தேவி வழிபாடு- 1

-திருநின்றவூர் ரவிகுமார்

நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது முதல்நாள்…

1. சைல புத்ரீ

வந்தே³ வாஞ்சி²தலாபா⁴ய 
சந்த்³ரார்த⁴க்ருʼதஶேக²ராம்
வ்ருʼஷாரூடா⁴ம்ʼ ஶூலத⁴ராம்ʼ 
ஶைலபுத்ரீ யஶஸ்வினீம் ..1..

பொருள்: அருமுனை நிலாவில் அழகுறும் நெற்றியுடன், காளையை ஏறி, கையில் குண்டிகை (குண்டிகை।கட்கா – வேல்) ஏந்தி, மகிமையுடன் விளங்கும் தாயாரான சைலபுத்ரிக்குப் பணிவுடன் நமஸ்காரம் செலுத்துகிறேன். அவள் விரும்பிய பலனை அளிப்பவள்.

துர்கையின் ஒன்பது வடிவங்களில் முதலாவதாக வணங்கப்படுபவள் சைலபுத்ரி. இமயமலை மன்னனான ஹிமவானிடம் அவதரித்ததால் இந்தப் பெயர் பெற்றாள். காளை மேல் அமர்ந்திருக்கும் அவள், வலது கையில் வேலையும், இடது கையில் தாமரையும் ஏந்தியவளாக விளங்குகிறாள். ஒன்பது துர்கைகளில் முதலாவதாக அவள் வணங்கப்படுகிறார்.

முந்தைய பிறவியில் அவள் தக்ஷன் எனும் பிரஜாபதியின் மகளாகப் பிறந்து ஸதி என அழைக்கப்படுகிறாள்

ஒருநாள் தக்ஷ பிரஜாபதி மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். அதற்கு எல்லா தேவர்களையும் அழைத்தார். அவர்களுக்கு ஹவிர்பாகங்களையும் அளித்தார். ஆனால் சதியின் கணவரான சிவபெருமான் மட்டும் அழைக்கப்படவில்லை.

தந்தை ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சி குறித்து சதி அறிந்ததும், யாகத்தைப் பார்க்க வேண்டும் என்ற தீவிரமாக ஆசைபட்டாள். தன் ஆசையை சிவபெருமானிடம் கூறி அனுமதி கேட்டாள். அப்பொழுது சிவபெருமான்: “தக்ஷன் என்னை துவேஷிக்கிறான். அவன் எல்லா தேவர்களையும் அழைத்தும், எனக்கு அழைப்புக் கொடுக்கவில்லை. அதனால் அழையாத விருந்தாளியாகச் செல்வது சரியில்லை என்று அறிவுறுத்தினார்.

ஆனால் ஸதி, அந்த அறிவுரையால் திருப்தி அடையவில்லை. தாயையும் சகோதரிகளையும் சந்திக்க வேண்டும் என்ற பேராசை குறையவில்லை. இறுதியில் சிவபெருமான் அவள் விருப்பத்தை ஏற்று அனுமதி அளித்தார்.

ஸதி மகிழ்ச்சியுடன் தயாராகிப் புறப்பட்டாள். ஆனால் அங்கு சென்றவுடன் அவளின் மகிழ்ச்சி அனைத்தும் நீர்க் குமிழி போல சிதறிப் போனது. தாய் தவிர வேறு யாரும் பாசம் காட்டவில்லை. சகோதரிகளின் வாக்குகளில் கிண்டலும், இகழ்ச்சியும் தெரிந்தது. தந்தை தக்ஷனும் சிவபெருமானைக் குறை கூறும் அவமதிப்பு நிறைந்த சொற்களைப் பயன்படுத்தினான்.

இதனைப் பார்த்த ஸதி தாங்காமல் மனதிலும், கோபத்திலும், தன்னிறக்கத்திலும் மூழ்கினாள். “என் கணவனை அவமதிப்பதை நான் சகிக்க முடியாது. இந்த உடல் தக்ஷனிடமிருந்து பெற்றதே” என்ற எண்ணம் தோன்றி வெறுப்பு மேலிடத் தன் யோகாக்னியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டாள்

இச்செய்தி சிவபெருமானுக்கு எட்டியதும், அவர் கோபமடைந்து, தன் மனையாளின் அவமதிப்புக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடிவு செய்தார். தன் மானஸிக புத்ரனான வீரபத்ரனை ஏவி தக்ஷயாகத்தை அழித்தார்.

ஸதி, ஹிமவானுக்கு மகளாகப் பிறந்தாள். இதனால் பார்வதி என்றும், நவதுர்கைகளில் சைலபுத்ரி என்றும் அழைக்கப்படுகிறாள். ஹைமவதி என்ற பெயரும் பெற்றாள். கேந உபநிஷதத்தில், ஹைமவதி வடிவில் அவள் சகல தேவர்களுக்கும் ப்ரஹ்ம ஞானம் போதித்த வரலாறு இடம் பெற்றுள்ளது.

நவதுர்கைகளில் முதலாவதும் முக்கியமானவளும் சைலபுத்ரி. அவளின் மகிமைகள் அளவற்றவை. நவராத்திரியின் முதல் நாளில் வணங்கப்படுவள். அந்நாளில் யோகிகள் தங்கள் மனதை மூலாதாரச் சக்ரத்தில் நிலைநிறுத்துகிறார்கள். அங்கு ஆன்மிக சாதனைகள் தொடங்குகிறது.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply