அதன் பின், சீதை, தன் கசங்கிய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூளாமணியைக் கொடுத்து “எப்பொழுதெல்லாம் ராமனின் நினைவு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த சூளாமணியைப் பார்த்து ஆறுதல் அடைவேன். நீ என்னைப் பார்த்ததற்கான அடையாளமாக இதைக் கொண்டு செல்” என்று சொல்கிறாள்.
Author: vamumurali
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 3
பாரதி எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில், பாரதி விரும்பிய சுதேசிப் பள்ளியின் இலக்கணமும், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்களும், ஒரு தேர்ந்த கல்வியாளர் போல திட்டமிட்டு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உவக்கிறோம்.
ராமாயண சாரம் (19-20)
தன் உயிரைத் துச்சமென மதித்து கடல் கடந்து தனியனாக வந்து அரக்கர் மாளிகையின் உட்புகுந்து சீதையைத் தேடி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய அனுமனுக்கு கோவில் வைத்து கும்பிட்டு நன்றி சொல்வது நம் கடமை.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 2
திருவள்ளுவரையும் சுவாமி விவேகானந்தரையும் தனது ஆதர்ஷ நாயகர்களாகக் கருதியவர் மகாகவி பாரதி. இது, அவரது படைப்புகளில், சிந்தனைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பாரதியின் கல்விச் சிந்தனைகள் பலவும் வள்ளுவரும் விவேகானந்தரும் கூறியவையே. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட நாயகரான பாரதி, இக்கருத்துகளையே தனது பாணியில் முன்வைக்கிறார்.
ராமாயண சாரம் (17-18)
தன் மகன் அங்கதனை அழைத்து “ராமன் என்னை முடித்துவிட்டான் என்ற எண்ணம் எப்பொழுதும் உன் மனதில் எழக் கூடாது. நடந்தது தர்மத்தின் படியே நடந்திருக்கிறது. எனவே நீ “தருமம் நோக்கி, மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி” என்று அங்கதனிடம் சொல்லிவிட்டு “ராமா இவன் மற்று உன் கையடை ஆகும்” என்று ராமனிடம் ஒப்புவித்து விட்டு மேலுலகம் செல்கிறான் வாலி.
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 1
வைரத்தின் ஒவ்வொரு முகப்பும் ஒளியுடன் திகழ்வது போல, மகாகவி பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும் தேசநலனை மட்டுமே ஒளியாக உமிழ்கின்றன. அவற்றில் கல்விக்கு அவர் அளிக்கும் இன்றியமையாமையை மட்டும் இங்கு நாம் தொடராகத் தொகுத்துக் காணலாம்....
பொது சிவில் சட்டம் தேவைதானா?
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அது எவ்வாறு இந்துக்களில் ஒரு பிரிவினரின் திருமண முறை மற்றும் பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளில் காலம் காலமாக இருந்து வரும் மரபுகளை பாதிக்கும் என்பது குறித்தும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் விவரிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு. இந்து தமிழ் திசை டிஜிட்டல் இணைய இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை இது...
காவடிச்சிந்து
மகாகவி பாரதியின் காலத்தில் காவடிச்சிந்து மிகவும் போற்றப்பட்டது. எட்டயபுரம் அரண்மனையில் பாரதி பணியில் இருந்தபோது காவடிச்சிந்து பாட முடியுமா? என்ற புலவர்கள் கேட்க, பாரதியும் காவடிச்சிந்து மெட்டில் பாடலொன்று பாடியுள்ளார். அப்பாடலின் ஒரு கண்ணி மட்டுமே கிடைத்துள்ளது. இதோ அப்பாடல்…
‘A misconception is that the UCC will interfere with the Shariat’: Atif Rasheed
The BJP leader Atif Rasheed says people have made up opinions without actually understanding the depth of the Uniform Civil Code. It is an interview by Ismat Ara, published in FrontLine magazine...
ராமாயண சாரம் (15-16)
ராமன், ஜடாயுவுக்கு அந்திமக்கிரியை செய்துவிட்டு, “தந்தையை இழந்தேன். இப்பொழுது சீதையும் பிரிந்து விட்டாள்” என்று வருந்தி, நெஞ்சில் கோபக்கனலுடன கையில் வில்லுடனும் மனதில் அரக்கர் கூட்டத்தை அழிக்க வேண்டும் என்ற உறுதியுடனும் தெற்கு நோக்கி, ராவண சாம்ராஜ்யம் முடியப்போகும் என்பதற்கான முதல் அடியை ராமன் எடுத்து வைக்கிறான்.
நிறைசேர்க்கும் நன்முயற்சி
‘பொருள் புதிது’ தளத்தில் வெளியான மகாகவி பாரதியின் தராசு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு விஜயபாரதம் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் அளித்துள்ள அணிந்துரை இது...
பெண்களுக்கு சம நீதி கிடைக்க ‘பொது சிவில் சட்டம்’ அவசியம்
பொது சிவில் சட்டம் இல்லையென்றால் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் முன்னேற்றம் பெரிதும் தடைபடும் என்றும், சமநீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் அவசியம் என்றும், மதத்துக்கொரு சட்டம் இருந்தால் பெண்களுக்கு சமூக நீதி எப்போதும் எட்டாக்கனியாகி விடும் என்றும் தெரிவித்திருக்கிறார் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், வழக்கறிஞரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன். ‘இந்து தமிழ் திசை டிஜிட்டல்’ இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை இது…
ராமாயண சாரம் (13-14)
ராமன் இருக்குமிடம் வந்து சீதை முன் பொன் மானாகத் தோன்றுகிறான் மாரீசன். மானைக் கண்ணால் கண்டால் மனத்தால் விரும்பாதவர் யார்? அதுவும் இது கண்ணைக் கவரும் பொன் மான். இதுவரை ராமனிடம் எதுவும் கேட்காத சீதை அந்த மானைப் பிடித்துத் தருமாறு வேண்டுகிறாள்.
Uniform Civil Code: Another step towards making India a Hindu Rashtra?
The elusive quest for a UCC raises questions of cultural imposition in India’s diverse society... Its an article published in FrontLine magazine...
ராமாயண சாரம் (11-12)
மேலும் விளையாட்டாக சூர்ப்பணகை ‘எனக்கு மூக்கு இல்லையே இப்பொழுது. மூக்கில்லாத இவளுடன் எப்படி குடும்பம் நடத்துகிறான் என்று ஊர் பழிக்கும் என்று அஞ்சுகிறாயா, ராமா? யாரவது கேட்டால் சொல். இடையே இல்லாத சீதையுடன் இத்தனை நாள் குடும்பம் நடத்தினேனே. அப்படித்தானே இதுவும் என்று சொல் ராமா” என்று கொஞ்சி விளையாடப் பார்க்கிறாள். ரணகளத்திலும் அவளுக்கு கிளுகிளுப்பு.