் அம்பலப்படுத்தி இருக்கிறார் இதழாளர் பாரதி... இன்றும் இதுதானே நிலைமை?
தமிழ்நாடே சரியான களம் (தமிழ் நாட்டின் விழிப்பு)
“உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. ‘இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே’ யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு” - ஆஹா, என்னே, மகாகவி பாரதியின் உலகநேய சிந்தனை!
தொழில்
தொழில் சிறப்பு குறித்த சான்றோரின் மேற்கோள்களை முதல் பகுதியில் குறிப்பிட்டு, அதற்கு இரண்டாம் பகுதியில் விளக்கம் அளிக்கிறார் காளிதாஸன் (எ) மகாகவி பாரதி. “முயற்சி யிருந்தால் பயமில்லை. முயற்சி யுண்டானால் வெற்றியுண்டு. முயற்சி உடையவனுக்கு விடுதலை கைகூடும்” என்று அறிவுறுத்துகிறார்...
குடிப்பாங்கு
பிரிட்டனில் வெளியான ‘நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியை சுதேசமித்திரன் வாசகர்களுக்கு தமிழில் பெயர்த்து வழங்கும் மகாகவி பாரதியின் மொழித்திறனும், இதழியல் கடமை உணர்வும், அவற்றை விஞ்சும் உலக அரசியல் நுண்ணுணர்வும் நம்மை வியக்கச் செய்கின்றன. இச்செய்தியை தமிழர்களுக்கு அளிக்க, நம்மவர்கள் அரசியல் அறிவு பெறுவது அவசியம் (அப்போதுதானே சுதந்திரப் போரில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்?) என்ற எண்ணமே காரணம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும்.
ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்
பிரான்ஸ் நாட்டின் லட்சிய முழக்கம் - ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம். பிரெஞ்ச் இந்தியாவில் புகலிடம் தேடிச் சென்று, புதுவையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகையை (10.19.1908 – 17.05.1910) நடத்திய மகாகவி பாரதியை, பிரான்ஸ் தேசத்தின் பிரதானக் குறிக்கோளான ‘ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவை கவர்ந்ததில் வியப்பில்லை. இதுகுறித்து ‘இந்தியா’ பத்திரிகையின் மூன்று இதழ்களில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகள் இவை....
விளக்கு
‘சக்திதாஸன்’ என்ற பெயரில், சுதேசமித்திரன் இதழில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரை இது. கல்வி வளர்ச்சியே சமுதாயத்தின் வழிகாட்டும் விளக்கு என்று இக்கட்டுரையில் அறிவுறுத்துகிறார் பாரதி.
கிரேக்க தேசத்தின் ஸ்திதி
கிரேக்கத்தில் மன்னராக யார் இருப்பது என்பதை கிரேக்க மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்; இங்கிலாது உள்ளிட்ட நேசநாடுகள் அல்ல என்கிறார் மகாகவி பாரதி, இக்கட்டுரையில்....
ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம்
இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் இங்கிலாந்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசம். எனவே அந்நாட்டின் சுதந்திர முயற்சிகளையும், அவற்றை நசுக்கும் பிரிட்டீஷ் அரசையும் இக்கட்டுரையில் தோலுரிக்கிறார் மகாகவி பாரதி. “உலகமெங்கும் ஸமத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தீ ஓங்கிக் கொண்டிருக்கையில் ஒரு கூட்டத்தார் மற்றொரு பிரமாண்டமான லக்ஷக்கணக்கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸாத்யப்படும்?” என்ற கேள்வி அயர்லாந்துக்கு மட்டுமானதல்ல என்பதை மகாகவி பாரதியை அறிந்தோர் உணர்வார்கள்....
நாகரீகத்தின் ஊற்று
முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையிலிருந்து உலகத்திற்கு எத்தனை அரிய நலங்கள் செய்தபோதிலும் இப்போது நாம் சரியான நிலைமையி லில்லாதிருப்போமானால் நமதுபண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத்திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதூக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து ஸ்ரீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமாகிறது.
பாரஸீகத்துக்கு ஸெளக்ய காலம்
பாரசீகத்தில் இருந்து பிரிட்டீஷ் படைகள் வெளியேறுவதை நமது மக்களுக்குத் தெரியப்படுத்தும் மகாகவி பாரதி, இந்தியாவின் நிலை குறித்து சிந்திக்க வைக்கிறார்.....
துருக்கியின் நிலை
துருக்கிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை நெடிய வரலாறு கொண்டது. மகாகவி பாரதி தனது உலக அரசியல் ஞானத்தை இக்கட்டுரையில் (1920) வெளிப்படுத்துகிறார்....
சீனாவிலே பிரதிநிதியாட்சி முறைமை
சீனாவில் நிகழும் மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து அதுதொடர்பாக சுதேசமித்திரனில் கட்டுரை வரைகிறார் மகாகவி பாரதி. சீனாவின் சிறப்புகளைப் பட்டியலிடவும் அவர் தவறவில்லை. இவையெல்லாம் 1906 ஆம் ஆண்டுக்கால சீனா. இச்செய்தியைக் கூறுவதன்மூலம் இந்தியாவிலும் மாற்றம் நிக்ழும் என்பது தானே இதழாளரின் உள்ளக் கிடக்கையாக இருக்க முடியும்?
ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல்
ஜப்பானில் உள்ள மக்கள் பாரம்பரிய மதங்களைக் கைவிட்டு ‘கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்றார்கள்’ என்று மனம் வருந்தும் மகாகவி பாரதி, அந்நாட்டிற்கு, ‘ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல்வார்களானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்’ என்கிறார், இக்கட்டுரையில்...
பூகோள மஹா யுத்தம்
லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது, அந்தப் பத்திரிகை -மகாகவி பாரதியின் இதழியல் பார்வை எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது இக்கட்டுரை…