திரு. இல.கணேசன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

பாஜக மூத்த தலைவராக இருந்தவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான எல்.ஜி. என்கிற திரு. இல. கணேசன் அவர்கள் (80) இன்று (15.08.2025) மாலை சென்னையில் காலமானார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்....

அன்பைப் பொழிந்த ஆசிரியர்!

விஜயபாரதம் முன்னாள் ஆசிரியரும், ‘பொருள்புதிது’ இணையதளத்தின் தொடர்ந்த வாசகராக இருந்தவருமான அமரர் திரு. சுந்தர.ஜோதி அவர்கள் காலமாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. அவரைக் குறித்து, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி தனது தளத்தில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கு நினைவஞ்சலியாகப் பதிவாகிறது...

அடல்ஜி: பாரத ரத்னம்

அடல் பிகாரி வாஜ்பாய் சிறந்த பிரதமராக மட்டுமல்ல, எடுத்துக்காட்டான எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்றைய எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவரது மேன்மையும் இவர்களது கீழ்மையும் தெளிவாகத் தெரிகின்றன...

சுந்தர.ஜோதி: சில நினைவுகள்

அண்மையில் சென்னையில் காலமான ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகரும் ‘விஜயபாரதம்’ முன்னாள் ஆசிரியருமான திரு. சுந்தர.ஜோதி அவர்களுக்கு நினைவஞ்சலிக் கட்டுரை இது…

இது ஒரு தவம்

சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான, பதம பூஷண் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் 21.11.2023 அன்று காலமானார். அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி. இக்கட்டுரை, அவரது சீடரும் மருத்துவ சமூக சேவகருமான திரு. அ.போ.இருங்கோவேளால் எழுதப்பட்டது....

மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே!

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான அறுவைச் சிகிச்சையால் காலை இழந்து, உயிரையும் இழந்த, சென்னையைச் சார்ந்த இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு (17) நமது கண்ணீர் அஞ்சலி...

வில்லிசை வித்தகர் விண்ணில் கலந்தார்!

இனி அப்படி ஒருவரை நாம் காண்பதற்கில்லை. கத்தியை மிஞ்சும் புத்திக் கூர்மையும், கடவுளே நாணும் குழந்தைத் தூய்மையும் கலந்திருக்கும் ஒருவரை எங்கே காணப் போகிறோம்? அந்தத் தாமிரபரணி தந்த தங்கத் தமிழ்ச் சொற்கள் அலைபுரளும் லாகவத்தை எவரிடம் பார்க்கப் போகிறோம்? என்ன கவிதை! என்ன நகைச்சுவை! என்ன சரளம்! எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்தப் பேரன்பு!