-வ.மு.முரளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (தோற்றம்: 1897 ஜன. 23) விவேகானந்தரின்வீர உரைகளால்வார்க்கப்பட்டவன்.ஆன்மீகத்தில்ஆசை கொண்டுஅலைந்து கண்டவன்.ஆங்கிலேயரின்அடக்குமுறையால்அவமானப்பட்டவன்.ஐ.சி.எஸ்.சைஉதறியதாலேஅதிசயமான(ண)வன்.சும்மா வராதுசுதந்திரம் என்றுஉணர்ந்து சொன்னவன்.காங்கிரஸ் கட்சியின்காலித் தனங்களால்காயம் பட்டவன்.சிறைத் தண்டனையால்சித்திரவதையால்சிரமப் பட்டவன்.உடலே நொந்துஉறுத்தியபோதும்உறுதியானவன்.அன்னியர் கண்ணில்மண்ணைத் தூவிபறந்து போனவன்.ஹிட்லரை நேரில்குற்றம் கூறியகுறிஞ்சிப் பூவினன்.சுதந்திரத் தீவின்சுறுசுறுப்போடுகை கோர்த்தவன்.ஐ.என்.ஏ.வால்ஆங்கிலேயரைஅலற வைத்தவன்.எண்ணிய கனவைஎய்திடும் முன்னர்எரிந்து போனவன்.இன்றும் தேசியஇதயங்களிலேஇனிது வாழ்பவன். $$$
Tag: வ.மு.முரளி
பண்பாட்டின் அடிச்சுவடு ஏறுதழுவல்
தமிழ்ப் பண்பாட்டில் ‘ஏறு தழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு முதன்மையான இடமுண்டு. அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, நமது சமுதாயத்தின் வீரத்தையும், கால்நடைச் செல்வத்தின் சிறப்பையும் ஒருங்கே வலுப்படுத்துவதாகத் திகழ்கிறது.
தரணி மகிழ தைமகளே வருக!
அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.
மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…
தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
பாராட்டுக்குரிய புதிய வேலையுறுதி திட்டம்
நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
சீர்திருத்தங்களின் ஆண்டான 2025!
கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவைப் பொருத்த மட்டிலும் சீர்திருத்தங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சென்ற ஆண்டில் பல துறைகளில் சத்தமின்றி முக்கியமான சீர்திருத்தங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதன்மூலமாக, இந்தியப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் வலுவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
அவலச்சுமை
ஜனவரி 1-இல் தொடங்கும் ஆண்டு, நமக்கு புத்தாண்டல்ல. வரும் ஏப்ரல் 14 அன்று வரவுள்ள சித்திரை முதல் நாள் தான் நமக்குப் புத்தாண்டு. அதற்கு இன்னமும் 104 நாட்கள் இருக்கின்றன.
எது நமக்கு புத்தாண்டு?
ஜனவரி – 1 புத்தாண்டா? ‘நியூ இயரா?’ இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
நினைவுச் சார்பின்மை
இது ஓர் உருவகக் கவிதை... வெட்டுக்கத்திக்குக் காத்திருக்கும் கழுத்தா, அல்லது பட்டாக்கத்தியை முட்டித்தள்ளும் கொம்பா, யார் நீங்கள்?
உலகம் வியந்த கணிதப்புலி
அந்த இளைஞன் வாழ்ந்த காலம் 33 ஆண்டுகள். அதற்குள் அவன் நிகழ்த்திய கணித சாதனைகள் இன்னமும் பலருக்கு வியப்பூட்டும் நிகழ்வாகவே இருக்கின்றன. அந்த இளைஞன், தமிழகத்தின் தவப்புதல்வன் ஸ்ரீநிவாச ராமானுஜன்.
சவுக்கு சங்கர் கைது- அராஜகத்தின் உச்சம்!
சவுக்கு சங்கரின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவரது கொள்கை வேறு. ஆனால், அவரது கருத்து சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். ஒட்டுமொத்த ஊடகங்களும் மாநில அரசுக்கு ஜால்ராவாக மாறியுள்ள சூழலில், துணிவுடன் பல கருத்துக்களைக் கூறி வருகிறார் அவர்.
திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்...
புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்
கீழடி குறித்து அளவுக்கு அதிகமாகவே பேசப்பட்டுவிட்டது. ஆனால், மிகவும் பேசப்பட வேண்டிய, ஆனால் கவனம் பெறாமல் உள்ள ஒரு தொல்லியல் தலம் ‘கொடுமணல்’. அதுகுறித்த முக்கியமான கட்டுரை இது...
துணை ஜனாதிபதியின் திருப்பூர் விஜயம்: சில கேள்விகள், சில பதில்கள்
துணை ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல்முறையாக, சொந்த மண்ணான திருப்பூருக்கு நவ. 29இல் வருகை புரிந்தார் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு இனிய பாராட்டு விழா நடைபெற்றது. அது தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…
சமஸ்டோரி – 4
கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 4) இது….