சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...
Tag: நீதித் துறை
திருப்பரங்குன்றம் தீபம்: இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சநாதனம் குறித்து உதயநிதி பேசியதுதான் ‘வெறுப்புப் பேச்சு’!
‘சநாதன தர்மம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசிய பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2026 ஜனவரி 21ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு வெறுப்புப் பேச்சு; இந்து மதத்தின் மீதான ஒரு தெளிவான தாக்குதல்; இதைப் பேசிய உதயநீதிமீது வழக்கு பதியாத காவல்துறை, இந்த விஷயத்தில், எதிர்வினையாற்றிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா மீது வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல என்று தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதிபதி பதவி நீக்கம் சாத்தியமா?
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவிநீக்கம் செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 107 பேர் அறிவிக்கை அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் அநீதியை நிலைநாட்டத் துடிக்கும் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர் என்பதால்தான் திரு. ஜி.ஆர்.எஸ்.ஸை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. இந்நிலையில் நீதிபதி பதவிநீக்கம் எளிதல்ல என்கிறார் எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச. 3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது
'சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது (நாள்: 20.11.2025); அதே சமயம், 'மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான ஓர் ஆவணத் தொகுப்பு….
பண்டத்தின் ருசியறியுமோ கிண்டும் அகப்பைகள்?
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். ஆனால், தன்னைத் தானே விளக்கிக்கொள்ள சட்டத்தில் நீதிபதிக்கு இடமில்லை என்பதாலும், தமிழகத்தில் தீண்டத் தகாத ஜாதியான பிராமணராக அவர் அடையாளப்படுத்தப்படுவதாலும், பொதுத்தளத்தில் அநியாயக் குரல்களே ஆரோகணிக்கின்றன. இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தருமன், கவிஞர் திரு. ரவி.சுப்பிரமணியன் ஆகியோரின் குரல்கள் தமிழர்களின் மனசாட்சியாக ஒலிக்கின்றன. இதோ கவிஞரின் அறச்சீற்றம் மிகுந்த எழுத்தோவியம்…
அதிகாரவர்க்கத்தின் பிடியில் நீதித்துறை?
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தருமன் அவர்களின் குரல் தனிக்குரலாக, அறத்தின் குரலாக ஒலிக்கிறது. இதோ அந்தக் குரல்…