முந்தைய பாடலில் மாங்கொட்டைச் சாமியின் புகழ் பாடிய மகாகவி பாரதி, இப்பாடலில், தனது குருவாக வரித்துக் கொண்ட கோவிந்த சுவாமியின் புகழைப் பாடுகிறார். அறிவே தெய்வம் என்ற பாரதிக்கு அன்பே தெய்வம் என்ற தரிசனம் தந்த ஞானி இவர்....
Tag: பாரதி கவிதை
பாரதி- அறுபத்தாறு (27-36)
“சென்றதினி மீளாது; மூடரே, நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்” -என்ற அற்புதமான உபதேசம் அடங்கிய கவிதை இது...
பாரதி- அறுபத்தாறு (23-26)
குள்ளச்சாமி குறித்த பிரலாபம் தொடர்கிறது.... மகாகவி பாரதி புதுவையில் வசிக்கையில் கிடைத்த அரிய உறவு, குள்ளச்சாமியின் நட்பு...
பாரதி- அறுபத்தாறு (19-22)
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ? ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?- என்ற அற்புதமான வரிகள் கொண்ட மகாகவி பாரதியின் குருநாதர் குறித்த பாடல் இது....
பாரதி- அறுபத்தாறு (15-18)
அத்வைதப் பேரானந்தத்தின் உச்சநிலையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் இது... ‘எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்’ என்ற பாரதியின் தாரக மந்திரம் ஒலிக்கும் கவிதையும் கூட...
பாரதி- அறுபத்தாறு (11-14)
புதிய ஆத்திசூடியில் “ரௌத்திரம் பழகு” (96) என்று சொன்ன அதேபாரதி, தனது சுயசரிதைக் கவிதையான பாரதி-அறுபத்தாறில், பொறுமையின் அவசியம் குரித்து இக்கவிதையைப் படைத்திருக்கிறார். “கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான் கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே”- என்கிறார் இப்பாடலில்.
பாரதி- அறுபத்தாறு (7-10)
-மகாகவி பாரதி பாரதி அறுபத்தாறு (7-10) அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே, சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே. நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். 7 சினத்தின் கேடு சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் .செத்திடுவா ரொப்பாவார்; … Continue reading பாரதி- அறுபத்தாறு (7-10)
பாரதி – அறுபத்தாறு (1-6)
-மகாகவி பாரதி முன்னுரை:மகாகவி பாரதியின் சுயசரிதை பிரிவில் ‘பாரதி-அறுபத்தாறு’ கவிதை இடம்பெற்றிருப்பது இதிலுள்ள சுய விளக்கங்கள் காரணமாகவே. மரணத்தை வெல்லும் வழியில் “பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!” என்று முழங்குகிறார் பாரதி (பாடல்- 6). முன்னதாக, சோக அடவியில் புகவொட்டாமல் துய்ய செழுந்தேன் போல கவிதை எழுதும் அறிவை தனக்கு பராசக்தி தந்ததாக்க் (பாடல்- 3) கூறுவார் பாரதி. எனவேதான் இக்கவிதைகள் தன்வரலாற்றுப் பிரிவில் சேர்க்கப்படுகின்றன.மானுடரை அழிக்கும் அசுரர்கள், பொறுமையின் பெருமை, ”எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் … Continue reading பாரதி – அறுபத்தாறு (1-6)
பாரதியின் தனிப்பாடல்- 24
29-01-1906 அன்று ‘சுதேசமித்திரன்’ இதழில் - "வேல்ஸ் இளவரசருக்குப் பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்" என்கிற பாரதியின் கீழ்க்கண்ட கவிதை பிரசுரமானது. இக்கவிதையில், அந்நியர் ஆட்சியில் இந்தியர் அடைந்த துயரங்களிலிருந்து நமது மக்களை ஆங்கிலேய ஆட்சி காத்த்து என்று குறிப்பிடும் பாரதி, அவர்களால் ஏற்பட்டுள்ள தொல்லைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனினும் வேல்ஸ் இளவரசரை ‘அதிதி தேவோ பவ’ என்ற கருத்தாக்கத்துடன் வரவேற்று மகிழ்கிறார் மகாகவி பாரதி....
பாரதியின் தனிப்பாடல்- 23
காரைக்குடியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து ‘ஹிந்து மதாபிமான சங்கம்’ அமைத்து தொண்டாற்றி வந்தனர். அவர்களது அழைப்பின் பேரில் காரைக்குடி சென்று இரு நாட்கள் தங்கியிருந்து, அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ர காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாரதியின் தனிப்பாடல்- 22
எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதிக்கு அந்த சமஸ்தான மன்னரான வெங்கடேசு ரெட்டப்ப பூபதியுடன் ஆரம்பகாலம் முதலே நல்ல தொடர்பு இருந்தது. தினசரி மன்னரின் கச்சேரியில் ஆஜராகி பத்திரிகை படித்துக் காட்டும் பணியை இளம் வயதில் பாரதி செய்திருக்கிறார். ஆயினும் அவரால், மன்னரின் அதிகாரத் தோரனையுடன் ஒன்றியிருக்க முடியவில்லை. அதனால் தான் ஆசிரியத் தொழிலை நாடி எட்டயபுரத்திலிருந்து அவர் வெளியேறினார். அது மட்டுமல்ல, மன்னரின் படாடோபம், அரண்மனையின் சில்லறை அரசியல், மன்னரின் அடிவருடிகளின் கேளிக்கைகள் ஆகிவற்றை வெறுத்த அவர், அதனை தனது வேடிக்கைக் கதைகளில் பூடகமாக புகுத்தி இருக்கிறார். எனினும் ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டு வறுமை சூழ்ந்த நிலையில், தனது குடும்ப நலனுக்காக, மன்னரிடம் உதவி கோரினார் பாரதி. அப்போது (1919) மகாகவி பாரதி எழுதிய விண்ணப்பக் கவிதையே இது... மன்னரிடம் உதவி கேட்கும்போதும்கூட, யாசகமாகக் கேளாமல், புவி ஆளும் மன்னரான எட்டயபுரம் ராஜா கவியரசனான தனக்கு உரிய கௌரவம் செய்ய வேண்டும் என்று கேட்கும் துணிவை இக்கவிதையின் நாம் காணலாம். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ‘பொருள் புதிது’ என்ற மந்திரச் சொல்லே நமது தளத்தின் பெயராக அமைந்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பாரதியின் தனிப்பாடல் – 21
தமிழன்னையின் சிறப்பணிகளான பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் கரையானுக்கு இரையாகாமல் காத்து, ஏடுகளைச் சரிபார்த்து செம்மையாக்கிப் பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது அளப்பரிய ஆற்றலால் தான் நமது தாய்மொழி செம்மொழி என்னும் பெருமையை நம்மால் தக்கவைக்க இயன்றது. அவர் மீது மகாகவி பாரதி பாடிய அற்புதமான வாழ்த்துப்பா இது.
பாரதியின் தனிப்பாடல் – 20
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுரம் அரண்மனையின் அரசவையில் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் சுப்பராம தீட்சிதர் (1839- 1906). இவர் தெலுங்கு மொழியில் எழுதிய ‘ஸங்கீத சம்பிரதாயப் பிரதர்ஷினி’ என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம். இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் இசைக் குடும்பத்தைச் சார்ந்தவர் இவர். எட்டயபுரம் அரண்மனையுடன் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதி, இசையின் மீதும் பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி அவர் எழுதிய அஞ்சலிக் கவிதை இது...
பாரதியின் தனிப்பாடல்- 19
சென்ற நூற்றாண்டின் இணையற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா குறித்த மகாகவி பாரதியின் அஞ்சலிக் கவிதை இது...
பாரதியின் தனிப்பாடல்- 18
சுவாமி அபேதானந்தர் (1866 அக். 2 - 1939 செப். 8) ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். 1906 ஜூலை 15 ஆம் தேதி சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு வரவிருந்ததை அறிந்த பாரதியார், அதுகுறித்து தம் ’இந்தியா’ இதழில் எழுதியதுடன், சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி 32 வரிகளில் கவிதை படைத்தார். அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது....