ஹிந்துக்களின் கூட்டம்    

ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்; ஜனத் தொகை குறையும் போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும் போதே தூங்குகிறார்கள்; அவர்கள் கண்ணிருந்தும் குருடர்.

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒரு கொள்கை என்பதென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்க வேண்டும்.

உழைப்பு

உழைப்பே உயர்வு தரும் என்று சொல்ல வந்த மகாகவி பாரதி, இந்தக் கட்டுரையின் இறுதியில் 4 வெண்பாக்களையும் இயற்றி வழங்கி இருக்கிறார். இவை பாரதியின் புதிய பாடல்களில் இடம் பெறுபவை.

காவடிச்சிந்து

மகாகவி பாரதியின் காலத்தில் காவடிச்சிந்து மிகவும் போற்றப்பட்டது. எட்டயபுரம் அரண்மனையில் பாரதி பணியில் இருந்தபோது காவடிச்சிந்து பாட முடியுமா? என்ற புலவர்கள் கேட்க, பாரதியும் காவடிச்சிந்து மெட்டில் பாடலொன்று பாடியுள்ளார். அப்பாடலின் ஒரு கண்ணி மட்டுமே கிடைத்துள்ளது. இதோ அப்பாடல்…

பிரெஞ்சு தேசீய கீதம்‌

மகாகவி பாரதி தமிழில் குழந்தைகளுக்காக மொழிபெயர்த்துக் கொடுத்த பிரெஞ்சு தேசிய கீதத்தின் சில வரிகள் இவை...

அமெரிக்கப் பெண்ணின் ஆங்கிலக் கவிதையை தமிழில் தந்த மகாகவி

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்ட மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற பெண்மணியின் ஆங்கிலக் கவிதையை ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதுவே மகாகவியின் கடைசிக் கவிதையாக இருக்கலாம் என்பது தான்....

என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

‘சக்கரவர்த்தினி’ 1906 பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த  ‘துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.

வெய்ய இடி

இந்தியா 27.09.1909 இதழில் வெளியான ‘ஞானரதம்’ கதையில் இடம் பெறும் காதலைப் பற்றிய கவிதை இது.

வந்திலரேல்…

11.09.1909 ‘இந்தியா’ இதழில், ‘வி.ஓ.சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ என்ற கட்டுரையின் துவக்கத்தில் காணப்படும் பாடல் இது. தலைப்பு, தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிப்பில் கண்டவண்ணம் தரப்பட்டுள்ளது.

சுதந்திரம்

1.11.1908ம் தேதி ‘இந்தியா’ பத்திரிகையில் தாம் எழுதிய ‘முதற்பிரயத்தனம்’ என்ற கட்டுரையின் இடையே ‘பைரன்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலை மொழிபெயர்த்துப் பாரதி அளித்துள்ளார்.அதுவே இக்கவிதை...

சந்திரிகை

சுதேசமித்திரன் இதழில் (1906) வெளியான மகாகவி பாரதியின் ஆரம்பக்காலக் கவிதைகளுள் ஒன்று இது...

யான்

முற்றுப் பெறாததாகக் காட்சியளிக்கும் இக்கவிதை, பாரதியின் கவிதைத் தொகுப்புகளில் காணப் பெறாதாது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை இது...

செட்டிமக்கள் குலவிளக்கு

செட்டிநாடு பகுதியில் உள்ள கானாடுகாத்தானில் வாழ்ந்த திரு. வை.சு.சண்முகன் செட்டியார், மகாகவி பாரதி மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவரதுஅழைப்பை ஏற்றுத்தான் காரைக்குடியில் செயல்பட்ட ஹிந்து மதாபிமான சங்கத்தாரின் நிகழ்ச்சியில் மகாகவி பாரதி பங்கேற்றார். அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ற காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. தன்னை ஆதரிக்க முன்வந்த திரு.வை.சு.ச.வின் வள்ளல் தன்மையால் மகிழ்ந்த மகாகவி பாரதி அவர்மீது பாடிய பாடல்கள் இவை. இக்கவிதை எப்படிக் கிடைத்தது, ஏன் பலரால் அறியப்படாமல் இருந்தது என்பன போன்ற விவரங்களை பேராசிரியரும் பாரதி அன்பருமான பேராசிரியர் திரு. கிருங்கை சேதுபதி ‘தினமணி’ நாளிதழ்க் கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறார். அக்கட்டுரை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது...

உயிர் பெற்ற தமிழர் பாட்டு

மகாகவி பாரதியின் புரட்சிகரமான கருத்துகள் மிகுந்த இப்பாடல், பெரும்பாலான பாரதியார் கவிதைகள் தொகுப்புகளில் காணப்படுவதில்லை. “நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்- இந்த நாட்டினில் இல்லை”, “உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்”, “சூத்திர னுக்கொரு நீதி- தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; சாத்திரம் சொல்லிடு மாயின்- அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”, “தோன்றி அழிவது வாழ்க்கை” - என்பது போன்ற அமரத்துவம் வாய்ந்த வைர வரிகள் மிகுந்த கவிதை இது...

தனிமை இரக்கம்

மதுரையிலிருந்து வெளியான ‘விவேகபாநு’ இதழில் 1904-இல் வெளிவந்த மகாகவி பாரதியின் ஆரம்பகாலக் கவிதை இது.