அன்பே சிவம்

தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கை நடத்திவந்த அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் விவேகானந்தம் குறித்த இரண்டாவது கட்டுரை இது….

அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்!

2012,  ஜூலை 4-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில், குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இருந்தபோது தனது இணையதளத்தில் எழுதிய  கட்டுரை இது...

ஆன்மிகமும் தேசியமும்

இந்தியாவின் அடையாளம் ஆன்மிகமே என்பார் சுவாமி விவேகானந்தர். அவரது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி எழுதும் மகரிஷி அரவிந்தர், இந்திய ஆன்மிகத்தின் புதிய ஒளியாக ராமகிருஷ்ணரை வர்ணிக்கிறார். அவரது அற்புதமான கட்டுரை, இங்கே இனிய தமிழில்…

வீரத் துறவி (கவிதை)

நாமக்கல் கவிஞர் திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை, மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் மரபுக் கவிதை உலகில் கோலோச்சியவர்; தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்; தமிழகத்தில் தேசியம் வளர்க்க பாடுபட்டவர். 1863-ஆம் ஆண்டு மகர சங்க்ராந்தி நன்னாளில் (அன்று ஆங்கிலத் தேதி: 1863, ஜன. 12) அவதரித்த சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் வகையில், அவரைப் பற்றிய நாமக்கல் கவிஞரின் கவிதை இங்கே வெளியாகிறது….

விவேகானந்தரை வணங்குவது இந்தியாவை வணங்குவதற்குச் சமம்!

திரு.ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்; முன்னாள் மத்திய கப்பல் துறை அமைச்சர். 26.9.2013 அன்று தஞ்சாவூரில் விவேகானந்த ரதத்தை வரவேற்று ஜி.கே.வாசன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் இது.

பாரதியும் பாரதிதாசனும் – 3 இ

பாரதியின் நாட்டுப் பற்று - நாட்டின் நலனைக் கவனியாதவர் மாட்டு அவர் கொண்ட அலட்சியம் - நாட்டுக்குத் தீங்கிழைப்பார்மாட்டு அவர் கொள்ளும் சீற்றம் - கடமை மறக்கும் ஆட்சியாளரை அவர் சாடுகின்ற திறம் ஆகிய அனைத்தும் சிறந்த கவிதை வடிவில் அமைந்திருப்பது பாஞ்சாலி சபதம்....

விவேகானந்தரின் குரல்

பத்திரிகையாளர்  திரு. டி.ஐ.அரவிந்தன்,  ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் 2014-இல் எழுதிய பதிவு, இங்கு மீள்பதிவாகிறது.

விழித்தெழும் பாரதமே! (கவிதை)

இது சுவாமி விவேகானந்தரே எழுதிய கவிதை. எழுத்தாளர் திரு. ஜடாயு இதனை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.இவர், பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; இலக்கிய ஆர்வலர்.

சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்

பேராசிரியர்  திரு. இரா. ஸ்ரீநிவாசன்  மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்; காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் புலத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை

வரலாற்றுத்துறை பேராசிரியரான திரு. இரா.குப்புசாமி, ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர். விவேகானந்தரின் 120- வது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவுதின விழா, 2013, செப். 11-ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில் ‘பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை’ என்ற தலைப்பில், ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் திரு. இரா.குப்புசாமி ஆற்றிய உரையின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

மகாவித்துவான் சரித்திரம் -2(12)

.... பிள்ளையவர்கள் தேவாரம், திருவாசகம், கல்லாடம், பெரிய புராணம், திருக்குறள், காஞ்சிப் புராணம், கம்ப ராமாயணம் என்பவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லி மாணாக்கர் மனத்தில் கருத்துக்கள் தெளிவாகப் பதியும்படி செய்வார். பெட்டி நிறையப் பணத்தை நிரப்பிவைத்துக் கொண்டிருக்கும் வண்மையாளன் தடையின்றி எடுத்து வாரி வாரி வழங்குவது போலத் தமது உள்ளக் களஞ்சியத்தில் பல நாட்களாகச் சேமித்து வைத்த பொருள்களை யெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்கு வழங்கி வரும்பொழுது, "இவ்வளவு நூல்களையும் இவர் எப்படி மனத்திற் பதித்து வைத்துக்கெண்டாரோ!" என்னும் ஆச்சரியம் அயலிலிருப்பவர்களுக்கு உண்டாகும். நடக்கும் புஸ்தகசாலையென்று இவரைக் கூறலாம்....

மீண்டும் அவதரித்து வாருங்கள் சுவாமி!

கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திருமதி. வெ.இன்சுவை. பல்வேறு இதழ்களில் கட்டுரை எழுதுகிறார். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இது...

இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்

தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் திருவண்ணாமலையில் 26.12.2014, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களின் 22-ஆவது மாநில மாநாட்டில் பேசியதன் சுருக்கம் இது:

அறிவியலின் பிதாமகரும் ஆன்மிக சூரியனும்

தற்கால தமிழ் ஆய்வாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத் தக்கவர். ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய இவரது ஆய்வுகளும் நூல்களும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. சுவாமி விவேகானந்தரையும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனையும் ஒப்பிட்டு இவர் எழுதிய கட்டுரை இங்கே...

பாரதியும் பாரதிதாசனும் – 3ஆ

வாழ்க்கையில் ஒருவன் சிறந்த குறிக்கோளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையான தொழிலில் ஈடுபட்டுத் தன் கடமையை நிறைவேற்று கின்றான். எத்தொழிலைச் செய்தாலும் அஃது இறைவன் பணியாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் அறியாதவர் அல்லர். இப்பேருண்மையைத் ’தேசமுத்துமாரி' என்ற பாடலில் 'யாதானும் தொழில் புரிவோம்; யாதும் அவள் தொழிலாம்’ என்று பேசுகிறார்.