பிரான்ஸ் நாட்டின் லட்சிய முழக்கம் - ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம். பிரெஞ்ச் இந்தியாவில் புகலிடம் தேடிச் சென்று, புதுவையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகையை (10.19.1908 – 17.05.1910) நடத்திய மகாகவி பாரதியை, பிரான்ஸ் தேசத்தின் பிரதானக் குறிக்கோளான ‘ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவை கவர்ந்ததில் வியப்பில்லை. இதுகுறித்து ‘இந்தியா’ பத்திரிகையின் மூன்று இதழ்களில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகள் இவை....
Tag: மகாகவி பாரதி
விளக்கு
‘சக்திதாஸன்’ என்ற பெயரில், சுதேசமித்திரன் இதழில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரை இது. கல்வி வளர்ச்சியே சமுதாயத்தின் வழிகாட்டும் விளக்கு என்று இக்கட்டுரையில் அறிவுறுத்துகிறார் பாரதி.
வெய்ய இடி
இந்தியா 27.09.1909 இதழில் வெளியான ‘ஞானரதம்’ கதையில் இடம் பெறும் காதலைப் பற்றிய கவிதை இது.
வந்திலரேல்…
11.09.1909 ‘இந்தியா’ இதழில், ‘வி.ஓ.சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ என்ற கட்டுரையின் துவக்கத்தில் காணப்படும் பாடல் இது. தலைப்பு, தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிப்பில் கண்டவண்ணம் தரப்பட்டுள்ளது.
சுதந்திரம்
1.11.1908ம் தேதி ‘இந்தியா’ பத்திரிகையில் தாம் எழுதிய ‘முதற்பிரயத்தனம்’ என்ற கட்டுரையின் இடையே ‘பைரன்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலை மொழிபெயர்த்துப் பாரதி அளித்துள்ளார்.அதுவே இக்கவிதை...
கிரேக்க தேசத்தின் ஸ்திதி
கிரேக்கத்தில் மன்னராக யார் இருப்பது என்பதை கிரேக்க மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்; இங்கிலாது உள்ளிட்ட நேசநாடுகள் அல்ல என்கிறார் மகாகவி பாரதி, இக்கட்டுரையில்....
ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம்
இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் இங்கிலாந்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசம். எனவே அந்நாட்டின் சுதந்திர முயற்சிகளையும், அவற்றை நசுக்கும் பிரிட்டீஷ் அரசையும் இக்கட்டுரையில் தோலுரிக்கிறார் மகாகவி பாரதி. “உலகமெங்கும் ஸமத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தீ ஓங்கிக் கொண்டிருக்கையில் ஒரு கூட்டத்தார் மற்றொரு பிரமாண்டமான லக்ஷக்கணக்கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸாத்யப்படும்?” என்ற கேள்வி அயர்லாந்துக்கு மட்டுமானதல்ல என்பதை மகாகவி பாரதியை அறிந்தோர் உணர்வார்கள்....
நாகரீகத்தின் ஊற்று
முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையிலிருந்து உலகத்திற்கு எத்தனை அரிய நலங்கள் செய்தபோதிலும் இப்போது நாம் சரியான நிலைமையி லில்லாதிருப்போமானால் நமதுபண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத்திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதூக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து ஸ்ரீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமாகிறது.
பாரஸீகத்துக்கு ஸெளக்ய காலம்
பாரசீகத்தில் இருந்து பிரிட்டீஷ் படைகள் வெளியேறுவதை நமது மக்களுக்குத் தெரியப்படுத்தும் மகாகவி பாரதி, இந்தியாவின் நிலை குறித்து சிந்திக்க வைக்கிறார்.....
துருக்கியின் நிலை
துருக்கிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை நெடிய வரலாறு கொண்டது. மகாகவி பாரதி தனது உலக அரசியல் ஞானத்தை இக்கட்டுரையில் (1920) வெளிப்படுத்துகிறார்....
சீனாவிலே பிரதிநிதியாட்சி முறைமை
சீனாவில் நிகழும் மாற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து அதுதொடர்பாக சுதேசமித்திரனில் கட்டுரை வரைகிறார் மகாகவி பாரதி. சீனாவின் சிறப்புகளைப் பட்டியலிடவும் அவர் தவறவில்லை. இவையெல்லாம் 1906 ஆம் ஆண்டுக்கால சீனா. இச்செய்தியைக் கூறுவதன்மூலம் இந்தியாவிலும் மாற்றம் நிக்ழும் என்பது தானே இதழாளரின் உள்ளக் கிடக்கையாக இருக்க முடியும்?
ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல்
ஜப்பானில் உள்ள மக்கள் பாரம்பரிய மதங்களைக் கைவிட்டு ‘கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்றார்கள்’ என்று மனம் வருந்தும் மகாகவி பாரதி, அந்நாட்டிற்கு, ‘ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல்வார்களானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்’ என்கிறார், இக்கட்டுரையில்...
பூகோள மஹா யுத்தம்
லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது, அந்தப் பத்திரிகை -மகாகவி பாரதியின் இதழியல் பார்வை எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது இக்கட்டுரை…
நேசக் கக்ஷியாரின் “மூட பக்தி’’
மகாகவி பாரதி உலகப் பத்திரிகைகள் பலவற்றை தினந்தோறும் வாசித்தவர். அவற்றில் உள்ள செய்திகளை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த தமிழாக்கி வழங்கியவர். கீழுள்ள செய்தி, அவ்வாறு சுதேசமித்திரனில் இதழாளர் பாரதி அளித்த செய்தி. ஐரோப்பியக் கண்டத்தில் நேசக்கட்சியாரின் ஆதிக்கத்தில் ஜெர்மனி நாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்த செய்தி இது. இச்செய்தியில் பாரதியின் உலக அரசியல் அறிவையும், அதிலும் இந்தியா தொடர்பான அவரது மன ஏக்கத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். “மனுஷ்ய ஸஹோதரத்வம், ஸமத்வம் இவை ஐர்லாந்துக்குண்டா, இல்லையா? அரபியாவுக்கும் மெஸ்பொடோமியாவுக்கும், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லை யெனில், ஏன் இல்லை?” என்ற கேள்வியில் ஜொலிக்கும் உரிமைக்குரல், மகாகவி பாரதிக்கே உரித்தான இதழாளனின் நெஞ்சக்கனல்.
அமிர்தம் தேடுதல்
“நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கின்றது. மகத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நான் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வர வேண்டும் ” - இதனைச் சொல்பவர் மகாகவி பாரதி. இதற்கான வழிமுறையையும் சொல்கிறார்...