எது மெய்யான ஞானஸ்நானம்?

தஞ்சை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய, நமது தளத்தில் உள்ள ஐந்தாவது கட்டுரை இது....

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 9)

ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

ஆசார்யர் விவேகானந்தர்

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியான பூஜ்யஸ்ரீ சுவாமி புத்திதானந்தரின் அற்புதமான குருவந்தனக் கட்டுரை இது...

சிட்டுக்குருவி

1955-இல் க.நா.சு. எழுதிய சிறுகதை இது... கொல்லையில் குருவி கட்டிய கூடு ஒரு சிறுகதையை மட்டும் உருவாக்கவில்லை, உறவுகளிடையிலான பந்ததையும் போகிற போக்கில் வெளிப்படுத்தி இருக்கிறது...

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 8)

துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்கு பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.... மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா. ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது.

தேநீரும் விவேகானந்தரும்

தேநீரில் இத்தனை விஷயமா? ஒரு கோப்பை தேநீருக்காக நீதிமன்றம் சென்றாரா சுவாமி விவேகானந்தர்? படியுங்கள் இந்தக் கட்டுரையை... கூடவே ஒரு கோப்பை தேநீரும் சுவையுங்கள்!

காசில் கொற்றத்து ராமன்

தமிழ் இலக்கியத்தின் பொன்முடி கம்ப ராமாயணம். வால்மீகி ரமாயணத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் கம்பர் (பொ.யு. 1180- 1250) இயற்றிய ’ராமாவதாரம்’ தனது இலக்கிய வன்மையால் கம்ப ராமாயணம் என்று சிறப்புப் பெயர் பெற்றுவிட்டது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும், 10569 பாடல்களையும் கொண்ட அற்புதமான இலக்கியம் இது. இந்நூலில் தேர்ந்த திரு. ச.சண்முகநாதன் எழுதியுள்ள இனிய கட்டுரை இது...

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 7)

குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல... ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கொள்கை. இதுவே பகவத் கீதையின் நூற்பயன்.

அகமும் புறமும் – 3இ

நெய்தல் நிலக் கருப்பொருள் என்று கூறத்தக்கவை பனை, புன்னை முதலிய மரங்களும், நாரை, சுறா முதலிய பறவை விலங்குகளும், மீன் முதலிய உணவுகளும் ஆகும். இந்நிலத்தில் வாழும் மக்கள் ‘பரதவர்’ என்று குறிக்கப் படுவர். தலைவன் ‘துறைவன்’ என்றும் ‘சேர்ப்பன்’ என்றும் வழங்கப்படுவான். உரிப் பொருள் என்று கூறத்தக்கது, தலைவி தலைவனைப் பிரிந்து ஆற்றாமையால் அரற்றும் நிலைமைதான்....

விவேகானந்தர் கண்ட விவசாயம்

பூஜ்யஸ்ரீ சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. சென்னை- மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளராக இருந்தவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது…

பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 6)

கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேண வேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

மார்க்ஸின் சித்தாந்தமும் விவேகானந்தரின் வேதாந்தமும்!

பூஜ்யஸ்ரீ சுவாமி பஜனானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி; பேலூரில் உள்ள மடத்தின் தலைமையகத்தில் உள்ளார்.  ராமகிருஷ்ண இயக்கத்தின் மூத்த அறங்காவலர்களுள் ஒருவர்; ‘பிரபுத்த பாரத’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்; சிறந்த சிந்தனையாளர்; எழுத்தாளர்; பல நூல்களை எழுதி இருக்கிறார். அன்னாரது கட்டுரை இங்கே...