சென்னை ஹைகோர்ட்

சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி பதவிக்கான காலியிடம் ஒன்றில் தகுதி வாய்ந்த இந்தியர் ஒருவரை (ஸ்ரீ சங்கரன் நாயர்) நியமிக்க மறுக்கும் ஆங்கிலேய அரசின் பட்சபாதத்தை தனது தர்க்கத் திறனால் கேள்விக்கு உள்ளாக்கும் மகாகவி பாரதியின் இதழியல் கடமையுணர்வு இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...

புல்லர் செய்யும் மோசம்

புல்லர் என்ற ஆங்கிலேய அதிகாரி தனது நியாயமற்ற நடவடிக்கைகளால் பெங்கால் மாகாண மக்களிடம் கெட்ட பெயர் பெற்றிருந்த நிலையில், அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி செய்தி வெளியிட்டார். அது நடைபெறாமல் போன நிலையில், மறுவாரம் வெளியான செய்தி இது. இச்செய்தியில் உள்ள கேலியைக் கவனியுங்கள்!

பாரதி- அறுபத்தாறு -45

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,       மனையாளும் தெய்வமன்றோ?- என்ற தார்மிகக் கேள்வியை முன்வைக்கும் பாடல் இது....

தமிழில் எழுத்துக் குறை

ப்ரெஞ்ச், இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலும் – உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து செளகர்யப் படுத்திக் கொள்ளுகிறர்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்....

பாரதி- அறுபத்தாறு – (42-44)

யாழ்ப்பாணத்து சுவாமிகளை தனக்கு அறிமுகம் செய்வித்த தோழர் குவளைக் கண்ணனை இப்பாடலில் பாடி மகிழ்கிறார் மகாகவி பாரதி...

பாரதி- அறுபத்தாறு (40-41)

புதுவையில் வசித்தபோது தனக்கு குருநாதர்களாக இருந்தவர்களை பாடலில் வணங்கி மகிழும் மகாகவி பாரதி, இப்பாடலில் யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழைப் பாடுகிறார்....

பஞ்சகோணக் கோட்டையின் கதை

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! நமது நாடு ஏன் அடிமைப்பட்டது என்று சிந்தித்த மகாகவி பாரதி, சமூகத்தின் ஒரு பகுதியான அடித்தட்டு மக்களை பஞ்சமர்கள், தீண்டத் தகாதோர் என்று ஒதுக்கி வைத்த பாவமே அடிப்படைக் காரணம் என்று கண்டறிகிறார். ஈனம் என்று கூறப்படும் ஜாதியாரை ஆதரித்து அவர்களை உயர்த்துவதே தேசம் உய்யும் வழி என்கிறர் இக்கட்டுரையில். ஒரு கதை போல எழுதி, இறுதியில் அற்புதமான அறவுரையை முத்தாய்ப்பாக வைத்திருக்கிறார் பாரதி. சுதந்திர நன்னாளில் அவரது அறவுரையை அறிவுரையாக ஏற்போம். நாட்டைக் காப்போம்!

பாரதி- அறுபத்தாறு (37- 39)

முந்தைய பாடலில் மாங்கொட்டைச் சாமியின் புகழ் பாடிய மகாகவி பாரதி, இப்பாடலில், தனது குருவாக வரித்துக் கொண்ட கோவிந்த சுவாமியின் புகழைப் பாடுகிறார். அறிவே தெய்வம் என்ற பாரதிக்கு அன்பே தெய்வம் என்ற தரிசனம் தந்த ஞானி இவர்....

பால பாரத சங்கம்- முதலாவது பிரகடனம், பத்தாம் அவதாரம்

வருஷந்தோறும் 60 கோடி ரூபாய்கள் இங்கிருந்து வற்றடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் இந்த பாரத தேசம் நாளுக்கு நாள் சொல்லமுடியாத தரித்திரத்திலும் பிணியிலும் மூழ்கி வருவது ஆச்சரியமாகுமா? இப்போது நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே மேலே கூறியது போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக நமக்கிடையே கடவுள் பத்தாம் அவதாரம் செய்திருக்கின்றார். இப்போது மனித ரூபமாக அவதாரம் செய்யவில்லை. அவருடைய அவதாரத்தின் பெயர் சுதேசியம்...

ஸ்வராஜ்யம்

ஐக்ய நாடுகள் விடுதலைக்காகப் படை சேர்த்துப் போர் புரிந்து ப்ரான்ஸ் தேசத்தின் உதவியால் இங்கிலாந்தை வென்றன. ஐர்லாந்து கலகங்கள் செய்து விடுதலை பெற முயன்று வருகிறது. இந்தியாவோ அப்படியில்லை. ஆங்கிலேயரிடமிருந்து ஸமாதானமாகவே ஸ்வராஜ்யம் சட்டத்துக்கிணங்கிய முறைகளால் பெற விரும்புகிறது. “உபாயத்தால் ஸாதிக்கக் கூடிய காரியத்தைப் பராக்கிரமத்தால் ஸாதிக்க முடியாது” என்று பஞ்ச  தந்திரம் கூறுகிறது....

சுயாட்சிக்குத் தகுதியாவதெப்படி?

நாம் நாளுக்குநாள் ஆடவர்களுக்குள்ள தன்மையை இழந்துகொண்டே வருகிறோம். இப்படிக் காலம் கழிப்போமானால் சிவாஜியும் அசோகர் முதலிய மன்னர்களையும் தந்த இப்பாரத பூமி ஸப் இன்ஸ்பெக்டர்களையும் கலெக்டரையும் மேன்மேலும் பேறுவதாய்ப் போய்விடும். இதுவரை செய்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திரஸ்கரித்தும் மாறுபடுத்தியும் நாம் எண்ணத்தை நிறைவேற்ற மனமில்லாத ராஜாங்கத்தாரிடம் இன்னும் கெஞ்சுவதானால் நமது மூடத்தனம் எத்தன்மையது பாருங்கள். ...

பாரதி- அறுபத்தாறு (27-36)

“சென்றதினி மீளாது; மூடரே, நீர்       எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து       குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்       எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்” -என்ற அற்புதமான உபதேசம் அடங்கிய கவிதை இது...

நெல்லையப்பரும் வெள்ளையப்பரும்

நமது தெய்வங்களின் ஸ்தானத்தில் பரங்கிகளை உட்காரவைத்துத் தெய்வங்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்ய அந்த தர்மகர்த்தாவுக்கும் மற்ற இரண்டு இந்திய கனவான்களுக்கும் எப்படி மனம் ஒப்பியதோ தெரியவில்லை. இனி இவர்கள் கோயிலின் விக்ரஹங்களை உடைத்து, ஆங்கில அதிகாரிகளை அவ்விடம் வைத்து, தெய்வங்களின் நகைகளை அவர்களுக்கு சாற்றி, அதன் காலில் விழுவார்கள் போலும் ! இதுவன்றோ ராஜபக்தி ! நாட்டில் கேட்பாரில்லாமல் போய்விட்டது. இதுவும் கலிகால விந்தையே!...

பாரதி- அறுபத்தாறு (23-26)

குள்ளச்சாமி குறித்த பிரலாபம் தொடர்கிறது.... மகாகவி பாரதி புதுவையில் வசிக்கையில் கிடைத்த அரிய உறவு, குள்ளச்சாமியின் நட்பு...

ஆகாய விமானமும் சென்னையும்

காலத்தை மீறிச் சிந்தித்து சமுதாயத்துக்கு வழிக்காட்டுபவரே முன்னோடி. அந்த வகையில் தமிழின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதி விமான உற்பத்தி குறித்து 110 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதிய கட்டுரை இது...     வார இதழான ‘இந்தியா’விலும், மாலைப் பத்திரிகையான ‘விஜயா’விலும் வெளிவந்துள்ள கட்டுரை இது. ஒரே கட்டுரையை இருவேறு இதழ்களில் வெளியிடுவது, தனது எண்ணத்தை மக்களுக்குப் பரவலாக்கும் அவரது வேகத்தை வெளிப்படுத்துகிறது.     விமானம் குறித்த தொழில்நுட்பக் குறிப்புகளையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. இதில் தெரியவேண்டிய மிக முக்கியமான தகவல், சென்னையில், ஸிம்ஸன் கம்பெனியில் விமானம் தயாரிக்கும் பணிகள் நடந்திருப்பது தான்....