ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ள வேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலாமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்ய வேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்க வேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
Category: கருவூலம்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு!
சினிமா மூலமாக மக்களிடையே செல்வாக்குப் பெற்று தமிழக அரசியல் களத்தையே மாற்றியவர் திரு. எம்.ஜி.ஆர். அதற்கு அவரது திரைப்படங்களில் அமைந்த பாடல்களும் பெருமளவில் உதவியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாடல் இது. கவியரசரின் சிந்தனை வரிகள் ஒரு கதாநாயகனின் சொற்களாக அமைந்தபோது, அவர் மக்களின் தலைவன் ஆனது வியப்பில்லை தான்….
கடிதம்
நல்ல எழுத்துகளைப் பாராட்டுவது அதனை மேலும் வளர்க்கும். இல்லாவிடில், இக்கதையில் வரும் எழுத்தாளர் சிங்காரவேலு போல வெறுமையில் தான் வாட வேண்டி இருக்கும். இக்கதையில் வரும் எழுத்தாளர் யார், புதுமைப்பித்தனே தானா, அல்லது இதனை இங்கு பதிவேற்றும் நானா?
அகமும் புறமும் – 6அ
பழந்தமிழகத்தில் அரசன் எனப்பட்டவன் எவ்வாறு உருவானான்? அவன் ஏன் போர்களை நாடினான்? அவனே உலகின் அனைத்து இன்பங்களையும் சுவைக்கும் சுவைஞனாக எவ்வாறு ஆனான்? அரசனது தகுதிகள் என்ன? முடியாட்சி வழிவழியாக கைமாறியது எப்படி? அவனது அரண்மனை எவ்வாறு சிறப்புறக் கட்டப்பட்டது? அவனது தந்தக் கால் கட்டிலின் சிறப்புகள் என்ன? மன்னரைப் புலவர் பாடியதும் பாடாமல் ஒழிந்ததும் ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் புறநானூற்றுப் பாடல்களின் உதவியுடன் பதி அளிக்கிறார் பேரா. அ.ச.ஞா.
அகமும் புறமும் – 5
பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை.
பாரதத்தின் பெருமை: பாருக்கே அணிகலன்!
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய இனிய கட்டுரை இது…
செந்தமிழ்த் தேன்மொழியாள்…
திரையுலகை ஆக்கிரமித்த திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், அந்த இயக்கத்தின் இளம் நாற்றாக வெளிப்பட்ட கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் இது. ‘மாலையிட்ட மங்கை’ (1958) என்ற இந்தத் திரைப்படமும், இந்தப் பாடலும் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமாகின. இத்திரைப்படத்தின் 15 பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. படத்தின் தயாரிப்பாளரும் அவரே. கவியரசரை தமிழகத்திற்கு முழுமையாக அறிமுகம் செய்வித்த திரைப்படம் இது எனில் மிகையில்லை.
புதுமைக்குப் பொலிவு கூட்டியவர் விவேகானந்தர்
பேராசிரியர் திரு. வ.தங்கவேல், திருவேடகம், விவேகானந்தா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பெங்களூருவில் வசிக்கிறார்; சுவாமி விவேகானந்தர் குறித்த நாடகங்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
வீரத்துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியாரும்
திருவாரூர் திரு. இரெ. சண்முகவடிவேல், தமிழ்ப் புலவர்; தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்க்கும் இலக்கிய சொற்பொழிவாளர்; ‘தமிழகம் அறிந்த சான்றோர்’, ‘திருக்குறள் கதையமுதம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…
பிரயாணம்
1969-இல் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய திகிலூட்டும் அற்புதமான புனைகதை இது. அபத்தத்தின் எல்லையில், மானுட எல்லையைத் தாண்டிய ஒரு சக்தி இங்கே தரிசனமாகிறது....
வீரத்துறவி விவேகானந்தர்
சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் 2013, பிப்ரவரி மாதம் நடைபெற்ற விவேகானந்த நவராத்திரி விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.
இலக்கியாசிரியரின் மனைவி
1955-ஆம் ஆண்டு க.நா.சு. எழுதிய இச்சிறுகதை, ‘இல்லறம் அல்லது நல்லறமன்று’ என்பதை எளிதாக நிலைநாட்டுகிறது. இலக்கியாசிரியையின் கணவன் என்ற பெருமிதத்தை விட, இலக்கியாசிரியன் என்பது சற்று மாற்றுக் குறைவு தானே? இக்கதையைப் படித்து முடிக்கையில் உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தால், அதுவே இலக்கியாசிரியனின் பேறு!
பாரதியும் விவேகானந்தரும் தீர்க்கதரிசிகள்
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஓராண்டு ரத யாத்திரையின் நிறைவு விழா, கோவை பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயத்தில் 12, ஜனவரி 2014 22 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மறைந்த நடிகர் விவேக் (1961- 2021) பேசியதன் சுருக்கம் இது…
தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை அமைப்போம்!
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முழக்கத்துடன், நாட்டின் தர்மம் காக்கும் பணியில் அயராது பாடுபட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆம் ஆண்டு விழா, கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்புரையாற்றினார். சென்னை கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமரின் உரை எழுச்சியூட்டுவதாக அமைந்திருந்தது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் இங்கே…
அகமும் புறமும் -4
‘பழங்கதைகள் பேசுவதிற் பயனில்லை’ எனச் சிலர் கூறக் கேட்கிறோம். அதுவுண்மையே. ஆனால், பழமை பேசுவதால், ஓர் ஊக்கம் பிறக்குமேல், சோம்பர் ஒழியுமேல், ஆண்மை விளங்குமேல் புதிய வாழ்வு தோன்றுமேல், பழமை பேசுவதால் இழுக்கொன்றுமில்லை. நாம் இருக்கும் நாடு நமதென்று அறியவும், இது நமக்கே உரிமையாம் என்பதுணரவும், பழங்கதைகள் வேண்டத்தான் வேண்டும். அதுவும் தமிழரைப் பொறுத்த வரை மிகுதியாக வேண்டும்.