தேவி வழிபாடு- 4

-திருநின்றவூர் ரவிகுமார்

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது நான்காம் நாள்…

4. கூஷ்மாண்டா

ஸுதா⁴ஸம்பூர்ணகலஶம்
ருதி⁴ராப்லுதமேவ ச ।
த³தா⁴னா ஹஸ்தபத்³யாப்⁴யாம்
கூஷ்மாண்டா³ ஶுப⁴தா³ஸ்து மே ॥  ..4..

கூஷ்மாண்டா நவதுர்க்கையில் நான்காம் வடிவம்

கு + ஊஷ்மா + அண்ட  = கூஷ்மாண்டா

இங்கே ‘கு’ = சிறிது, ‘ஊஷ்மா’ = வெப்பம், ஆற்றல், ‘அண்ட’ = பிரபஞ்சம்.

அதாவது, சிறிது வெப்பத்தால் பிரபஞ்சத்தைப் படைத்தவள் என்பதால் அவள்  ‘கூஷ்மாண்டா’ என்று அழைக்கப்படுகிறாள்.

பொருள்: முழுமையான இருளே இருந்த போது — அப்போது காலமே இல்லை, சத், அசத் எதுவும் இல்லை — அந்த நிலையில் தாயான கூஷ்மாண்டா, தனது ஸங்கல்பத்தால்  பிரபஞ்சத்தை மனத்திலிருந்து வெளிப்படுத்தினாள்.

அவளின் இருப்பிடம் சூரியலோகத்தின் உட்பகுதியில் உள்ளது. அங்கே வாழக் கூடியவள் அவளே; வேறு யாராலும் முடியாது. அவளின் உடலின் ஒளி சூரியனின் ஒளியைப் போல  ஒப்புயர்வில்லாதது. பத்து திசைகளும், அவளின் பிரகாசத்தால் ஒளிர்கின்றன. உலகில் எங்கெல்லாம் பிரகாசம் தெரிகிறதோ, அது அவளது ஒளியின் பிரதிபலிப்பே.

அவளுக்கு எட்டு கைகள் உள்ளதால் அவள் அஷ்டபுஜா என்றும் அழைக்கப்படுகிறாள். அவளது ஏழு கைகளில் — கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தக் கும்பம், சக்கரம், கதாயுதம் ஆகியன இருக்கின்றன. எட்டாவது கையில் அஷ்டசித்திகளையும், நவநிதிகளையும் தரக்கூடிய ஜபமாலை இருக்கிறது. அவளது வாகனம் சிங்கம். மேலும் கூஷ்மாண்டா என்றால்  ‘பூசணி’ என்றும் பொருள் வரும். பூசணிக்காயை அவள் மிகவும் விரும்புகிறாள்; அதனால் அவளுக்குப் பெயர் கூஷ்மாண்டா.

நவராத்திரியின் நான்காம் நாளில் கூஷ்மாண்டா தேவி வணங்கப்படுகிறாள்.

அன்றைய தினம், சாதகரின் மனம் அநாஹத சக்ரத்தில் நிலைபெறும். ஆகவே அந்த நாளில் அசைக்க முடியாத மனத்துடன் தாயை தியானித்து ஆராதிக்க வேண்டும்.

அவளது அர்ச்சனையால் பக்தர்கள் எல்லா நோய்களும், துன்பங்களும் விலகுவர். ஆயுள், புகழ், பலம், ஆரோக்கியம் ஆகியவை வளர்ச்சி அடையும். தாயான கூஷ்மாண்டாவை எளிதில் துதி செய்யலாம். மனம் ஊன்றி சரணாகதி அடைந்தால், அவளது பரமபதத்தை அடைவது உறுதி.

சாஸ்திரங்களில் கூறிய முறையில் அவளைக் கவனமாக வழிபட்டு உண்மையான பக்தராக நாம் வாழ வேண்டும். பின்னர் சாதகருக்கு அருளால் அற்புதமான அனுபவங்கள் உண்டாகும். இந்த துன்பமிக்க உலகமே அவருக்கு தெய்வீக உலகாகத் தோன்றும். அவளது ஆராதனையே உலக சமுத்திரத்தைத் தாண்டுவதற்கான எளிய, சிறந்த வழி. ஆகவே, பக்தர்கள் தங்கள் உலக வெற்றிக்கும், ஆன்மிக முன்னேற்றத்திற்கும் அவளை வழிபட வேண்டும்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply