பாஞ்சாலி சபதம் – 2.2.8

துரியனின் ஆணையை ஏற்று மீண்டும் தன்னிடம் வந்த பாகனிடம், ”சூதில் தருமன் தோற்ற பின்னர் என்னை மனைவி என்ற முறையில் சூதில் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை. நான் மன்ன துருபதனின் மகள். இந்த நியாயத்தைச் சொல்ல அரசவையில் ஒருவரும் இல்லையா?” என்று வினவுகிறாள் பாஞ்சாலி. “மன்னர் சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே- அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?” என்று பாஞ்சாலி கேட்பதாக கவிதை புனைகிறார் மகாகவி பாரதி. இதனை மீண்டும் அரசவைக்குச் சென்று அவையினரிடம் முன்வைக்கிறான் பாகன்...

பாஞ்சாலி சபதம் – 2.2.7

அரசவைக்கு வர மறுத்த பாஞ்சாலி முன்வைத்த வாதத்தைக் கேட்டு சினம் கொண்ட துரியோதனன், பாகனை மீண்டும் சென்று அவளை அழைத்துவருமாறு ஏவுகிறான். அப்போது, “ஐவர் கூட்டு மனைவிக்கு நாணமேன்?- சினம் மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன்- அந்த மொய்குழ லாளைஇங் கிட்டுவா” என்று உத்தரவிடுகிறான்.

பாஞ்சாலி சபதம் – 2.2.6

பாஞ்சாலியை அவைக்கு அழைத்து வருமாறு ஏவிய துரியனைக் கண்டு சினம் கொண்ட நடுநிலை நாயகரான விதுரன், ”மூட மகனே, நீ செய்வது தகாது. பாண்டவர் உன்னை மாய்க்கும் முன்னம் அவர்களிடம் பறித்ததை திருப்பி அளி” என்று அறிவுறுத்துகிறார். உடனே, விதுரனை மடையனென்று விளம்பிய துரியன் தேர்ப்பாகனை அழைத்து, ‘பாஞ்சாலியை அவைக்கு வருமாறு வேந்தன் பணித்ததைக் கூறு’ என்கிறான். தேர்ப்பாகனால் நடந்த இழிவை அறிந்த பாஞ்சாலி, “மாண்பிழந்த நாயகர்தாம்- என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே -முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?” என்று பதிலறிந்து வருமாறு பாகனிடம் கூறுகிறாள். அதாவது, ஏற்கனவே அடிமைப்பட்டவனுக்கு பிறரை- குறிப்பாக மனைவியை- அடிமையாக்கும் சுதந்திரம் இல்லை என்பதே பாஞ்சாலியின் கருத்து.

பாஞ்சாலி சபதம் – 2.2.5

சூதாட்ட வெற்றியின் ஆணவம் துரியன் கண்களை மறைக்கிறது. சித்தப்பனும் அஸ்தினாபுர அமைச்சனுமான விதுரனிடம் திரும்பி, பாஞ்சாலியை ஏவல் செய்ய அரசவைக்கு அழைத்து வருமாறு ஏவுகிறான் துரியன். அப்போது பாஞ்சாலியை சூதில் எடுத்த விலைமகள் என்கிறான் பாவிமகன்....

பாஞ்சாலி சபதம் – 2.2.4

விநாச காலம் நெருங்குகையில் விபரீத புத்தி ஏற்படுவது இயல்பு. கௌரவர்களின் அழிவுக்காலத்துக்கு அடிகோலிடும் நிகழ்வு இப்போது நிகழ்கிறது. சூதில் தோற்ற சகோதரனின் மனைவியை - அவைக்கு பாஞ்சாலியை அடிமையாக அழைத்து வருமாறு ஏவுகிறான் துரியன். அப்போது உலகில் நெறி கெடுவதால் குழப்பம் நேரிடுகிறது என்று சொல்வதுடன் நிறுத்தவில்லை, மகாகவி பாரதி. சிவனும் மாலவனும் பிரம்மனும் வாணியும் லட்சுமியும் கொற்றவையும் நிலைகுலைகிறார்கள் என்கிறார்... இங்கே அவரது யாப்பு ஆசிரியப்பாவாக மாறுகிறது....

பாஞ்சாலி சபதம் – 2.2.3

சூதில் தோற்று பணயமாக வைத்த பாஞ்சாலியை தருமன் இழந்து கையறுநிலையில் தவிக்க, அவனது கௌரவ இளையவனான துரியன் கூத்தாடுகிறான் - நெடுநாள் பகை தீர்ந்ததென்று! அப்போது அவையில் நிகழ்ந்த அநியாயங்களை எல்லாம் எனது பாடலில் எழுத என்னால் இயலாது என்கிறார் மகாகவி பாரதி.

பாஞ்சாலி சபதம்- 2.2.2

சூதில் பாஞ்சாலியை பணயம் வைத்து தருமன் இழந்ததும், கௌரவர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். சூதில் அதுவரை வென்றதெல்லாம் ஒன்றுமேயில்லை; காமத்திரவியமாம் பாஞ்சாலியை வென்றதே மிகப் பெரும் வெற்றி என்று கூறி, காரணமான மாமனைப் பாராட்டுகின்றனர். இதிலிருந்து, அவர்களின் தீய உள்ளக் கிடக்கை வெளிப்படுகிறது...

பாஞ்சாலி சபதம் – 2.2.1

சூதாட்டம் அதன் அதி உச்சத்தை எட்டுகிறது. பாஞ்சாலியைப் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். மகாகவி பாரதி பொங்குகிறார். அவருக்கு பாஞ்சாலியின் வீழ்ச்சி பாரத அன்னையின் வீழ்ச்சியாகத் தெரிகிறது. “செருப்புக்கு தோல் வேண்டியே - இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” என்று வினவும் அவர், “வேள்விப் பொருளினையே - புலை நாயின்முன் மென்றிட வைப்பவர்போல்”, ஆவியில் இனியவளை, வடிவுறு பேரழகை, புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை, கொடியவர் அவைக்களத்தில் பணயம் வைத்து இழந்து விட்டான் கோமகன் தருமன்- என்கிறார்....

பாஞ்சாலி சபதம் – 2.1.13

துரியோதனனின் ஆர்ப்பரிப்பைத் தடுக்கும் தாய்மாமன் சகுனி, மேலும் வஞ்சக நெஞ்சுடன் பேசுகிறான். களி விளையாட்டுக்காக ஆடிய சூதில் தோற்ற சகோதரர்களை ஏளனம் செய்தல் முறையல்ல என்று மருகனிடம் கூறும் அவன், பாண்டவரின் மனைவியான பாஞ்சாலியைப் பணயம் வைத்து ஆடினால், அவளது அதிர்ஷ்டத்தால் இழந்த அனைத்தையும் தருமன் திரும்பப் பெறலாம் என்கிறான். இது நல்ல ஆலோசனை என்கிறான் துரியன் - தேன் கலசத்தை நக்க விழையும் நாய் போல என்கிறார் மகாகவி பாரதி. இத்துடன் அடிமைச் சருக்கம் முற்றுப் பெறுகிறது...

பாஞ்சாலி சபதம் – 2.1.12

சூதாட்டத்தில் செல்வங்கள், நாடு, சகோதரர்களை இழந்த தருமன் இறுதியில் தன்னையும் பணயம் வைத்து இழக்கிறான். உடனே துரியன் ஆர்ப்பரிக்கிறான். “இதை எங்கும் பறையறை வாயடா- தம்பி!” என துச்சாதனனிடம் கூறுகிறான்...

பாஞ்சாலி சபதம்- 2.1.11

சூதாட்டம் உச்சத்தை எட்டிவிட்டது. நாட்டையும் செல்வங்களையும் சகோதரர்களையும் சூதில் இழந்த தருமன், இறுதியாக தன்னையே பணயம் வைக்கிறான்... தோற்கிறான். “இவன் தன்னை மறந்தவ னாதலால் - தன்னைத் தான் பணயமென வைத்தனன்” என்கிறார் மகாகவி பாரதி, தருமனின் கையறு நிலை கண்டு.

பாஞ்சாலி சபதம்- 2.1.10

பார்த்தனை இழந்த பிறகும் தருமன் தன்னிலை மீளவில்லை. இதுவே சூதின் இயல்பு. அதை மேலும் விசிறி விடுகிறான் சகுனி. வீமனை பந்தயம் வை என்கிறான். சூதே ஆயினும், எதிர்த்தரப்பில் இருப்பவர் பணயப் பொருளைக் கூறல் மரபல்ல. அதையும் மீறுகிறான் சகுனி. ஆனால், தருமன் ‘தக்கது செய்தல் மறந்தனன்’. “பெரும்புகழ் வீமனை, - உங்கள் பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் - வென்று போ!’ என்று உரைத்தனன்... விதி அவன் நாவில் வந்து அமர்ந்திருக்கிறதே!

பாஞ்சாலி சபதம் – 2.1.9

சகுனியின் எள்ளலைக் கேட்டு வெகுண்ட தருமன், தனது தம்பி பார்த்தனைப் பணயம் வைத்து இழக்கிறான். முன்னதாக, “‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; - ஐவர் எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண்” என்கிறான்.

பாஞ்சாலி சபதம் – 2.1.8

சகாதேவனை அடுத்து அசுவ சாஸ்திர வல்லுநனான நகுலனையும் சூதில் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். அப்போது தனது பாதை தவறு என்று சிறு ஞானோதயம் தருமனுக்கு ஏற்படுகிறது. அதை உணர்ந்த சகுனி, “சிற்றன்னை மாத்ரிக்குப் பிறந்தவர்கள் என்பதால் சகாதேவனையும், நகுலனையும் வைத்து இழந்தாய் போலும். குந்தியின் பிள்ளைகளான உன் உடன் பிறந்தவர்களான பீமனையும் அர்ச்சுணனையும் சூதில் வைக்கத் தயங்கினை போலும்” என்று எள்ளி நகையாடுகிறான்.

பாஞ்சாலி சபதம் – 2.1.7

துரியனின் ஆசை வார்த்தையை ஏற்று, தம்பியரில் இளையவனான சகாதேவனைப் பணயம் வைத்து ஆடிய தருமன் மீண்டும் தோற்கிறான். “தீய சகுனி கெலித்திட்டான்”.