என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

-மகாகவி பாரதி

‘சக்கரவர்த்தினி’ 1906 பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த  ‘துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.

மந்த மாருதம் வீசுறும் போதினும்
           வானில் மாமதி தேசுறும் போதினும்
கந்த மாமலர் கண்ணுறும் போதினும்
           கானநல்லமுது உண்ணுறும் போதினும்
சந்தமார் கவி கற்றிடு போதினும்
           தாவில் வான்புகழ் பெற்றிடு போதினும்
எந்த வாறினும் இன்புறு போதெல்லாம்
           என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே.

$$$


Leave a comment