1857-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வங்காளத்தைச் சேர்ந்த பாரக்பூரில் இந்திய சிப்பாய் மங்கள் பாண்டேயால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சித் தீ, அங்கிருந்து அம்பாலாவுக்கும், அங்கிருந்து தில்லிக்கும் பரவி, மீரட்டில் சிப்பாய்கள் ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்க, அந்த மாவீரர்கள் அங்கிருந்து தில்லிக்குச் சென்று அங்கு வெள்ளைக்காரர்களால் ஒதுக்கப்பட்டு செங்கோட்டையின் ஒரு ஓரமாக வசித்து வந்த கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவை இந்தியாவின் மன்னராகப் பிரகடனப்படுத்தினார்கள்....
Tag: ஸ்வதந்திர கர்ஜனை
ஸ்வதந்திர கர்ஜனை- 1(9)
இந்தியாவின் மானத்தைக் காக்க அயோத்தியின் ராணியான ஹஸ்ரத் மஹல் பேஹம் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் ஹஸ்ரத் மஹல் இங்கிலாந்தின் பிரகடனத்தை ஏற்க மறுத்தார். கிழக்கிந்திய கம்பெனியார் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் செய்துகொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும், பிரிட்டிஷ் அரசு அப்படியே தொடரும் என்றால், இந்த மாற்றம் எதற்காக?
ஸ்வதந்திர கர்ஜனை-1(8)
லக்னோ நகரம் முழுவதும் தேசபக்தர்கள் எல்லாவிடங்களிலும் பரவி நின்று கடுமையானதொரு போருக்கு ஆயத்தமானார்கள். ஆங்காங்கே எதிரிப் படைகள் சுலபமாக முன்னேற விடாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள்ளிருந்து துப்பாக்கியால் சுடுவதற்கு சுவர்களில் துவாரங்கள் போடப்பட்டு அங்கெல்லாம் சிப்பாய்கள் தயாராய் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள்....
ஸ்வதந்திர கர்ஜனை- 1(7)
தன்னிடம் பெரும் படையெதுவும் இல்லை, ஆயுதங்களும் சொல்லும்படியாக எதுவும் இல்லை, இருந்தும் அவரிடமிருந்த சாமர்த்தியமும் வீரமும் கைகொடுக்க, பிரிட்டிஷாருக்கு தாந்தியா தோபே சிம்ம சொப்பனமாக இருந்தார். தாந்தியா என்ன மந்திரம் செய்தாரோ தெரியாது, எதிரிகளான சுதேச மன்னர்கள்கூட இவரைக் கண்டதும் கேட்ட உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(6)
அரண்மனை வாயிலில் கூடியிருந்த மக்களை ராணி கடைசியாகச் சந்தித்தார். இருள் சூழ்ந்தது. ராணியை இனி பார்க்க முடியுமா என கண்ணீர் சிந்தினர் மக்கள். அப்போது ராணி வீர ராணுவ உடை அணிந்து, தன் வெள்ளைக் குதிரை மீதேறி அமர்ந்து இடையில் அவருடைய புகழ்பெற்ற வாள் அசைய, முதுகில் தனது சுவீகாரக் குமாரன் தாமோதரனைத் துணியால் இருகக் கட்டிவைத்துக் கொண்டு போர்க்களம் புகத் தயார் நிலையில் இருந்தார்.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(5)
தேனீக்களின் கூட்டம் போல சிப்பாய்கள் சுவரேறி உள்ளே குதித்து ஆயுதசாலையைக் கைப்பற்ற அங்கிருந்த ஆங்கில படையினருடன் போரிட்டனர். ஆயுதங்கள் இந்திய சிப்பாய்கள் வசம் போய்விட்டால் தங்கள் உயிர்களுக்கெல்லாம் ஆபத்து என நினைத்து வெள்ளையர்கள் அந்த ஆயுதசாலைக்குத் தீ வைத்துவிட்டனர். அது வெடித்து சிதறியதில் ஏராளமானோர் இந்திய சிப்பாய்கள் உட்பட பலரும் உடல் சிதறி இறந்தனர். ஆங்கில அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான வெள்ளையர்களும் அந்த தீயில் வெந்து மடிந்தனர்.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(4)
கடைசியில் வெள்ளைக்காரர்களுக்கு சுல்தான் செய்த மாபெரும் தவறு ஒன்று கண்ணில் பட்டது. அது, சுல்தான் தனது அயோத்தியை செழுமையாகவும், நல்ல வளத்தோடும் வைத்திருந்த குற்றம் தான். ஒரு இந்திய அரசன் இப்படிப்பட்ட வளம் பொருந்திய நாட்டை, நாம் இங்கு இருக்கும்போது ஆள்வதா? கூடாது. 1856-ஆம் வருஷம் டல்ஹவுசியின் ஒரு கட்டளை மூலம் நவாபின் நிர்வாகம் திருப்திகரமாக இல்லை என்று கூறி நாடு பிடுங்கிக் கொள்ளப்பட்டது.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(3)
பேஷ்வா பாஜிராவ் காலமானார் எனும் செய்தி கிடைத்த அடுத்த கணம் பேஷ்வாவுக்குக் கொடுக்கப்பட்ட் வந்த மானியமான ரூபாய் எட்டு லட்சமும் நிறுத்தப்பட்டுவிட்டது. அவருடைய சொத்துக்களுக்கு நானா சாஹேப் உரிமை கொண்டாட முடியாது என்று அனைத்தையும் கம்பெனியார் எடுத்துக் கொண்டுவிட்டனர். தன்னுடைய உரிமையை நிலைநாட்ட நானா பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியாருக்கு விரிவான மனு ஒன்றை எழுதி அனுப்பினார். அதில் அவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்துப் பட்டியலிட்டார்....
ஸ்வதந்திர கர்ஜனை- 1(2)
உடல்நிலை குணமடைந்த மங்கள் பாண்டே ராணுவ நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளியாகக் கொண்டுபோய் நிறுத்தப்பட்டார். அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவருடைய இந்த செயலுக்கு யார் தூண்டுதல், யார் யார் அவருக்குத் துணையாக இருந்தார்கள். யாருடைய வழிகாட்டுதலில் அவர் இப்படிச் செய்தார் என்றெல்லாம் கேட்டும், அவர் யார் பெயரையும் சொல்லவில்லை. தன்னால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆங்கில அதிகாரிகளிடம் தனக்குத் தனிப்பட்ட எந்த விரோதமும் கிடையாது என்றார். தான் பிறந்த நாட்டைக் காப்பாற்றவும், தங்கள் கலாச்சாரங்களுக்கு அவமரியாதை நேரிடுவதை எதிர்த்தும் தான் இந்தப் போரில் ஈடுபட்டதாகக் கூறினார்.....
ஸ்வதந்திர கர்ஜனை- 1(1)
அமரர் திரு. தஞ்சை.வெ.கோபாலன், திருவையாறில் ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி, மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தியவர்; தேசபக்தி மிளிரும் எழுத்தாளர். ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரியான இவர் நமது தேசமே தெய்வம் இணையதளத்தில் எழுதிய தொடர் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் ஆகிறது. இத்தொடர் நமது நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தங்கள் இன்னுயிரை ஆஹூதியாக்கிய மாவீரர்களின் சரித்திரத்தை சுருக்கமாக விவரிக்கிறது. இத்தொடர் வாரம் இரு முறை நமது தளத்தில் வெளியாகும்.