இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்

தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் திருவண்ணாமலையில் 26.12.2014, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களின் 22-ஆவது மாநில மாநாட்டில் பேசியதன் சுருக்கம் இது:

அறிவியலின் பிதாமகரும் ஆன்மிக சூரியனும்

தற்கால தமிழ் ஆய்வாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத் தக்கவர். ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய இவரது ஆய்வுகளும் நூல்களும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. சுவாமி விவேகானந்தரையும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனையும் ஒப்பிட்டு இவர் எழுதிய கட்டுரை இங்கே...

நம்மாழ்வாரும் விவேகானந்தரும்

பேராசிரியர் திரு. டி.ஏ.ஜோசப், ‘ஸ்ரீ வைஷ்ணவச்சுடராழி’ என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்; பாண்டிச்சேரியில் வசிக்கிறார். பன்மொழித் தேர்ச்சி மிக்கவர்; கல்வியாளர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது அன்னார் எழுதிய கட்டுரை இது….  

பாரத பூமி பார்க்கெலாம் திலகம்!

தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கம் நடத்திவந்த மூத்த எழுத்தாளர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் (1936- 2021) அவர்கள் சுவாமி விவேகானந்தரின் 150வ்து ஜெயந்தியின் போது எழுதிய கட்டுரை இது....

விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை

திரு. ஜெயமோகன், தமிழின் முன்னணி எழுத்தாளர்; திரைக்கதை வசனகர்த்தா. ‘தி இந்து- தமிழ்’ நாளிதழில் 2014-இல் இவர் எழுதிய கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

இளைஞர்களின் உற்சாக டானிக்!

திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகையாளர்; ‘ராணி’ வார இதழின் ஆசிரியர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது….

சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்

‘பத்மன்’ என்ற பெயரில் எழுதிவரும் திரு. நா.அனந்த பத்மநாபன், பல நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர்.  சென்னையில் வசிக்கிறார். இதழியல் துறையில் பல்லாண்டுகால அனுபவம் உடைய இவர், தமிழக அரசின் விருது பெற்ற  ’மூன்றாவது கண்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி  இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

மூன்று கடல்கள், மூன்று நாட்கள்

திரு. சுப்பு மூத்த தமிழ் பத்திரிகையாளர்; தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர்; மொழி பெயர்ப்பாளர்; ‘திராவிட மாயை- ஒரு பார்வை’ என்ற நூலின் மூலமாக தமிழக அரசியல், இலக்கிய வட்டாரங்களில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

“சென்னை இளைஞர்களே, நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள்”

திரு. மாலன் தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர்; இயற்பெயர் நாராயணன்; தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குமுதம், குங்குமம்,புதிய தலைமுறை ஆகிய பத்திரிகைகளிலும் சன் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்; கணையாழி, திசைகள் ஆகிய இலக்கிய இதழ்களில் பணியாற்றியவர்; ஜனகணமன (நாவல்), என் ஜன்னலுக்கு வெளியே, உயிரே உயிரே, சொல்லாத சொல் (கட்டுரைத் தொகுப்புகள்), மாலன் சிறுகதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது முதல் கட்டுரை இங்கே…

கெட்டிஸ்பர்க் உரையும் சிகாகோ முழக்கமும்

டாக்டர் திரு. என்.ராம் தமிழகத்தைச் சார்ந்தவர்; தற்போது லண்டன் நகரில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இவர் 2013-இல் தினமணியில் எழுதிய கட்டுரை இங்கே....

மனிதவள மேம்பாடே அவரது இலக்கு

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆண்டுதோறும் நிகழ்த்தி வரும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிக நிகழ்ச்சியின் நிறைவு நாளான 6.1.2013 அன்று, கோவை, பாரதிய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தமது தலைமை உரையில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பே இக்கட்டுரை.

இந்தியாவின் பழம்பெருமைகளை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்!

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளரான திரு. வெ.இறையன்பு ஐஏஎஸ், திருப்பூரில் 2014-இல் நிகழ்த்திய உரையின் சுருக்கம் இது...

பாரதியிடம் விவேகானந்தரின் தாக்கம்

திரு. தமிழருவி மணியன், சட்டம் பயின்றவர்; தமிழகம் அறிந்த பேச்சாளர்; எழுத்தாளர். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர். ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’, ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ ஆகிய நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் தான் தூண்டுகோல்

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி, தமிழகம் முழுவதுமான ஓராண்டு கால தொடர் கொண்டாட்டத்தை 27.2.2013-இல் சென்னையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதன் சுருக்கம் இது.

இன்றைய இந்தியாவை உருவாக்கியவர் விவேகானந்தர்

விடுதலைப் போராட்ட வீரர் ஸ்ரீ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டவர். சுவாமிஜி பற்றிய நேதாஜியின் கட்டுரை இது…