பிகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரிவினைவாதச் சிந்தனையுடன் கூடிய கட்சிகளின் கூட்டணியான மகா கட்பந்தனுக்கு படுதோல்வியைப் பரிசளித்த பிகார் மக்கள், நல்லாட்சி நாயகன் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை வழங்கி, தங்கள் அறிவுத் திறனை நிரூபித்துள்ளனர்.
Tag: சேக்கிழான்
நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கும் மந்திரம் வந்தேமாதரம்!
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மந்திரச் சொல் இடம்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இன்றுடன் (2025 நவ. 7) 150 வயதாகிறது. இதனை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!
சுவாமிஜியும் நேதாஜியும்: நூல் அறிமுகம்
இந்திய வரலாற்றில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய இரு ஆளுமைகள் சுவாமி விவேகானந்தரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும். இவ்விருவருமே தங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கையால் இந்திய இளைஞர்களின் ஆதர்ஷமாக இன்றும் விளங்கி வருபவர்கள். இருவருமே கடல் கடந்து இந்தியாவின் பெருமிதத்தை நிலைநாட்டியவர்கள்; இருவருமே வங்காளிகள்; இருவருமே சமய நம்பிக்கை மிகுந்தவர்கள்; இருவருமே கலாச்சார தேசியத்தின் அடிப்படையில் பாரதம் ஒரே நாடு என்பதை மிகத் திண்ணமாக உறுதிப்படுத்தியவர்கள். இருவருமே மிக இளம் வயதிலேயே நம்மிடம் இருந்து விடைபெற்றுப் போனவர்கள். அதன் காரணமாகவே, இருவரும் -நிரந்தர இளைஞர்களாக – இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த வடிவமாக இன்றும் கருதப்பட்டு வருகிறார்கள்.
வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்
‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்
சென்னையில் 15.06.2025 அன்று நடந்த ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ குறித்த செய்தித் தொகுப்பு இது....
வெளியுறவிலும் சாகசம் படைக்கும் மோடி அரசு!
அண்டை நாடான பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவை மோடி அரசு பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பியது மாபெரும் ராஜதந்திர செயல்பாடாக மதிப்பிடப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் ‘வெற்றித்திலகம்’- ஆவணப்படம்
பகல்காம் படுகொலை நிகழ்த்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க நமது ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கை தான் 'ஆபரேஷன் சிந்தூர்'. நமது வீரர்களின் துல்லியத் தாக்குதலில், மூன்றே நாட்களில் பாகிஸ்தான் மண்டியிட்டது வரலாறு. அதுகுறித்த ஆவணப்படம் இது.... எழுத்தாக்கம்: சேக்கிழான். கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கம நிகழ்வில் இது வெளியிடப்பட்டது....
தேசியத்தின் உரத்த குரல்- கோவை படைப்பாளர்கள் சங்கமம்!
கோவையில் ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்டும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது. கோவையின் முன்னணி எழுத்தாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, பஹல்காம் படுகொலையிலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் பலியான நமது சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், தேசியத்தின் உரத்த குரலாக ஒலித்தது.
மக்களாட்சியில் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு?
தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், தனது எல்லையை மீறி செயல்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று (2025 மே 16) உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுப்பிய கடிதம் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ‘ஜனநாயக நாட்டில், மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கும் சட்டத்தைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் கடமை கொண்ட நீதித்துறை சட்ட நிறைவேற்றத்தை தானே கையில் எடுக்கலாமா?’ என்பதுதான் ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளின் அடிநாதம்.
இந்தியப் படையின் குங்கும திலகம்!
பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக, அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகமாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை அமைந்திருக்கிறது. மூன்று கட்டமாக நிகழ்த்தப்பட்ட இந்த பதிலடி நடவடிக்கை, ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீரப் பிரிவினைவாதிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 இந்திய சகோதரர்களின் பலிதானத்திற்கான மிகச் சரியான சமர்ப்பணமாக அமைந்தது.
நாவாய்- புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!
சுதந்திர வேள்வியில் தமிழகத்தின் ஆன்மாவாகச் சுடர்விட்ட தியாகதீபம் வ.உ.சி. அவர்கள். அவரைப் பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை (நாவாய்) தோழர் திரு. பார்கவன் சோழன் இயக்கி, உருவாக்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ‘பொருள் புதிது’ இணையதளத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அவரது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
காரிருள் அகன்று கிழக்கு வெளுக்கிறது!
தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப். 13-ஆம் தேதி மாலை நடைபெற்றது. சென்னை, நாரதகான சபாவின் சிற்றரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், உவேசா, பாரதி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன. அந்த விழாவின் செய்தித் தொகுப்பு இங்கே...
மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி! வக்பு சட்டம் திருத்தப்பட்டது!
வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேறியதை அடுத்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலமாக, வக்பு சொத்து என்ற பெயரில் நடந்துவந்த மோசடிகளுக்கு தற்போதைய மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கனலை விதைத்த சூரியன்
தேசியப் பேரியக்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்த ஆண்டு (2025) தனது நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதனையொட்டி, அதன் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் குறித்த கட்டுரை அவர் பிறந்த தினமான யுகாதி நன்னாளை (மார்ச் 30) முன்னிட்டு இங்கு வெளியாகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி
அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று. அதையொட்டி பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...