ஓர் அற்புதமான ஞான இலக்கியம் போர்முனையில் உதித்ததை அஞ்ஞானிகள் உணர மாட்டார்கள். ஏனெனில், இது மனத்தின் இருநிலைகளுக்கு இடையிலான போர். அஞ்ஞானிகளின் ஆணவம் இதனை அறிய விடாது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் இது… வில்லேந்திய வீரன் விஜயன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவனை பலவாற்றானும் தேற்றி, பலவிதமான வாதங்களால் அவன் மயக்கத்தைப் போக்கி, போருக்கு ஆயத்தப்படுத்துகிறான், அவனது அன்புத் தோழன் கண்ணன். இறுதியாக, “எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே” என்று நம்பிக்கை அளிக்கிறான்...
Category: தொடர்
பிரித்தலும் பேணிக் கொளலும்
உண்மையில், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் போது நாடார் சமூக மக்கள் நாடாழ்வான் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கரூர் பசுபதீஸ்வரர் கல்வெட்டில் “ஜெயமுரி நாடாழ்வான்” என்பவர் 1053-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கு படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.
அசலும் போலியும்
ராணுவத்தினர் நலம் காக்க அரசு விழா எடுக்கும் கொடி நாளின் வசூல் எவ்வளவு தொகை? புகழ் பெற்ற நடிகர் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கேட்கும் ஊதியத்தின் தொகைக்கு பக்கத்திலாவது நிற்குமா? ஆனால் நாட்டிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் ராணுவ வீரர் தான் அசல். மற்றோர் கதாநாயகர்கள் வேடத்தில் தோன்றும் நபர்கள் போலிகள்.
பிச்சை புகினும் கற்கை நன்றே!
கல்வி குறித்தும், கற்பதன் அவசியம் குறித்தும் கல்வி நலன் இல்லையாயின் எவரும் உலகில் மதிப்புடன் வாழ இயலார் என்பதை அற்றை நாள் அரசர்கள் அறிஞர்கள் முதற்கொண்டு இற்றை நாள் மாந்தர்வரை பலப்பட சொல்லியுள்ளார்கள். “எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடியில் கற்றோரே மேல் வருக” என்கிறது வெற்றி வேட்கை.
நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்
1947-க்குப் பிறகு கல்விச் சாலைகளின் பாடத்திட்டங்களில் பாரதத்தின் முன்னைய நாளின் வீர, தீர மன்னர்கள், தாய் மண்ணைக் காக்கப் போராடிய வீர புருஷர்கள், வந்தேறிய பகையாளர்களை உயிர் உள்ள வரை எதிர்த்து நின்ற வணங்கா முடியரசர்களை விஞ்ஞான, மெய்ஞான நுட்பங்களைக் கற்றறிந்த முன்னோர்களை அடையாளம் காட்டி இளைஞர்களை உருவாக்கத் தவறிவிட்டோம்....
இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -5
பாரதத்தின் அடித்தளம் ஹிந்து தர்மம் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் அறிவிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, தர்மத்தின் வரம்பற்ற வீரியம் முழுவீச்சில் வெளிப்படும். அதுவே, பாரதத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே நன்மையைத் தரும்.
இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -4
ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டை, நாகரிகத்தை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அது தர்மம். தர்மம்தான் இந்த தேசத்தின் அடிப்படை. தர்மம் என்ற வாழ்வியல் விஞ்ஞானமே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கிறது. நாம் இதுவரை இந்தக் கட்டுரையில் பேசிய முக்கிய அம்சங்களும் ‘தர்மம்’ என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும்.
கவலைகள் பலவிதம்
வ.உ.சி. சிறை புகுந்த போது அவரது மனைவி மீனாட்சி அம்மாளின் வயது 19. இரு மகன்கள், வயதான மாமனார், மாமியார் அண்ணனுக்கு சிறைத் தண்டனை என்று கேட்ட மாத்திரத்திலேயே சித்தம் கலங்கிப் பித்தரான கொழுந்தன். தான் சம்பாதித்த அளவற்ற செல்வத்தை பொதுநலன்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் வழங்கிய கொடையில் கர்ணனுக்குச் சமமான கீர்த்தி பெற்ற வ.உ.சி.யின் குடும்பம் வறுமையில் உழன்றது....
இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் -3
அனைத்துப் பண்பாட்டிற்கும் தொட்டிலாக இருக்கும் பாரதியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது ஹிந்து சமுதாயம். எனவே, ஹிந்து சமுதாயத்திற்கு அடித்தளமாக இருப்பது எது என்ற கேள்வி அடுத்து எழுவது இயல்பே. இங்கு ஹிந்துக்கள் என்று நாம் அழைக்கும் மக்களை உருவாக்கியது எது? அதுதான் உலகளாவிய, அறிவியல் பூர்வமான, சாஸ்வதமான வேதச் சிந்தனை முறை.
இந்திய கலாச்சாரத்தின் கட்டுமானம் – 2
ஒரு தேசம் அல்லது ஒரு இனம் அதன் உண்மையான வரலாற்றை, முழுமையான மகத்துவத்தை, பெருமிதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமானால் அது உள்ளுக்குள் வலிமை பெறும்; யாராலும் வெல்ல முடியாதபடி ஆற்றலுடன் வல்லமை பெற்றுத் திகழும். எனவே வரலாற்றுக்கும் தேசம் அல்லது இனத்தின் விழிப்புணர்வுக்கும் பெருமிதத்திற்கும், நெருங்கிய, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது.....
இந்தியக் கலாச்சாரத்தின் கட்டுமானம்- 1
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி சுவாமி சுத்திதானந்தர். கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் இருக்கிறார். அம்மடத்தில் புதிதாகச் சேரும் பிரம்மச்சாரிகளுக்கு (இளம் துறவிகளுக்கு) பயிற்சி அளிப்பவராக இருக்கிறார். அவரது இந்தக் கட்டுரைத் தொடர் (BUILDING BLOCKS OF INDIAN CULTURE) ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மாத இதழான 'பிரபுத்த பாரதா'வில் தொடராக வெளிவந்தது. அதன் தமிழாக்கம் இது.
பெரியாரைப் போற்றுதும்!
பாரதியாருக்கு தேசிய உணர்வை ஊட்டி, அவரது பணிக்கு உரமும் சேர்த்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் எனில் சற்றும் மிகையல்ல. ஐயரவர்களின் சிந்தனை சமூகத்தின் அவலங்கள். தீண்டாமைக் கொடுமைகள் குறித்து எப்படி இருந்தன என்பதை 1920-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் சுவாமி விவேகானந்தர் சொல்லிய சொற்களை வார்த்தை பிசகாது தனது பத்திரிகையில் பதிவு செய்தது மூலம் நன்கறியலாம்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(30)
நாமக்கல்லார் பாடியபடி ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு. நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது....
ஸ்வதந்திர கர்ஜனை- 2(29)
1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர் உரையாற்றுகிறார். மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம்....
ஸ்வதந்திர கர்ஜனை -2(28)
அசாம் பிரதேசத்தை வங்காளத்துடன் இணைக்க வற்புறுத்தி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போது அசாம் பிரதேசத்தை ஆண்டுவந்த லீக் அல்லாத கட்சியின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது....