தேச விடுதலை, சமூக சீர்த்திருத்தம், தமிழ் மீது தணியாத பற்று, பண்பாட்டுச் சீரழிவு குறித்த கவலை, உலக நாடுகளின் வளர்ச்சி - என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்தும் எழுதியும் வந்த மகாகவி பாரதியின் மனதில் இருந்த குழந்தைத்தனமும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் வெளிப்படுகின்றன...
Category: பாரதி இலக்கியம்
தராசு கட்டுரைகள்- 5
தராசு சொல்லலாயிற்று:- "ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர். "அவர் செல்லுகிற சத்ய விரதம், அஹிம்சை. உடைமை மறுத்தல். பயமின்மை- இந்த நான்கும் உத்தம தர்மங்கள்- இவற்றை எல்லோரும் இயன்ற வரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திரும்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை....
தராசு கட்டுரைகள்- 4
சில தினங்களின் முன்பு சென்னைப் பட்டணத்தில் பொருட்காட்சி பார்க்க பத்திரிகையின் மனிதரொருவர் போயிருந்தார். அங்கே சாமான்யமாகக் கிடைக்கக்கூடிய மிகவும் பெரிய பூசனிக்காயைக் காட்டிலும் அதிகப் பெரிதாகிய ஒரு பூசனிக்காய் இருந்தது. 'சாஸ்திர எருப் போட்டதனால் இந்தப் பயன் உண்டாயிற்றென்று தெரிகிறது. ஒரு புல் முளைக்கிற இடத்தில் இரண்டு புல் முளைக்கும்படி செய்பவன் தேசத்துக்குப் பெரிய உபகாரி' என்று இங்கிலிஷ்காரர் சொல்வதுண்டு. 'தொகைக்குள்ளது அளவுக்கும் உண்டு' என்று அந்தப் பத்திரிகைக்காரர் சொல்லுகிறார். ....
கிளிக் கதை
நமது சமூகத்தில் நிலவும் மூடத்தனங்களையும், மோசடிப் பேர்வழிகளை நம்பி மோசம் போகும் மக்களையும் கண்டிக்க இதழாளர் என்றும் தவறியதில்லை. தீவிர மத நம்பிக்கை கொண்டவராயினும், சமுதாயத்தில் நிலவிய தவறான போக்குகளை அவர் அவ்வப்போது விமர்சித்து வந்தார். தனது எழுத்தையே அதற்கு ஆயுதமாக்கிய பாரதி எழுதிய நையாண்டிக் கதை இது...
தராசு கட்டுரைகள்- 3
நாம் இகலோகத்து அறிவிலும் மேம்பாடு பெற வேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்மேலும் வளர்ந்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்ட வேண்டும். இகலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர்....
அந்தரடிச்சான் ஸாஹிப் கதை
நையாண்டியும் கற்பனையும் கலந்து செய்த இக்கதை, யாரையோ மறைமுகமாகச் சாடுகிறது. அது யாராயிருக்கும்?
தராசு கட்டுரைகள்- 2
நானிருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே ஒரு சாஸ்திரியார் இருக்கிறார். நல்ல வைதீகர்; அத்தியயனத்திலே புலி; கிராத்தம் பண்ணி வைப்பதிலே ஸாட்சாத் வியாழக்கிழமைக்கு (பிருஹஸ்பதி பகவானுக்கு) நிகரானவர். அவர் வீட்டிலே அவரொரு கட்சி, இளையாள் ஒரு கட்சி, மூத்தாள் பிள்ளை முத்துசாமியும், அவன் மனைவியும் ஒரு கட்சி ஆக மூன்று கட்சிகளாக இருந்து பல வருடங்களாக இடைவிடாமல் சண்டை நடந்து வருகிறது. அவர் இன்று காலை என்னிடம் வந்து, என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்? என்று கேட்டார்.....
சிறு கதை
கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்திவிடமாட்டான். பிறருக்குப் பயன் தருமென்பதைக் கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.....
துளஸீ பாயி என்ற ரஜ புத்ர கன்னிகையின் சரித்திரம்
மகாகவி பாரதி எழுதிய முதல் குறுங்கதை இது. ‘ஷெல்லிதாஸ்’ என்ற புனைபெயரில் இச் சிறுகதையை பாரதி, மகளிருக்காக தாம் நடத்திய ‘சக்கரவர்த்தினி’ என்னும் மாத இதழில் (1905 நவம்பர்) எழுதினார். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அவசியமற்றது என்பதை உணர்த்துடன் காதலின் பெருமையைச் சுட்டிக்காட்டவும், பாரதி பிரசார நோக்கத்துடன் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். ஹிந்து சமயத்தில் மிகுந்த நாட்டமும், தேர்ச்சியும் உடைய மகாகவி பாரதியின் பாரம்பரியச் சிந்தனை, இக்கதை எழுதுவதைத் தடுக்கவில்லை. ஏனெனில், மகாகவி பாரதி- காளிதாசன் மட்டுமல்ல, ஷெல்லிதாசனும் கூட.
தராசு கட்டுரைகள்- 1
நாளிதழ்கள், பருவ இதழ்களில் பத்தி (Column Writing) எழுதுவது இப்போது பிரபலமாக இருக்கிறது. எழுத்தாளரின் எண்ணத்தை பாதித்த /சமூகம் பயன்பெறும் எந்த விஷயம் குறித்தும் தொடர்ந்து ஒரே பகுதியில், ஒரே தலைப்பில் (இதனை மகுடம் என்கிறார் இதழாளர் பாரதி) எழுதுவது தான் பத்தி எழுத்தாகும். தமிழில் இதற்கு பிள்ளையார் சுழி இட்டவரும் மகாகவி பாரதியே. 1915இல் சுதேசமித்திரன் நாளிதழில் பாரதி எழுதத் துவங்கிய ‘தராசு’ பத்தி, தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே நின்று, வெளிவந்திருக்கிறது. நமக்குக் கிடைத்த கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...
வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை
மகாகவி பாரதி பாண்டிசேரியில் இருந்த சமயம், வேடிக்கையாக பல சின்னக் கதைகளை எழுதினார். படித்தால் சாதாரணமாகத் தோன்றும் இக்கதைகளில் ஆழ்ந்த பொருள் இருக்கும். அந்தக் கதைகளுள் ஒன்று இது...
ஸ்வதேச கீதங்கள் – முன்னுரைகள்
மகாகவி பாரதி தனது தேசபக்திக் கவிதைகளை தொகுத்து ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற பெயரில் 1908இல் நூலாக வெளியிட்டார். அதன் இரண்டாம் பாகம் 1909இல் வெளியானது. அந்த நூல்களில் பாரதி எழுதிய முன்னுரைகளே இவை. இவ்விரண்டு பாகங்களும் பாரதியின் சத்குருநாதர் சகோதரி நிவேதிதைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை யாயினும், இரண்டாவது பாகத்தில் ”எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் மகாகவி பாரதி. நூலின் முகவுரையில் மகாகவியின் தன்னடக்கம் கண்டு உள்ளம் நெகிழ்கிறோம்...
சில வேடிக்கைக் கதைகள்
சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள், ‘உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?’ என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன்: 'உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?’ என்றான்....
மனிதன் வேலை செய்யப் பிறந்தான்
உழைப்பே உயர்வு தரும்; சோம்பர் வாழ்வைக் கெடுக்கும். இது தனிநபருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பொருந்தும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் உழைக்கும்போது, நாடும் தானாக முன்னேறும்- என்கிறார் இதழாளர் பாரதி, இக்கட்டுரையில்....
நமது ஞாபகத்திற்கு
ஆங்கிலேயரிடம் விண்ணப்பித்தால் சுதந்திரம் கிடைக்குமா என்று, இக்கட்டுரையில் கோபமாகவும் கேலியாகவும் வினவுகிறார் மகாகவி பாரதி. “வெகு பிரயாசத்தால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று 10 ஆயிரம் மைல் தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கும் ஆங்கிலேயர்கள் நமக்கு நம்முடைய வேண்டுகோள்களைக் கொடுப்பார்களென்று நினைப்பது வெகு மூடத்தனமாகும்” என்று தனது வாதத்துக்கு ஓர் ஆதார ருசுவையும் முன்வைக்கிறார். ”செவிடர்கள்போல் ஆங்கிலேயர்களுக்கு விண்ணப்பப் பத்திரிகையை அனுப்பாமல், நம்முடைய பிரயத்தனத்தையே தேடுவது மிகவும் சிரேஷ்டமானது” என்கிறார் இறுதியில்.