மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில் ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும், முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில் 'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது.
Tag: பாரதி உரைநடை
தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்
தொழிலாளர் நலனில் மகாகவி பாரதிக்கு இருந்த அக்கறையை வெளிக்காட்டும் கட்டுரை இது... ‘சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் செய்யும் தொழிற்சங்கங்கள், ஆங்காங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும்’ என்கிறார் இந்ந்தக் கட்டுரையில்...
ஜாதிக் குழப்பம்
“ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்த்ரம், ஸமத்வம், ஸஹோதரத்வம் என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால், அது ஸாதாரண வேலையா?” மகாகவி பாரதியின் இதயப் பொருமலுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லையே?
ரிஷிகள் கடன்
இந்தியக் கல்வி முறையின் தொன்மை குறித்து எஸ்.கே.தத்தர் என்ற அறிஞர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையை சுதேசமித்திரனில் செய்தியாக்கி மகிழ்கிறார் மகாகவி பாரதி. எனினும் அவரது உரையில் உள்ள முரணையும் இறுதியில் சுட்டிக்காட்டுகிறார்...
ரங்கூன் ஸர்வகலா ஸங்க பஹிஷ்காரம்
பர்மாவில் பல்கலைக்கழகங்களை அதிகப்படுத்த வேண்டும்; அவை அனைவரும் பயிலக் கூடியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து, மாணவர்கள் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி மீது குற்றம் சாட்டுவது பயனற்றது என்கிறார் மகாகவி பாரதி. கூடவே பர்மாவையும் பம்பாய் மாகாணத்தையும் கல்விக்கூடங்கள் தொடர்பாக ஒப்பீடு செய்கிறார். “ஜெர்மனியிலும் ருஷியாவிலுந்தான் காலச் சக்கரம் சுழலுகிறதென்றும் பர்மாவில் சுழலவில்லையென்றும்” ஸர்க்கார் கருத வேண்டாம் என்று எச்சரிக்கவும் செய்கிறார்…
உலக நிலை
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து எகிப்துக்கு விடுதலை அளிப்பதாக அறிவித்த பிரிட்டீஷ் அரசு பின்வாங்கியதையும், அதற்கு பலிகடாவாக குடியேற்ற மந்திரி லார்டு மில்நர் பதவி விலகி இருப்பதையும் இச்செய்தியில் விளக்குகிறார் மகாகவி பாரதி. இந்தச் செய்தியை அடக்கி வாசிக்க முயலும் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்தையும் விளாசுகிறார்…
ஒரு கோடி ரூபாய்
நாட்டிற்கு சுதந்திரம் வேண்டுமென்றால் மக்கள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்று மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று இந்திய மக்கள் நிதியை காங்கிரஸ் கட்சிக்கு அள்ளி வழங்கினர். ஆனால், அந்தத் தொகையை காங்கிரஸ் என்ன செய்கிறது? என்று இச்செய்தியில் கேட்கிறார் மகாகவி பாரதி. “ஒப்பந்தத்தில் ஒரு பாதி நிறைவேறிப் போய்விட்டது. அதாவது ஜனங்கள் பக்கத்திலே விதிக்கப்பட்ட கடமை நிறைவேறிவிட்டது. இனித் தலைவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டியதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்கிறார்...
மஹாமகம்
மஹாமகம் தீர்த்தாடனம் குறித்து மகாகவி பாரதி எழுதிய அர்த்தப்பூர்வமான கட்டுரை இது. 1921 பிப்ரவரி 22-இல் நடைபெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழாவை ஒட்டி இக்கட்டுரையை மகாகவி சுதேசமித்திரனில் எழுதி இருக்கிறார். மஹாமகக் குளியலை கேலி பேசும் பிற மதத்தினருக்கு தகுந்த பதிலையும் இக்கட்டுரையில் தருகிறார் பாரதி...
அடங்கி நட
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகளை (பஞ்ச வியாசங்கள்), மகாகவி பாரதி தமிழில் வழங்கி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. வங்க பாஷையில் தாகூரால் எழுதப்பெற்று, அவரது சகோதரர் சுரேந்திரநாத் தாகூரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மாடர்ன் ரிவியூ’ பத்திரிகையில் வெளியான கட்டுரை (Modern Review – 1917 September - Thau Shalt Obey), பின்னர் மகாகவி பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தாகூரின் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், சுய பகடிகள் நிறைந்த, கவித்துவம் மிகுந்த நடையை, இயன்ற வரை அக்காலத் தமிழில் வழங்கி இருக்கிறார் பாரதி.
புதுமைகள் – 2
உலக நடப்புகளை ரசமான நடையில் வாசகர்களுக்கு தெரிவிக்க ‘புதுமைகள்’ என்ர தலைப்பிலெ சில துணுக்குப் பத்திகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.அவற்றில் மற்றொன்று இது...
புதுமைகள் – 1
உலக நடப்புகளை ரசமான நடையில் வாசகர்களுக்கு தெரிவிக்க ‘புதுமைகள்’ என்ற தலைப்பில் சில துணுக்குப் பத்திகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.அவற்றில் ஒன்று இது...
மணித் திரள்
“மயிலே, மயிலே, இறகு போடு” என்றால் போடாது. வற்புறுத்தி இறகைப் பிடுங்க வேண்டும். வெறும் வாய்ப் பேச்சால் இங்கிலாந்தினிடமிருந்து நீதி பெறுதல் ஸாத்யமில்லை - என்கிறார் காளிதாசன். சுதேசமித்திரனில் 1921-இல் வெளியான செய்தித் தொகுப்பில் ஒரு திவலை இது...
பட்டணத்துச் செய்திகள்
பத்திரிகையாளன், தான் காணும், கேட்கும் நிகழ்வுகள் எதையும் செய்தியாக்கும் திறமை கொண்டவனாக இருக்க வேண்டும். அதிலும் நாட்டிற்கு நலம் விளைவிக்க தனது கருத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் துணிவும் வாய்த்திருக்க வேண்டும். ‘மகாகவி பாரதி (காளிதாஸன் என்ற பெயரில்) அளித்த இச்செய்தி காட்டுவது இதைத் தானே?
குறிப்புகள்
சக்திதாஸன் என்ற பெயரில் சுதேசமித்திரனில் மகாகவி பாரதி எழுதிய வியாசம் இது. ஸம்ஸ்க்ருதம் குறித்த பாரதியின் கருத்து மிகத் தெளிவானது. அதுவே இந்தியாவுக்கான பொது பாஷை என்பது தான் மகாகவியின் கருத்து என்பதை இந்தப் பதிவில் காண்கிறோம்…
காலக் கண்ணாடி
“இந்தியாவிலுள்ள பத்திரிகைகள் ஐரோப்பிய, அமெரிக்கப் பத்திரிகைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள. விஸ்தாரமான செய்தி யெல்லை; ரஸமாகச் செல்லும் திறமை – இவற்றில் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளைக் காட்டிலும் மேற்றிசைப் பத்திரிகைகள் மிக உயர்ந்த நிலையிலிருக்கின்றன. அதிலும், இந்தியாவிலுள்ள தேசபாஷைப் பத்திரிகைகளின் நிலைமை சில அம்சங்களில் மிகவும் பரிதாபத்துக்கிடமாக இருக்கிறது” - மகாகவி பாரதி