என்ன செய்தார் விவேகானந்தர்?

ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த சிறு பதிவின் மொழிபெயர்ப்பு இது.

சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம்

பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரம்பரையில் வந்த துறவி;  சுவாமி மதுரானந்தரிடம் தீட்சை பெற்றவர். குமரி மாவட்டம், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர். குமரி மாவட்டத்தில் மாபெரும் ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுவாமிஜி,  தமிழகம் முழுவதும் ஹிந்து சமய வகுப்புகளை  - அதற்கென ஒரு பாடத்திட்டம் உருவாக்கி -  நடத்தி வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இனிய கட்டுரை இங்கே…

அன்பு, அறிவு, ஆற்றலின் உருவம் சுவாமி விவேகானந்தர்

பூஜ்யஸ்ரீ சுவாமி சந்திரசேகரானந்தர், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் துறவி. தேவிப்பட்டினத்தில் உள்ள தபோவன மடத்தின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்திக் கொண்டாட்டத்தின் போது இவர் எழுதிய கட்டுரை இது….

மகாவித்துவான் சரித்திரம் – 2(7ஆ)

தமிழ்ப் புலமையில் மன்னரான திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், எளியவர்பால் இரங்கும் தன்மையும், நகைச்சுவை உனர்வும் மிகுந்தவர் என்பதை அவரது சரித்திரத்தை எழுதிய அவரது முதன்மை மானவர் உ.வே.சா. வாயிலாக அறிகிறோம். இந்த அத்தியாயம், மகாவித்துவா அவர்களின் கருணைக்கு ஒரு சிறு சான்று...

விழிமின்… எழுமின்…

உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி அனந்தானந்தர், சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது சுவாமிஜி குறித்து எழுதிய கட்டுரை இது...

என்றும் இந்தியாவுக்கு வழிகாட்டி

கோவையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், கோவை பாரதீய வித்யாபவன் தலைவருமான முனைவர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் எழுதிய கட்டுரை இங்கே...

பரமசிவன் கழுத்தில் இருந்து…

இல்லறம் என்பது இரட்டைத் தண்டவாளம் போன்றது. இதில் ஆண்- பெண் இருவரிடையே தனிப்பட்ட அகந்தை வருவது குடும்ப நலனுக்கு நல்லதல்ல. இதனை அழகாக வெளிப்படுத்திய படம் சூரியகாந்தி. குடும்பநலனுக்காக பெண்கள் தங்களை அர்ப்பணித்து பணிபுரிவதை ஏற்கத் தயங்கும் ஆண்கள் இப்போதும் உண்டு, அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்படத்தில், கவிஞர் கண்ணதாசனே ஒரு கதாபாத்திரமாக வந்து இப்பாடலைப் பாடுகிறார். அற்புதமான சிந்தனையுடன் கூடிய இப்பாடல் காலத்தை வென்று வாழும் திரைக் கவிதை....

தேவை ஒரு சரியான சிந்தனை

தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான முனைவர் திரு. எஸ்.வைத்யசுப்ரமணியம் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இங்கே…

சத்திய சோதனை- 5(26-30)

தென்னாடு எப்பொழுதுமே எனக்குச் சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர் மீதும் தெலுங்கர்மீதும் எனக்கு ஒருவகையான தனியுரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள், என் நம்பிக்கையை என்றும் பொய்ப்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்கு முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்துகொண்டேன்....

சுவாமி விவேகானந்தரின் கனவில் விழிப்புற்ற பாரதம்

மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்‌ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…

சட்டை

எழுத்தாளர் ஜெயகாந்தனின் அற்புதமான சிறுகதைகளுள் ஒன்று இது. ராணுவவீரனும் ஒரு துறவி தான் என்று ஒரு வித்தியாசமான சிந்தனையை இக்கதையில் விதைத்திருக்கிறார். படியுங்கள். வீரர்களை ஆராதியுங்கள்!

மகாவித்துவான் சரித்திரம் – 2 (7அ)

ஒரு சமயத்தில் ஆறுமுகத்தாபிள்ளை, தம்முடைய குடும்ப சம்பந்தமாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரமொன்று எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்தது. அதிற் கையெழுத்துப்போடத் தொடங்குகையில் அவர், "ஆறுமுகம் பிள்ளை யென்று போடவா? ஆறுமுகத்தா பிள்ளை யென்று போடவா?" என்று கேட்டனர். இவர், "ஆறுமுகம் பிள்ளை யென்றால்  அத்துக் கெட்டுவிடுமே; ஆறுமுகத்தா பிள்ளை யென்றே போடலாம்" என்றனர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

வீரத் துறவியும் வீரக் கவிஞரும்

-நல்லி குப்புசாமி செட்டியார் திரு நல்லி குப்புசாமி செட்டியார், சென்னையில் ‘நல்லி சில்க்ஸ்’ என்ற பிரமாண்டமான  பட்டு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். வெற்றிகரமான வணிகராக மட்டுமல்லாது, கலை இலக்கிய செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டவராகவும் திகழ்பவர்;  25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பவர்; பாரதி அன்பர்; மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்த ‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டிதழை நடத்தி வருபவர்; பத்மஸ்ரீ,  கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே... சிகாகோவில் நடைபெற்ற … Continue reading வீரத் துறவியும் வீரக் கவிஞரும்

சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷர்

தமிழகத்தின் ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவரான (டி.ஜி.பி) திரு. ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்தபோது, அத்துறையை வெளிப்படையான அமைப்பாக மாற்றினார். நேர்மையின் சின்னமாக அரசு அதிகாரிகள் விளங்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். சந்தனக் கடத்தல் கும்பல் தலைவன் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு தலைவராக இருந்தபோது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்களாக காவல்துறையினரை மாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் 15வது ஜெயந்தியின்போது திரு. ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். எழுதிய கட்டுரை இங்கே…

விநாயக சதுர்த்தி

புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகளுள் ஒன்று இது. இதில் செவிவழிக் கதை ஒன்றை சிறுகதைக்குள் நுழைக்கும் புதுமைப்பித்தன், நாத்திகவாதம் செய்யும் கதாபாத்திரமாக தன்னையே இருத்திக் கொள்கிறார். தமிழக வழக்கப்படி கதையில் வரும் மனைவி பக்திமான் தான் வேறென்ன?