காஞ்சனை

சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் எழுதிய திகில் கதை இது....

மகாவித்துவான் சரித்திரம்- 1(23)

இவர் சில தினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒருநாள், அவ்வூரில் வராகக் குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரென்னும் ஸ்ரீமானொருவர் இவருடைய கவித்துவத்தையறிந்து, "விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள் தொகுத்துத் தருவோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்க விருப்பத்தோடிருக்கின்றனர்” என்றார். இவர், “நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கின்றார்; அவர் வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர்; நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார்.

பாரதியாரும் விவேகானந்தரும்

பாரதிக்கும் விவேகானந்தருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல. இருவருமே மிகப் பெரிய அறிஞர்கள், பல மொழிகள் தெரிந்தவர்கள். விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது, ‘ Speaking English like a Webster’ என்றும், ‘Walking Encyclopedia’ என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கூறின.... சுவாமி அபிராமானந்த மகராஜின் இனிய கட்டுரை....

காலங்களில் அவள் வசந்தம்

காதலியை வர்ணிக்கும் காதலனின் இதயமாக கவிஞர் மாறுகையில்,  “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதும்கூட இனிய பதிவாகிறது.  “உலகில் சிறந்தது எல்லாம் எதுவோ அது நானே” என்பார் கிருஷ்ண பரமாத்மா. இங்கு, சிறந்ததாக தான் கருதும் வசந்த காலமும், ஓவியக் கலையும், மார்கழி மாதமும், மல்லிகை மலரும் காதலியையே நினைவுபடுத்துகின்றன, தமிழ்க் காதலரான கவியரசர் கண்ணதாசனுக்கு… மடியில் விளையாடும் மழலையாகவும், தழுவும் கன்னியாகவும், கண்போல் வளர்க்கும் அன்னையாகவும் காதலியைக் காணும் ஆணை காதலனாகப் பெற்ற பெண், புண்ணியம் செய்தவள்!

சத்திய சோதனை- 4 (21-25)

     குழந்தைகள், பெற்றோரின் உடற்கூற்றை மாத்திரமேயன்றி அவர்களுடைய குணத்தின் தன்மைகளையும் பிதுரார்ஜிதமாகப் பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள நிலைமைகளும் குழந்தைகளின் குணங்கள் அமைவதில் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து அடைந்ததையே ஆரம்ப மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. மூதாதையர்களிடமிருந்து பெறும் தீய தன்மைகளை வெற்றிகரமாகத் தள்ளிவிட்டு வளரும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். ஆன்மாவுக்குத் தூய்மையே இயற்கையான குணமாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது.....

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

இந்தியாவில் ஆதிசங்கரர்,  ராமானுஜர்,   மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர்  போன்ற  மதச்சாரியர்கள்  மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை  ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும்  மறுமலர்ச்சியை,  மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்..... மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜின் இனிய கட்டுரை.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(22)

அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ''இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப் பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக் கூடாது!'' என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ''இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்'' என்று கட்டளையிட்டார்.....

கங்கை, யமுனை, இங்குதான் சங்கமம்…

கவியரசரின் உள்ளம் என்னும் நதியின் ஆழத்தில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கற்கள் பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டவை. அவை அவரது திரைப்பாடல்களில் அற்புதமாக மின்னியபடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பாடல், அதற்கு மீண்டும் ஓர் உதாரணம்...

மகாவித்துவான் சரித்திரம்- 1(21 ஆ)

திருவாவடுதுறையிலிருக்கையில் சில அன்பர்களுடைய வேண்டுகோளின்படி அந்த ஆதீனத்து முன்னோர்களாகிய ஸ்ரீ மெய்கண்டதேவர் முதல் வேளூர்ச்சுப்பிரமணிய தேசிகரிறுதியாக இருந்த ஞானாசிரியர்கள் சிவபதமடைந்த மாதம், நட்சத்திரம், சமாதித்தல மென்பவற்றை முறையே யமைத்து, ‘திருவளர் கைலைச் சிலம்பு’ என்னும் தலைப்பையுடைய அகவலொன்றை இயற்றி அளித்தனர். அது குரு பரம்பரை அகவலென வழங்கும்; அவ்வகவல் அச்சிற் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.....

அகல்யை

புராணக் கதைகளை மீள்பார்வை செய்வது இலக்கியத்தில் ஒரு புதிய போக்கு. தமிழ்ச் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப் பித்தனும் இதில் விலக்கல்ல. அவரது ‘சாப விமோசனம்’ சிறுகதை, அது வெளிவந்த காலத்தில் (1943) பெரும் விவாதத்தையும் சிந்தனைப் புரட்சியையும் உருவாக்கியது. அக்கதையில், அகலிகையின் பார்வையில் “ஆணுக்கு ஒரு நீதி, பெண்னுக்கு ஒரு நீதியா?” என்று கேட்ட புதுமைப் பித்தன், அதே அகலிகை கதையை மீண்டும் ‘அகல்யை’ என்ற சிறுகதையாகத் தீட்டுகிறார். இதில் அகலிகையின் கணவரான கௌதமனை நியாய உணர்வுள்ள ஆணாகச் சித்தரிக்கிறார். இனி கதைக்குள் செல்லுங்கள்!

சத்திய சோதனை- 4(16-20)

மக்களோ, மிகவும் பயந்து போயிருந்தனர். ஆனால், நான் அடிக்கடி போய்க் கொண்டிருந்தது அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏழைகள் பலர், தங்களிடமிருந்த சிறு பொருள்களையெல்லாம் புதைத்து வைத்துவிடுவது வழக்கம். அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குப் “பாங்கு”கள் இல்லை. “பாங்க்” என்பது இன்னது என்றே அவர்களுக்குத் தெரியாது. நானே அவர்களுடைய ‘பாங்க்’கரானேன். ஏராளமான பணம் வந்து என் அலுவலகத்தில் குவிந்தது.....

தீவிரவாதம் ஒழிய விவேகானந்தர் உரைத்த வழி

மனித சமுதாயத்தின் புராதனமான புனித நூல்களான வேதங்களில் ரிஷிகள் ‘படைப்பு முழுவதும் இறைவனே’ - ‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம’ என்று கூறுகிறார்கள். ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகம் அடிப்படையானதாகவும், பிரிக்க முடியாததாகவும் இருக்கிறது என்பது இதன் பொருள். அதனாலேயே சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் பல சொற்பொழிவுகளிலே மனிதனின் தெய்விகத்தை மீண்டும் மீண்டும் உறுதிபடக் கூறினார்....

விடுதலைப் போரில் அரவிந்தர்- 11

 “தெய்வீக செய்தியைப் பற்றி மக்கள் பொதுவாகவே தெளிவற்றிருக்கிறார்கள். தெய்வீகக் கட்டளையை நாம் வேறுபடுத்தித் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் நம்மிடம் பல வழிகளில் பலவிதமாக பேசுகிறார். அதெல்லாம் தெய்வீக கட்டளை அல்ல. அது வரும்போது மிகத் தெளிவாகவும் மறுக்க முடியாததாகவும் இருக்கும். அது உங்கள் அறிவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் மனம் அதை ஏற்று கீழ்படிந்தேயாக வேண்டும். அப்படிப்பட்டதொரு தெய்வீக கட்டளை கிடைத்துதான் நான் பாண்டிச்சேரிக்கு சென்றேன்”.

மகாவித்துவான் சரித்திரம்- 1(21-அ)

வாளொளி புற்றூரென்னுந்தலம் அரதனபுரமெனவும் வழங்கும்; தேவாரம் பெற்றது. இத்தலத்து ஸ்வாமியின் திருநாமம் மாணிக்கலிங்கரென்பது; அம்பிகையின் திருநாமம் வண்டுவார்குழல் நாயகி யென்பது. இத்தல விருட்சம் வாகை. குசகேதுவென்னும் ஒரு சோழவரசன் பொருட்டு அரதனப்பாறையிலிருந்து சிவபெருமான் சிவலிங்க வடிவாகத் தோற்றினமையால் இத்தலம் அரதனபுரமெனப் பெயர்பெற்றது. வாசுகி யென்னும் மகாநாகம் இத்தலத்தையடைந்து சிவபெருமானை வழிபட்டு ஆபரணமாகும் பேறு பெற்றது. அப்பாம்பு ஒரு புற்றிலுறைந்தமையால் புற்றூரென்று முதலில் ஒரு பெயருண்டாயிற்று.....

நம்பிக்கை அளித்த மகான்

-சுவாமி சிவானந்தர் நவீன இந்தியாவின் புகழ்மிக்க தேசப்பற்று கொண்ட இந்தத் துறவி 1863, ஜனவரி மாதம் 12-ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.  அவருக்கு நரேந்திரன் என்று பெயரிடப்பட்டது. அவரது தந்தை ஒரு மிகச் சிறந்த வழக்குரைஞர். அவரது அறிவுக்கூர்மை, பண்பாடு ஆகியவற்றால் அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அவரது தாய் தேவி புவனேஸ்வரி கடவுள் பக்தி மிக்கவர்; மட்டுமின்றி தனது குழந்தைகளை மிகச் சிறந்தவர்களாக வளர்ப்பதில் திறமையுடையவராகவும் இருந்தார். சிறு வயது நரேந்திரன் குறும்புத்தனத்தோடு மனோதிடம் கொண்டவனாகவும் இருந்ததால், அவரைக் … Continue reading நம்பிக்கை அளித்த மகான்