சுதந்திர தேவியிடம் முறையீடு

புதுவையில் மகாகவி பாரதி நடத்திய ‘இந்தியா’ இதழில் 1909-இல் வெளியான இக்கவிதை, பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுப்புகளில் காணப்படுவதில்லை.  

என்னே கொடுமை!

சுதேசமித்திரன் இதழில் 1906-இல் வெளியான கவிதை இது. இக்கவிதை எழுதியதற்கான குறிப்பையும் முதலிலேயே குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி.

இளசை ஒருபா ஒருபஃது  

‘ஒருபா ஒருபஃது’ என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இஃது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும். இங்கு மகாகவி பாரதி, வெண்பாவில் அந்தாதியாகப் பாடி இருக்கிறார். இப்பாடல்களில்  காப்பு, பத்துப்பாடல்கள் ஆகியவை, இளசை எனப்படும் எட்டையபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனைக் குறித்துப் பாடியவையாக உள்ளன. இறுதியாக தனிப் பாடல் ஒன்றும் எட்டப்ப ராஜாவைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

வந்தேமாதரம்

இக்கவிதை பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுதிகளில் காணப்படாதது. ‘சக்கரவர்த்தினி’ மகளிர் மாத இதழிலும், ‘சுதேசமித்திரன்’ நாளிதழிலும் வெளியான பாரதி பாடல் இது…

வங்கமே வாழிய!

14-9-1905-இல் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் மகாகவி பாரதி பாடிய பாடல் இது; மறுநாள் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியாகி உள்ளது.

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்

மகாகவி பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் இது என யதுகிரி அம்மாள் குறிப்பிடுகிறார்.

குருவிப் பாட்டு

மகாகவி பாரதியின் கவிதைகள் பல இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளதை இப்பாடல் காட்டுகிறது. பாரதி ஆய்வாளர் திரு. ரா.அ.பத்மநாபன்  ‘பாரதி புதையல்’ எனும் நூலில் வெளியிட்டிருக்கிற கட்டுரையுடன் கூடிய மகாகவியின் இனிய கவிதை இது… இந்தப் பாட்டு புதுச்சேரியில் ‘சரஸ்வதி விலாச சபை’ என்ற இளைஞர் சங்கத்தில் 1909இல் பாரதியாரே பாடியது.

கடல் – கண்ணிகள்

 ‘இதுவரை  அச்சேறாத பாரதியார் கவிதை’ என்று குறிப்பிட்டு 1966 தினமணி ஞாயிறு மலர் ஒன்றில் ‘கடல் – கண்ணிகள்’ என்ற தலைப்பில் வெளியான கவிதை -  மனிதனும் கடலும் உரையாடுவதாக  அமைந்த 44 வரி படைப்பு  இது. 

பாரதி-அறுபத்தாறு- (57-66)

“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா” என்று துவங்கும் பாரதி- அறுபத்தாறு சுயசரிதைக் கவிதையில், புதுவையில் தனக்கு வழிகாட்டிய ஆன்மிகப் பெருமக்களைப் பதிவு செய்திருக்கிறார் மகாகவி பாரதி. குரு கோவிந்தசாமியின் புகழை ஏற்கனவே மூன்று பாடல்களில் (37-39) பாடிய அவர், கோவிந்தசாமியுடன் உரையாடல் என்ற தலைப்பில் கூறி இருக்கும் பாடல்கள் (57-66) அடங்கிய இக்கவிதை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை விரும்புவோர்க்கு லட்சியக் கவிதையாகும். “பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!” என்ற வரியில் அவரது சிந்தனை தெள்ளென வெளிப்படுகிறது. அதேசமயம், “சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்” என்ற நிறைவு வரிகளில் பாரத ஆன்மிக ஞானத்தின் செறிவை பாரதியிடம் காண்கிறோம்....

பாரதி- அறுபத்தாறு- (54-56)

காதலின் புகழை சென்ற கவிதையில் பாடிய மகாகவி பாரதி, இக்கவிதையில், காதல் என்ற பெயரில் ஏமாற்றி பெண்மைநலம் உண்ணும் காமுகர்களின் தீய நெஞ்சை சுட்டிக்காட்டி, பொய்மைக்காதலைச் சாடுகிறார். ”ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,  அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?” என்ற அவரது கேள்வி, “கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்ற முந்தைய ஒரு கவிதையின் (பெண்கள் விடுதலைக் கும்மி) நீட்சியே.

பாரதி-அறுபத்தாறு- (49-53)

காதலின் புகழைப் பாடும் மகாகவி பாரதியின் இக்கவிதை தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆணும் பெண்ணும் கூடிக் களித்து வாழும் இல்லறமே உலகை வாழ வைக்கிறது. அதற்கு அடிநாதம் காதலே. “காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்! கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்” என்ற பாரதியின் பிரகடனம், காதலர்களுக்கு அமுத வாக்கு. இறைவனே காதலிக்கையில் மானுடர் காதலின் சுவையை இழக்கலாகுமா? என்பதே கவியின் கேள்வி. அதேசமயம், காதல் என்ற பெயரில் நிகழும் முறைகேடுகளை தனது அடுத்த (54-56) கவிதைகளில் கண்டிக்கவும் அவர் தவறவில்லை.

பாரதி- அறுபத்தாறு- (46-48)

முந்தைய பாடலில் பெண் விடுதலை குறித்துப் பாடிய மகாகவி பாரதி, இந்த மூன்று பாடல்களில், பெண் என்பவள் தாய், தாரம், தமக்கை, தங்கை, மகள் எனப் பல வடிவில் உடனுறைபவள் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆண்களால் பெண்மை அடிமை யுற்றால் மக்களெலாம் அடிமையுறல் வியப்படைய வேண்டியதில்லை என்றும் சொல்கிறார்....

பாரதி- அறுபத்தாறு -45

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,       மனையாளும் தெய்வமன்றோ?- என்ற தார்மிகக் கேள்வியை முன்வைக்கும் பாடல் இது....

பாரதி- அறுபத்தாறு – (42-44)

யாழ்ப்பாணத்து சுவாமிகளை தனக்கு அறிமுகம் செய்வித்த தோழர் குவளைக் கண்ணனை இப்பாடலில் பாடி மகிழ்கிறார் மகாகவி பாரதி...

பாரதி- அறுபத்தாறு (40-41)

புதுவையில் வசித்தபோது தனக்கு குருநாதர்களாக இருந்தவர்களை பாடலில் வணங்கி மகிழும் மகாகவி பாரதி, இப்பாடலில் யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழைப் பாடுகிறார்....