ஹிந்து ஹிருதய சாம்ராட்!

-கவிஞர் குழலேந்தி

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவரும், ஸ்ரீராமர் கோயில் இயக்கத்தின் தளபதியுமான அமரர் ஸ்ரீ அசோக் சிங்கால் அவர்களின் நூற்றாண்டு இது. அவரை நினைவுகூரும் கவிதை இது...

அசோக் சிங்கால்
(27.09.1926 – 17.11.2015)

செல்வந்தக் குடும்பம்…
உலோகவியல் படிப்பு…
அன்பான உறவுகள்…
வசதியான வாழ்க்கை…
அனைத்தையும் உதறினார்-
சங்கப் பிரசாரகர் ஆகிட!

சங்கத்தில் பல பொறுப்புகள்…
நிகரற்ற சாதனைகள்…
சமுதாய ஒருங்கிணைப்பில்
நீண்டது அவர் தவம்.
விஸ்வ ஹிந்து பரிஷத்
தலைவராக்கியது காலம்.
அதன்பிறகு அவருக்கு
நிற்க நேரமில்லை!

தமிழகத்தின் மீனாட்சிபுரத்தில்
நிகழ்ந்த மதமாற்றம்
அவரது மனதில் பதித்த வடு,
பட்டியலின சமூக மக்களின்
மேம்பாட்டுக்காக அவரை
ஓயாமல் உழைக்க வைத்தது.

அவர் கூட்டிய தர்ம சன்சாத்,
ராமர்கோயில் இயக்கத்தை
கட்டமைத்தது.
ராமர்கோயில் இயக்கம் தான்
இன்றைய தேசிய அரசியலை
கட்டமைத்திருக்கிறது.

ராமர்கோயிலுக்காக
பிரதமர் வாஜ்பாயுடன் மோதவும்
கரசேவகர் சிங்கால் தயங்கவில்லை.
அவரது ஒரே இலக்கு
ஹிந்துக்களின் சுயமரியாதை!

அயோத்தி கரசேவையில்
அவர் ரத்தம் சிந்தியபோது,
பிரமாண்டமான கோயிலுக்கு
அடிக்கல் நாட்டப்பட்டது.
அவரது மாபெரும் கனவு
பின்னாளில் நனவானது!

தீண்டாமையை ஒழிக்க,
தேசத்தை ஒருங்கிணைக்க…
ராமர்கோயில் அமைக்க…
ஆலயங்களை மீட்க…
அவரது வாழ்வே போராட்டக் களமானது.

தனக்கென வாழாப் பெருந்தகை…
தர்மம் காக்கும் ஈகை…
ஹிந்து தேசியத்தைக் கட்டமைத்த சிற்பி…
நூற்றாண்டுகள் கடந்து நிற்கும்
அவரது அர்ப்பண வாழ்வு!
நம்மை வழிநடத்தும் அவரது சிந்தனை!

  • நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர் – 2026

$$$

Leave a Reply