வ.மு.முரளிக்கு ஹரன் நினைவு விருது!

ஸ்ரீ டி.வி.யின் பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கும் விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி இது...

சுதந்திரம் காக்கும் கொங்குநாடு

இந்தக் கட்டுரையின் அடிநாதம், நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் எவ்வாறு ஒருங்கிணைந்த பாரத அன்னையின் விலங்கொடிக்க முன்னிலையில் நின்றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுவது தான். அது  மட்டுமல்ல, தமிழகத்தின்  ஓர் அங்கமான கொங்குநாடு அந்த மூவரையும் எவ்வாறு அரவணைத்தது என்பதை சுட்டிக்காட்டி, நாட்டின் மனக்குரலாக கொங்குநாடு திகழ்ந்திருப்பதை எடுத்துக் காட்டுவதும் நமது நோக்கம்.

வ.வே.சு.ஐயர்: நூல் அறிமுகம்

தான் வாழ்ந்த 44 ஆண்டுக் காலத்தில், புரட்சியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, கல்வியாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த இந்த மாமனிதரின் வீர வாழ்க்கையை நூலாசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதி இருக்கிறார். பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல் இது.

சூழல் போராளியான இயற்பியல் விஞ்ஞானி

வாழ்க்கைப் பாதையில் இரு கிளைகள் பிரியும் இடம் வரும்போது பலரும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பது இயற்கை. எந்தப் பாதையில் பயணிப்பது? அப்படிப்பட்ட நிலைகளில் ஆழ்மனம் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் ஆழ்மனம் நமது ஆசைகள், லட்சியங்கள், எண்ணங்களின் சங்கமத் திடல். இப்படிப்பட்ட நிலை இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஒருவருக்கு ஏற்பட்டது. அப்போது அவர் தேர்ந்தெடுத்த பாதை, சூழியலைக் காக்கும் போராட்டப் பாதை. அவர் தான், உலக அளவில் புகழ்பெற்ற இந்திய சூழலியல் போராளி வந்தனா சிவா.

இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…

பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் முன்னாள் ஆதீனகர்த்தர் தவத்திரு சாந்தலிங்க ராமாசமி அடிகளாரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் 2000ஆம் ஆண்டில் அளித்த நேர்காணல் இங்கு வெளியாகிறது....

குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்

மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

மாவீரன் பலிதானமான மண்ணில்….

ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....

லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்

அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரம், மக்களை நேசித்த தன்மை என பல அம்சங்களிலும் ராணி அஹில்யாபாயின் ஆட்சி  தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது.

தேசியம் காத்த தமிழர்

தமிழகத்தில் தேசியத்திற்கு எதிராக மொழிவாரி பிரிவினைக் குரல்கள் எழுந்தபோது, அதே மொழிப் பற்றை ஆதாரமாகக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டிற்குக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம். தமிழகத்தின் தற்போதைய பல பகுதிகள் நிலைத்திருக்கக் காரணமான ம.பொ.சி, பாரதத்தின் அங்கமே தமிழகம் என்பதை தனது ஆணித்தரமான பேச்சாற்றலாலும்,  எழுத்துக்களாலும், இலக்கிய அறிவாலும் நிரூபித்தவர்.

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான வாழ்க்கை.

இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 2

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது இரண்டாம் பகுதி…

பஹல்காம் தாக்குதல்: சில கண்டனப் பதிவுகள்- 2

காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான மேலும் சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

அண்ணலை அறியும் வழி!

சட்டமேதையும், அரசியல் சாசனச் சிற்பியுமான டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி, இக்கவிதை இங்கு வெளியாகிறது...

பிரதமரின் நாகபுரி விஜயமும் சில சிந்தனைகளும்…

யுகாதியன்று, பிரதமர் நரேந்திர மோடி நாகபுரி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்றது தொடர்பாக, முகநூலில் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி எழுதிய பதிவு இங்கு மீள்பதிவாகிறது....

ஈசனான எந்தை – 7

 பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-6 (இறுதிப் பகுதி)