பாஞ்சாலி சபதம் – 1.1.15

மகனின் நிர்பந்தம் காரணமாக சூதாட்டத்துக்கு ஒப்புக்கொண்ட மன்னர் திருதராஷ்டிரன், சூதாட்டம் நிகழ்வதற்கான அழகிய மண்டபத்தை நிர்மாணிக்குமாறு உத்தரவிடுகிறார். அதன்படி அழகிய சபா மண்டபம் நிர்மானிக்கப்படுகிறது. ‘பஞ்சவர் வேள்வியில் கண்டது போலே’ மண்டபம் நிர்மாணிக்குமாறு தொழில் விணைஞர்களிடம் மன்னர் கூறுகையில், அவரது மனமும் திரிபடையத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி....

மகாவித்துவான் சரித்திரம்- 2(6இ)

"உலகெலாம்" என்ற செய்யுளுக்கு அந்த உரையாசிரியர் எங்ஙனம் பொருள் செய்திருக்கிறாரென்பதை அறிவதற்கு அதனுரையைப் படிப்பித்து இவர் கேட்டார். அச்செய்யுளின் நயத்தை அவ்வுரை நன்கு புலப்படுத்தவில்லை. 'மலர் சிலம்படி' என்பதற்கு இலக்கணப் பிழையாக மலர் போன்ற சிலம்படியென்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதனை யறிந்து இவர் மனவருத்தமடைந்து, "மலர் சிலம்படி யென்றது வினைத்தொகை; அதற்கு மலர்ந்த சிலம்படி யென்பதுதான் பொருள். மலர்போன்ற சிலம்படியென்று பொருள் கொள்ள வேண்டுமானால், மலர்ச்சிலம்படி யென் றிருத்தல் வேண்டும். அப்படியிருத்தல் இங்கே பொருந்தாது" என்றார்; உலகெலாம் மலர் சிலம்படியென இயைக்க வேண்டுமென்றும் இப்பொருளுக்கு மேற்கோள் திருவாசகத்திலுள்ள, "தில்லை மூதூ ராடிய சேவடி, பல்லுயி ரெல்லாம் பயின்றன னாக" என்பதென்றும் எங்களுக்குச் சொன்னார்.

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்

பாரதியியல் ஆய்வாளர், அரவிந்த இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகங்களை உடையவர், பேராசிரியர் திருமதி பிரேமா நந்தகுமார் (83). ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். சுவாமி விவேகானந்தரை ஸ்ரீராமானுஜருடன் ஒப்பிடும் இவரது இனிய கட்டுரை இங்கே...

பாஞ்சாலி சபதம் – 1.1.14

அறிவுரை கேளாச் செவியனான தனது மைந்தனின் அடத்தைக் கண்டு வெறுத்துப்போன்ன மன்னர் திருதராஷ்டிரன், எதிர்காலத் தீமையை எண்ணி நானினாலும், வேறு வழியின்றி பாண்டவரை சூதுக்கு அழைக்க உடன்படுகிறார். இதனை விரித்துச் சொல்ல ஆர்வமின்றி, இரண்டே பாடல்களில் முடித்து விடுகிறார் மகாகவி பாரதி...

விவேகானந்தர் இன்றிருந்தால்…

திரு. இந்திரா பார்த்தசாரதி, பிரபல தமிழ் எழுத்தாளர்;  ‘குருதிப்புனல், ராமானுஜர், ஔரங்கசீப், ஏசுவின் தோழர்கள்’  உள்ளிட்ட 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; சரஸ்வதி சம்மான் சாஹித்ய அகாதெமி, பத்மஸ்ரீ விருதுகளைப்  பெற்றவர். சொந்த ஊர் கும்பகோணம். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே….

பாஞ்சாலி சபதம்- 1.1.13

தந்தையின் அறவுரை துரியனை மேலும் வெறிகொள்ளச் செய்கிறது. இளையவர் ஆற்றல் பெருகுவது பின்னாளில் தனது ஆட்சிக்கு இடையூறாகும் என்கிறான்; பாண்டவரின் மீது மதிப்புக் கொண்ட அமைச்சன் விதுரன் தனது தந்தையை தவறாக வழிநடத்துவதாக ஏசுகிறான்; எவ்வகையிலேனும் ஆட்சியை விரிவாக்குவதே மன்னவன் கடமை என்கிறான்; இறுதியில், தந்தை தனக்கு உடன்படாவிடில், தனது சிரமறுத்து அங்கேயே சாவேன் என்றும் மிரட்டுகிறான். இவை அனைத்தையும் இனிய பாடலாகத் தருகிறார் மகாகவி பாரதி....

துறவியர் மகிமை

அமரர் திரு. சாண்டில்யன் (1930- 1957), பிரபலமான தமிழ் எழுத்தாளர்; சரித்திரப் புதினங்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர். இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். பத்திரிகயாளர், விடுதலைப் போராட்ட வீரர், திரைப்பட வசனகர்த்தா எனப் பல பரிமாணங்களை உடையவர்; 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது சிறு கட்டுரை இங்கே...

பாஞ்சாலி சபதம் – 1.1.12

பாண்டவரை சூதுக்கு அழைக்கலாம் என்ற மகனின் சொற்கேட்டு திகைத்த திருதராஷ்டிரன், ‘இது சந்திரகுலத்தில் உதித்த உனக்கு உகந்ததல்ல’ என்கிறார். சதி செய்து வெல்லுதல் வீரமல்ல என்றும் அறிவுரை கூறுகிறார்- செவிடன் காதில் ஊதும் சங்கு போல.

சத்திய சோதனை – 5(16-20)

தோட்ட முதலாளிகளுக்கு எரிச்சலை உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆனால், கௌரவமாக நடந்துகொள்ளுவதன் மூலம் அவர்கள் மனத்தைக் கவர நான் விரும்பினேன். ஆகையால், எந்தத் தோட்ட முதலாளிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அவர்களுக்கு எழுதுவது, அவர்களைச் சந்தித்துப் பேசுவது என்று வைத்துக் கொண்டேன். தோட்டக்காரர்கள் சங்கத்தினரையும் சந்தித்தேன். விவசாயிகளின் குறைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு தோட்ட முதலாளிகளின் கருத்தையும் தெரிந்துகொண்டேன். இந்தத் தோட்ட முதலாளிகளில் சிலர் என்னை வெறுத்தார்கள்; சிலர் என்னை அலட்சியம் செய்தனர்; மற்றும் சிலரோ, என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.....

ஆரியரும் தமிழரும்: சுவாமி விவேகானந்தரின் சில குறிப்புகள்

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு மாபெரும் மாயை, ‘ஆரிய- திராவிட இனவாதம்’. இந்த மாபெரும் பொய் தொடங்கிய காலத்திலேயே இதன் அபாயத்தை உணர்ந்து எச்சரித்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர். இது தொடர்பாக பாரதி ஆய்வாளர் அமரர் திரு. பெ.சு.மணி அவர்களின் கட்டுரை இங்கே....

பாஞ்சாலி சபதம்- 1.1.11

‘சொந்த மகனை இகழ்ந்து பிறரது மகன்களைப் போற்றும் தந்தையர் உன்னைப் போல உலகில் யாருமில்லை” எறு தன தந்தையைத் தூற்றும் துரியன், சூதுக்கழைத்து பாண்டவரை வெல்ல விரும்புவதை வெளிப்படுத்துகிறான். மகாகவி இப்பாடலில் காட்டும் தர்க்க நயங்கள் கவனிக்கத் தக்கவை...

இசைவல்லுநர் விவேகானந்தர்

மறைந்த திரு. பெ.சு.மணி, தமிழின் மூத்த ஆய்வாளர்; பாரதியியல் எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம்- 1.1.10

திருதராஷ்டிரன் கூறிய அறிவுரைகளைக் கேட்டு வெகுண்ட அவரது புதல்வன், நல்லுரை கேளாச் செவியனாக, தனது சினம் கொண்ட வார்த்தைகளைக் கூறத் தொடங்குவதாக இப்பாடலை முடிக்கிறார் மகாகவி பாரதி.

இந்தியர்களுக்கு உயிர் இருக்கிறதா?

மறைந்த திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன், புகழ்பெற்ற பேச்சாளரும்  எழுத்தாளரும் ஆவார். ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கியவர். அகில இந்திய வானொலியில்  உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இஅவரது கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம்- 1.1.9

சகுனியின் தீய சொற்களைக் கேட்டு வெகுண்ட திருதராஷ்டிரன், அவனை கடுமொழி கூறி எச்சரிக்கிறார். தனது பிள்ளையை நாசம் செய்ய வந்த பேயென சகுனியை இகழ்கிறார் மன்னர். அவர் இயல்பில் நடுநிலை தவறாதவர் என்பதை இப்பாடல்களில் காட்டுகிறார் மகாகவி பாரதி.