வருஷந்தோறும் 60 கோடி ரூபாய்கள் இங்கிருந்து வற்றடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் இந்த பாரத தேசம் நாளுக்கு நாள் சொல்லமுடியாத தரித்திரத்திலும் பிணியிலும் மூழ்கி வருவது ஆச்சரியமாகுமா? இப்போது நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே மேலே கூறியது போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக நமக்கிடையே கடவுள் பத்தாம் அவதாரம் செய்திருக்கின்றார். இப்போது மனித ரூபமாக அவதாரம் செய்யவில்லை. அவருடைய அவதாரத்தின் பெயர் சுதேசியம்...
Tag: பாரதி உரைநடை
ஸ்வராஜ்யம்
ஐக்ய நாடுகள் விடுதலைக்காகப் படை சேர்த்துப் போர் புரிந்து ப்ரான்ஸ் தேசத்தின் உதவியால் இங்கிலாந்தை வென்றன. ஐர்லாந்து கலகங்கள் செய்து விடுதலை பெற முயன்று வருகிறது. இந்தியாவோ அப்படியில்லை. ஆங்கிலேயரிடமிருந்து ஸமாதானமாகவே ஸ்வராஜ்யம் சட்டத்துக்கிணங்கிய முறைகளால் பெற விரும்புகிறது. “உபாயத்தால் ஸாதிக்கக் கூடிய காரியத்தைப் பராக்கிரமத்தால் ஸாதிக்க முடியாது” என்று பஞ்ச தந்திரம் கூறுகிறது....
சுயாட்சிக்குத் தகுதியாவதெப்படி?
நாம் நாளுக்குநாள் ஆடவர்களுக்குள்ள தன்மையை இழந்துகொண்டே வருகிறோம். இப்படிக் காலம் கழிப்போமானால் சிவாஜியும் அசோகர் முதலிய மன்னர்களையும் தந்த இப்பாரத பூமி ஸப் இன்ஸ்பெக்டர்களையும் கலெக்டரையும் மேன்மேலும் பேறுவதாய்ப் போய்விடும். இதுவரை செய்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திரஸ்கரித்தும் மாறுபடுத்தியும் நாம் எண்ணத்தை நிறைவேற்ற மனமில்லாத ராஜாங்கத்தாரிடம் இன்னும் கெஞ்சுவதானால் நமது மூடத்தனம் எத்தன்மையது பாருங்கள். ...
நெல்லையப்பரும் வெள்ளையப்பரும்
நமது தெய்வங்களின் ஸ்தானத்தில் பரங்கிகளை உட்காரவைத்துத் தெய்வங்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்ய அந்த தர்மகர்த்தாவுக்கும் மற்ற இரண்டு இந்திய கனவான்களுக்கும் எப்படி மனம் ஒப்பியதோ தெரியவில்லை. இனி இவர்கள் கோயிலின் விக்ரஹங்களை உடைத்து, ஆங்கில அதிகாரிகளை அவ்விடம் வைத்து, தெய்வங்களின் நகைகளை அவர்களுக்கு சாற்றி, அதன் காலில் விழுவார்கள் போலும் ! இதுவன்றோ ராஜபக்தி ! நாட்டில் கேட்பாரில்லாமல் போய்விட்டது. இதுவும் கலிகால விந்தையே!...
ஆகாய விமானமும் சென்னையும்
காலத்தை மீறிச் சிந்தித்து சமுதாயத்துக்கு வழிக்காட்டுபவரே முன்னோடி. அந்த வகையில் தமிழின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதி விமான உற்பத்தி குறித்து 110 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதிய கட்டுரை இது... வார இதழான ‘இந்தியா’விலும், மாலைப் பத்திரிகையான ‘விஜயா’விலும் வெளிவந்துள்ள கட்டுரை இது. ஒரே கட்டுரையை இருவேறு இதழ்களில் வெளியிடுவது, தனது எண்ணத்தை மக்களுக்குப் பரவலாக்கும் அவரது வேகத்தை வெளிப்படுத்துகிறது. விமானம் குறித்த தொழில்நுட்பக் குறிப்புகளையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. இதில் தெரியவேண்டிய மிக முக்கியமான தகவல், சென்னையில், ஸிம்ஸன் கம்பெனியில் விமானம் தயாரிக்கும் பணிகள் நடந்திருப்பது தான்....
புதிய யுத்த முறைமை
இக்கட்டுரையில் ஸ்ரீ கணேச தாமோதர ஸவர்க்கர் என்று மகாகவி பாரதியால் குறிப்பிடப்படுபவர், சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அண்ணன் கணேச தமோதர சாவர்க்கர் ஆவார். ஸ்ரீ கணேச தாமோதர சாவர்க்கர் ஆங்கிலேயரை எதிர்த்து எழுதியதற்காகவே அவர் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையை எள்ளல் தொனியில் மகாகவி பாரதி விமர்சித்திருப்பதை இக்கட்டுரையில் காணலாம்.
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடையது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி. இங்கே உள்ளது சிட்டுக்குருவி குறித்த அவரது உரைநடைப் பதிவு....
நகரம்
வால்ட் விட்மான் ஒரு நகரம் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத்தில் ஆணும் பெண்ணும் சபதத்தில் துஞ்சார். அங்கே அடிமையுமில்லை, ஆண்டையுமில்லை. அங்கே, ஸ்தானிகர்களின் முடிவற்ற செருக்கை பொதுஜனம் உடனே சினந்து எதிர்க்கிறது. அங்கே, நகரத்தான் தலை, நகரத்தான் பிரமாணம்; அவனுடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மேயர், கவர்னர் எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதி செய்து கொள்ளவும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே, பெண்கள் வீதிகளில் ஆண்களைப் போலவே கூட்டங்கூடி ஊர்வலம் வருகிறார்கள். அங்கே, பொதுக் கட்டிடங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம் பெறுகிறார்கள்.
ஸ்ரீ பாரத நாட்டின் புதிய புண்ய ஸ்தலங்கள்
நமது பாரத நாட்டில் ஸ்வதந்திரக் கிளர்ச்சியாரம்பித்துக் கொஞ்சம் நாள்தான் ஆயிற்று. எனினும் அநேக புண்ணிய ஸ்தலங்கள் உண்டாய் விட்டன. இந்தப் புண்ணிய ஸ்தலங்களின் விசேஷம் என்னவென்றால் இவைகள் பாரத நாட்டிலுள்ள எல்லா மதத்தினருக்கும் பொதுவானவைகள். பாரத நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த தேசபக்தர்களின் ஆச்ரமங்கள் தோன்றியிருக்கின்றன.....
பதிவிரதை
ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.
இந்தியாவில் விதவைகளின் நிலைமையும் காந்தி சொல்லும் உபாயமும்
வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக் கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது' என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது.....
தமிழ் நாட்டோருக்கு இறுதி விண்ணப்பம்
தேசத்தை உத்தாரணஞ் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாஞ் செய்க. நாம் செய்யக்கூடியது சிறிதுதானேயென்று கருதி அதனைச் செய்யாதிருந்து விடலாகாது. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை யெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ள வரை கைவிடாமல் ஆதரித்து வரவேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதுந் தியானஞ் செய்து வர வேண்டும். வந்தே மாதரம்....
உயிரின் ஒலி
ஸ்ரீமான் ஜகதீச சந்திரவஸு சொல்லுகிறார்:- “தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரீகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தர்மம் வேண்டும்; அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம். ஏனென்றால், ஆத்ம த்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால் உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப்பதால் விளையும்” என்கிறார்....
பசு
பசுவையும், காளையையும் ஹிந்துக்கள் தெய்வமென்று கும்பிடுவதுபோல், கஷ்டப் படுத்தாமல் மரியாதையாக நமது முன்னோர் நடத்தியபடி இப்போது நடத்துவதில்லை. வண்டிக்காரன் மாட்டைக் கொல்லுகிறான். இடையன் பசுவுக்குப் பொய்க் கன்றுக்குட்டி காட்டி, அதன் சொந்தக் கன்றைக் கொல்லக் கொடுக்கிறான். ஹிந்துக்களாகிய நாம் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறோம்? வெறுமே பூவைப் போட்டுக் கும்பிட்டால் மாத்திரம் போதுமா?...
தெலுங்க மஹா சபை
ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று......