ராமனாய் இருப்பது எவ்வளவு கடினம்? அவன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது, அவனை நம்பியவர்களுக்கு. அது தாமதமாவதால், நம்பியோர் பெறும் ஏமாற்றம், அதனால் ராமனுக்கு கிடைக்கும் வசை அதிகம். இதுவும் ஒருவகை திருவிளையாடலின் பகுதியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
Tag: இலக்கியம்
ராமனின் காதல்மொழி
அழகான பயணம், அருகில் காதலுடன் காதலி. இனிமையான உரையாடல். இப்படி பயணத்தில் காதல்மொழி பேச வாய்க்கப் பெற்றவர் கடவுளின் செல்லப்பிள்ளைகள்.
இனிமேலும் கழுதையென்று திட்டுவீர்களா?
சந்தோஷ மிகுதியினால் கழுதை உரத்த குரலில் வெகுதூரம் கேட்கும்படி கத்தும். கழுதைக்கு சமஸ்கிருதத்தில் ‘கர்தப, ராஸப, கர’ போன்ற பெயர்கள் காணப்படுகிறது. ‘ராஸப’ என்றால் உரத்த குரலில் சத்தம் செய்வது. ‘கர்தபகானே ஸ்ருகாலவிஸ்மய’ என்ற பழமொழிக்கு ”கழுதை சங்கீதம் பாடுகிறது. குள்ளநரி அதை ஆனந்தமாய்க் கேட்கிறது” என்று பொருள்.
சொக்கநாதரின் தமிழ் விளையாடல்
தமிழ்ப் புலவர்கள் என்றால் சண்டையும் சச்சரவும் சகஜமான விஷயமாயிற்றே! அதுபோல் ஒருமுறை சங்கப் புலவர்கள் இடையே யாருக்குப் புலமை அதிகம்? என்று சண்டை மூண்டபோது, அதனைக் களைந்து, சிறந்த புலவர்கள் யார்? என்பதை நிலைநாட்டி, அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்திய திருவிளையாடலும் சுவையானதே.
பட்டினத்தாரின் தனிப் பாடல்கள்
தம் தனிப்பாடல்களால் தனிப்பாடல் துறையில் ஒப்பற்ற தனியிடம் பிடித்தவர் பட்டினத்தார். அவரது தனிப்பாடல்களின் தனிச் சிறப்பு என்பது உணர்ச்சி வேகம். ஆழ்மனத்திலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சிகளின் குவியலாய் அவரது பாடல்கள் தமிழை அலங்கரிக்கின்றன. தம் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் சார்ந்து அதிக எண்ணிக்கையில் பாடல்கள் புனைந்தவர் என்ற பெருமையும் பட்டினத்தாருக்கு உண்டு.
பாரத சாவித்ரி
அற்புதமான சமஸ்கிருத சுலோகங்களை தமிழில் பதிவு செய்வதை ஒரு கடமையாகச் செய்து வருபவர் எழுத்தாளர் திரு. ஜடாயு. ‘பாரத சாவித்ரி’ என்ற தலைப்பிலான, மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஐந்து சுலோகங்கள் நாம் அறிய வேண்டியவை...
ராமனுக்கு இங்கே என்ன சம்பந்தம்?
சமூக ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலமாக தேசிய சிந்தனையையும் சமய விழிப்புணர்வையும் உருவாக்கி வரும் இளைஞர் பா.இந்துவன். அவரது முகநூல் பதிவு ஒன்று இங்கே கட்டுரையாகிறது...
மன்னன் எழுதிய மாமன்னனின் கதை
குலசேகர ஆழ்வார் தாம் இயற்றிய பெருமாள் திருமொழியில், 11 பாசுரங்களில் உத்தரகாண்டத்தை உள்ளடக்கிய ராமாயணத்தைக் கூறியுள்ளார். அது பத்தாம் திருமொழியாக உள்ளது. (நாலாயிர திவ்யப் பிரபந்தம்- முதலாயிரம்: 741- 751 / பெருமாள் திருமொழி- 10). இப்பாடல்களில், அயோத்தி மாநகரின் சிறப்பைக் கூறுவதில் தொடங்கி ராம அவதாரம் பூரணம் பெறும்போது அனைவருடனும் வைகுண்டத்துக்கு மீண்டது வரை குலசேகரர் பாடியுள்ளார்.
தன்னையே தண்டித்த தகைமையாளன்
அறிந்தே பல அரசியல் பிழைகளைச் செய்து, அவையெல்லாம் நியாயமே என்று சாதித்து, அதனை எதிர்த்துக் கேட்பவர்களின் உயிரைப் போக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், அறியாமல் செய்த அரசியல் பிழையை அறிந்ததுமே உயிர் துறந்த பாண்டியன் போற்றுதலுக்கு உரியவன் அல்லவா?
மூவர் முலையும் மூவாத் தமிழும்
தன் அரசனான கம்சனைக் கொல்லப் பிறந்தவன் கண்ணன் என்பதால் அவன் மீது கோபம் கொண்டவள் பூதனை. அதனால் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சனையை தன் உள்ளமெல்லாம் கொண்டவள். உடலெல்லாம் விஷத்தைப் பூசிக்கொண்டு, அழகிய தாயாக வடிவம் கொண்டு கோகுலம் வந்தாள். கண்ணனை அழைத்து முலையூட்டினாள். அவனும் பால் அருந்துவது போல் அவள் உயிரை உறிஞ்சி விட்டான்.
இருமையின் இறைவன்
இன்பமும் துன்பமும் இறைவன் தருவது. அவனது நினைவே அமைதி அளிக்கிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுவதும் இது தானே?
ஒருவன் வாளி
தியாகராஜர் “ஒக்க மாடமு ஒக்க பாணமு, ஓக்க பத்தினி வ்ரதுடே” என்ற ஹரி காம்போஜி ராக கீர்த்தனையை அழகாக கம்பீரமாக பாடியிருக்கிறார். “ஒரு சொல், ஒரு வில், ஒரு பத்தினி என்ற கொள்கை கொண்டவன் ராமன், அவனை மறவாதே என்று”...
அன்பே தளிகையாய்…
தமிழை உருகி உருகிக் காதலிக்கிறார்கள் வைஷ்ணவர்கள். பொதுவாக தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பது பக்தி இலக்கியங்களே என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம்.... எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதனின் அனுபவக் கட்டுரை...
நீர் இடு துகிலர்
துக்கத்தையும் ரசிக்க வைப்பது இலக்கியம். நாம் அசூயையாக நினைக்கும் ஒன்றையும் நகைச்சுவையாக மாற்றுவதும் இலக்கியம் தான். இதோ எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் அவர்களின் கம்ப ராமாயணக் கைவண்ணம்...
ஊடலின் உச்சத்தில்…
பழந்தமிழ் இலக்கியத்தின் பாடல்களை இளம் தலைமுறைக்குச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி சமகாலக் காட்சிகளுடன் விளக்கியாக வேண்டி இருக்கிறது. இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட தொழில் துறையில் பணிபுரிந்தாலும், மனதைப் பண்படுத்தும் இலக்கியத்தை மென்மையாக எடுத்துச் சொல்கிறார், எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன். இதோ அவரது குறுந்தொகை பற்றிய குறுங்கட்டுரை...